உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டவுட் தனபாலு / ‘டவுட்’ தனபாலு: அக். 11

‘டவுட்’ தனபாலு: அக். 11

தி.மு.க., முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா: ஆந்திர மாநிலத் தில் உள்ள குப்பம் மற்றும் ஸ்ரீகாகுளத்தில் பசுமை விமான நிலையங்கள் அமைக்க, விமான போக்குவரத்து அமைச்சகத்தால் இட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் குறைந்தது ஐந்து புதிய விமான நிலையங்களை அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. அதேசமயம், தமிழகத்தில் உள்ள த.வெ.க., அரசு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைக்கப்பட இருந்த, சென்னை யின் இரண்டாவது மிகப்பெரிய விமான நிலைய திட்டத்தின் எதிர் காலத்தையே தகர்த்து விட்டது. - டவுட் தனபாலு: ‘பரந்துாரில் விமான நிலையம் வரும்... அங்க நிலங்களின் மதிப்பு தாறுமாறா எகிறும்’னு நம்பி, பல நுாறு ஏக்கர் நிலங்களை வளைச்சு போட்டிருந்த தி.மு.க.,வினரின் எதிர்காலம் தான் தகர்ந்திருக்கே தவிர, இந்த முடிவால பொதுமக்களுக்கு ஏதாவது பிரச்னை இருக்குமா என்பது, ‘டவுட்’ தான்!  அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி: த.வெ.க., ஆட்சிக்கு வந்த கடந்த ஐந்து மாதங்களாக தமிழகத்தில் சட்டம்- – ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. ‘ஆட்சி மாறியதால் காட்சிகள் மாறும்’ என, நினைத்த தமிழக மக்கள் தலையில் இடியை இறக்கி உள்ளனர். ஆனால், மக்களை எப்படி எல்லாம் ஏமாற்றலாம்; த.வெ.க., மைனாரிட்டி ஆட்சியை எப்படி காப்பாற்றலாம் என்பதில் தான் முதல்வர் விஜயின் கவனம் இருக்கிறது. டவுட் தனபாலு: நீங்க அடிக்கடி, ‘ மைனாரிட்டி’ ஆட்சின்னு கிண்டல் பண்றதால தான், அதை, ‘மெஜாரிட்டி’ ஆட்சியாக மாற்ற த.வெ.க.,வினர் துடிக்கிறாங்க... இடைத்தேர்தலில் அவங்களுக்கு கிடைச்சிருக்கும் வெற்றி, உங்க கட்சியின் இன்னும் பல எம்.எல்.ஏ.,க்களுக்கு பச்சை கம்பளம் விரிக்கும் என்பதில், ‘டவுட்’டே இல்லை!  நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: சென்னை பட்டினப்பாக்கத்தில் 21.37 ஏக்கர் நிலத்தை, வணிக பயன்பாட்டு மண்டல மாக மாற்ற, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் ஒப்புதல் அளித்திருப்பது கண்டனத்திற்குரியது. பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் அமைக்க மீனவர்கள், அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால், நில பயன்பாடு மாற்ற நடவடிக்கைகளை த.வெ.க., அரசு எடுப்பது, மக்களின் உணர்வுக்கு மதிப்பளிக்காத ஆணவப் போக்கை காட்டுகிறது. டவுட் தனபாலு: தமிழக அரசுக்கு புதிய தலைமை செயலகம் வேண்டும் என்பதில் எந்த, ‘டவுட்’டும் இல்லை... அதேநேரம், நெரிசல் மிகுந்த, மீனவர்களின் வாழ்விடமான பட்டினப்பாக்கத்தில் தான் அதை கட்டணுமா என கேட்டால், ‘டவுட்’ இல்லாம, ‘வேண்டாம்’னு தான் சொல்லணும்! 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Anantharaman Srinivasan
அக் 11, 2026 15:32

தலைமைசெயலகத்தை பட்டினப்பாக்கத்தில் தான் கட்டணுமா என கேட்டால், 'டவுட்' இல்லாம, 'வேண்டாம்'னு தான் சொல்லணும் "அட இந்த ஒரு விஷயத்திலாவது" டவுட் தனபால் அரசுக்கு ஜால்ரா அடிக்காமல் பதிலுரைத்ததை வரவேற்போம்


Gopalakrishnan Sudhagar
அக் 11, 2026 12:39

என்ன தினமலர் நீங்களுமா


சமீபத்திய செய்தி