உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டவுட் தனபாலு / ‘டவுட்’ தனபாலு: நவ. 12

‘டவுட்’ தனபாலு: நவ. 12

தமிழக முதல்வர் விஜய்: தி.மு.க., ஆட்சியில், நகராட்சி துறை ஊழல், ‘டாஸ்மாக்’ ஊழல், ஈ.வெ.ரா., நுாலக ஊழல் என ஒவ்வொரு துறையிலும் ஊழல் என மிகப்பெரிய ஊழல் உலகத்தையே உருவாக்கியது, அடுத்தடுத்து அம்பலமாகி வருகிறது. ஊழல் செய்வதையே வழக்கமாக கொண்டுள்ள தி.மு.க.,வை, தமிழகத்தின் வருங்கால தலைமுறை மன்னிக்கவே மன்னிக்காது. டவுட் தனபாலு: தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும், ஊழலில் ஊறி திளைத்து, ஆட்சியை பறிகொடுப்பதும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் மக்களும் அதை மறந்து, அவங்களிடம் மாறி மாறி, ஆட்சி பொறுப்பை ஒப்படைப்பதும் தான் கடந்த கால வரலாறுகளா இருந்துச்சு... அந்த சுழற்சியை நீங்க வந்து மாத்திட்டீங்க என்பதில், ‘டவுட்’டே இல்லை!  தி.மு.க., பொதுச்செயலர் துரைமுருகன்: வெளிநாட்டில் கல்வி பயின்ற என் பேத்தி, வேற்று ஜாதியை சேர்ந்த ஒருவரை காதலிப்பதாகவும், அவரையே திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும், -வைதீக முறைப்படி திருமணம் செய்து கொள்ள போவதாகவும், என்னிடம் தெரிவித்தார். என் பேத்தியின் வற்புறுத்தலால், வைதீக திருமணத்தை ஏற்க வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டு விட்டது. இந்நிகழ்வுக்கு, நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். டவுட் தனபாலு: நிஜமாகவே நீங்க பகுத்தறிவு கொள்கையில் பற்றுள்ளவராக இருந்திருந்தால், ‘வைதீக முறைப்படி நடத்தும் திருமணத்தில், நானும், என் தலைவர் ஸ்டாலினும் கலந்துக்க மாட்டோம்’னு அறிவிச்சிருக்கலாமே... அப்படி செய்திருந்தால், ‘ஈ.வெ.ரா.,வின் உண்மையான சீடர்’ என்ற பட்டத்தை தி.க., தலைவர் வீரமணியே உங்களுக்கு தந்திருப்பார் என்பதில், ‘டவுட்’டே இல்லை!  அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன்: பத்து மற்றும் பிளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்வுகளில், அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி யில், ‘லஞ்சம் ஊழல், அந்த சைடு எல்லாம் போய்விடாதீங்க; இந்த போதைப் பொருள், அந்த சைடு எல்லாம் போய் விடாதீங்க; கொண்டாட்டம் இருக்கும்; ஆனால் எந்த தவறுக்கும் அடிமையாகி விடாதீங்க’ என, முதல்வர் விஜய் பேசியிருப்பது, அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. போதைப் பொருட்களின் புழக்கத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டிய முதல்வர் விஜய், போதைப் பொருட்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பது போன்ற வார்த்தைகளை பயன் படுத்தியிருப்பது அபத்தமானது. டவுட் தனபாலு: ‘அந்த பக்கம் பாழும் கிணறு இருக்கு... அதுல போய் விழுந்துடாதீங்க’ன்னு அறிவுரை சொன்னா, அதை ஏத்துக்கணும்... அதை விட்டுட்டு, ‘பாழுங்கிணற்றை மூட நடவடிக்கை எடுக்காம, அறிவுரை மட்டும் சொல்றீங்களே’ன்னு கேள்வி கேட்கிறது குதர்க்கமானது என்பதில், ‘டவுட்’டே இல்லை! 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Lakshminarasimhan
நவ 12, 2026 09:37

மற்ற கட்சிகளின் ஊழலையும் தோலுரிக்குமா ?


S.V.Srinivasan
நவ 12, 2026 08:07

இதுக்கெல்லாம் வறுத்த படாதீங்க துரை முருகன் அவர்களே. பகுத்தறிவு மண்ணாங்கட்டியெல்லாம் தமிழ் நாட்டில் மலையேறிவிட்டது


கல்யாணராமன் மறைமலை நகர்
நவ 12, 2026 07:15

கருணாநிதி தொடங்கி தற்போது வரை பகுத்தறிவு, சனாதன எதிர்ப்பு என்பது தொண்டர்களுக்கும் மற்றவர்களுக்கும்தான். தலைமைக் குடும்பத்திற்கோ, கட்சி முன்னோடிகளுக்கோ கிடையாது. அவர்கள் கோவிலுக்குப் போகலாம், யாகம் செய்யலாம், வைதீக முறையில் திருமணம் செய்யலாம். அது அவர்கள் உரிமை. இதுதான் கண்ணதாசன் சொன்ன பகுத்தறிவை ஊருக்கு வைத்து பணத்தறிவை தனக்கு வைத்து என்பது.


புதிய வீடியோ