வாசகர்கள் கருத்துகள் ( 1 )
மனுக்களா ? பெட்டியில் இருந்ததையும் சேர்த்து பழைய பேப்பர் காரருக்கு போட்டதிலேயே கணிசமாக காசு பார்த்துவிட்டோம் அடுத்த தேர்தல் வரப்போகிறது, காலிப்பெட்டியுடன் கிளம்பிவிடுவோம்
அ.தி.மு.க., மருத்துவ அணி மாநில இணை செயலர் டாக்டர் சரவணன்: தமிழகத்தில், 2023ம் ஆண்டில் வெறிநாய் கடித்து, 4.43 லட்சம் பேர்; 2024ம் ஆண்டில், 4.85 லட்சம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். 2024 -- 2025ம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில், வெறிநாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில், 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், அந்த நிதி என்ன ஆனது என்று தெரியவில்லை.டவுட் தனபாலு: பட்ஜெட்ல ஒதுக்குற நிதியை எல்லாம், அதுக்கே செலவழிச்சிடுவாங்கன்னு அப்பாவியா நம்புறாரே... எத்தனையோ திட்டங்களுக்கு, மத்திய அரசு வழங்கிய நிதியையே, மாநில அரசுகள் முறையா செலவழிக்காம, திருப்பி அனுப்பிய கதை எல்லாம் இவருக்கு தெரியாதோ என்ற, 'டவுட்' தான் வருது!அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி அறிக்கை: 'திண்ணையில் உட்கார்ந்து வெட்டிப்பேச்சு பேசுவது போல, வாய்க்கு வந்தபடி எதிர்க்கட்சி தலைவர் பேசலாமா...' என, முதல்வர் ஸ்டாலின் கேட்டுள்ளார். அவர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது, ஒவ்வொரு ஊரிலும், திண்ணையில் அமர்ந்து, 'போட்டோ ஷூட்' நடத்தியதையும், புகார் பெட்டி வைத்து நாடகமாடியதையும், மக்கள் இன்னும் மறக்கவில்லை.டவுட் தனபாலு: அதானே... ஊருக்கு ஊர் கிராம சபை கூட்டங்கள் நடத்தி வாங்கிய மனுக்கள் மற்றும், 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்'னு பெட்டி வைத்து வாங்கிய மனுக்களுக்கு எல்லாம் தீர்வு கண்டுட்டாங்களா என்ற, 'டவுட்'டுக்கு ஆட்சியாளர்களிடம் விடை இருக்குதா?காங்., கட்சியைச் சேர்ந்த, கர்நாடக முதல்வர் சித்தராமையா: கர்நாடகாவில் முதல்வர் மாற்றப்படுவதாக வதந்தி பரப்புகின்றனர். சுவிட்சர்லாந்து நாட்டின், டாவோஸ் நகரில் நடக்கவிருக்கும், உலகப் பொருளாதார மன்ற கூட்டத்தில் துணை முதல்வர் சிவகுமார் பங்கேற்கிறார் என்பதற்காக, அந்த கூட்டத்தை நான் புறக்கணிக்கவில்லை; கடந்த முறையும் நான் செல்லவில்லை. தற்போது பட்ஜெட் தயாரிப்பு பணிகள் உள்ளன.டவுட் தனபாலு: முதல்வர் வெளிநாட்டுக்கு போன நேரத்துல, மாநிலத்துல எதிரணியினர், முதல்வர் பதவியை கைப்பற்றிய பல சம்பவங்கள் நம்ம நாட்டுல நடந்திருக்கே... அரசியல்ல பழம் தின்று கொட்டை போட்ட நீங்க, அதை எல்லாம் மனசுல வச்சுட்டு தான், வெளிநாட்டு பயணங்களை தவிர்க்குறீங்க என்பது, 'டவுட்'டே இல்லாம தெரியுது!
மனுக்களா ? பெட்டியில் இருந்ததையும் சேர்த்து பழைய பேப்பர் காரருக்கு போட்டதிலேயே கணிசமாக காசு பார்த்துவிட்டோம் அடுத்த தேர்தல் வரப்போகிறது, காலிப்பெட்டியுடன் கிளம்பிவிடுவோம்