வாசகர்கள் கருத்துகள் ( 1 )
பதவி ஏற்ற 10வது நாளிலேயே வன்னியரசின் முதலாளி யார் என்பது மக்களுக்கு வெட்டவெளிச்சமாகிவிட்டது என்பதில் யாருக்கும் எந்த டவுட்டும் இல்லை.
மேலும் செய்திகள்
'டவுட்' தனபாலு
08-Sep-2026
வி.சி.க.,வைச் சேர்ந்த, தமிழக சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு: பா.ம.க.,வுக்கு பா.ஜ., தான் உரிமையாளராகச் செயல்படுகிறது. பா.ஜ., சொல்வதையே பா.ம.க., செய்யும் நிலை உள்ளது. எனவே, பா.ம.க., தங்கள், 'ஓனரான' பா.ஜ.,வை கேட்டுவிட்டு தான், த.வெ.க., கூட்டணியில் இணைவதா, வேண்டாமா என்று முடிவு செய்யும். டவுட் தனபாலு: அது சரி... தி.மு.க., கூட்டணியில் நீங்க இருந்தப்ப, உங்க கட்சித் தலைவர் திருமாவளவன் கூட, தி.மு.க., சொன்னதுக்கு எல்லாம் தஞ்சாவூர் பொம்மை மாதிரி தானே தலையாட்டிட்டு இருந்தாரு... அப்படியிருந்த நீங்க, பா.ம.க.,வை எந்த அடிப்படையில் குற்றஞ்சாட்டுறீங்க என்ற, 'டவுட்' எழுதே! lll புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி: தமிழகத்தில் கடந்த ஆண்டு ஜூலை - செப்., மாதங்களின் வரி வருவாயை ஒப்பிடுகையில், இந்தாண்டு ஜூலை, ஆக., மாதங்களில் 1 சதவீதம் குறைவு. செப்., மாதம் ஜி.எஸ்.டி., வருவாய் 5 சதவீதம் குறைந்துள்ளது. இப்படியே சென்றால், மிகப்பெரிய அளவுக்கு பணப்புழக்கம் குறைந்து, பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்படலாம். பலருக்கும் வேலைவாய்ப்பு பறிபோக வாய்ப்புள்ளது. வரி வருவாய் குறைந்து வருகிறது என்றாலே, பிற வருவாயும் குறையும். எனவே, எச்சரிக்கையுடன் இருப்போம். டவுட் தனபாலு: தமிழகம் மட்டுமா...? மேற்காசியா மற்றும் ரஷ்யா - உக்ரைன் போர்களால உலகம் முழுக்கவே பொருளாதாரம் பெரும் தள்ளாட்டத்தில் தான் இருக்கு... 2008ல் உலகம் முழுக்க கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டப்ப கூட, இந்தியாவுக்கு பெரிய அளவில் பாதிப்பு வரலை... மோடி தலைமையிலான மத்திய அரசு இந்த நெருக்கடியை திறமையா சமாளிக்கும் என்பதில், 'டவுட்'டே இல்லை! lll காங்., கட்சியைச் சேர்ந்த, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்: நாடு முழுதும் உண்மை நசுக்கப்பட்டு வருகிறது. அதை தடுக்க வேண்டியது என் பொறுப்பு. மக்கள் போராட்டங்களை ஒருங்கிணைக்கும் நோக்கில், 'சத்யாகிரகா' என்ற பிரத்யேக இணையதளம் தொடங்கப் படுகிறது. அரசுக்கு எதிரான போராட்டங்களையும், அநீதிக்கு எதிரான குரல்களையும் மக்கள் இத்தளத்தில் பதிவு செய்யலாம். டவுட் தனபாலு: அந்த இணையதளத்தில் மக்கள், தங்களது குரல்களை பதிவு செய்வாங்க... ஆனா, அதை எல்லாம் நீங்க படிச்சு பார்ப்பீங்களா...? பார்லிமென்டில் முக்கிய பிரச்னைகளில் விவாதங்கள் நடக்கிறப்பவே, சொல்லாம கொள்ளாம வெளிநாடுகளுக்கு, 'ஜாலி டூர்' கிளம்பிடுற நீங்க, மக்கள் குரலுக்கு என்னத்த மதிப்பளிக்கப் போறீங்க என்ற, 'டவுட்' தான் வருது! lll
பதவி ஏற்ற 10வது நாளிலேயே வன்னியரசின் முதலாளி யார் என்பது மக்களுக்கு வெட்டவெளிச்சமாகிவிட்டது என்பதில் யாருக்கும் எந்த டவுட்டும் இல்லை.
08-Sep-2026