மேலும் செய்திகள்
‘டவுட்’ தனபாலு: நவ. 7
07-Nov-2026
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி: ‘கீழ்ப்படுகை மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல், மேல்படுகை மாநிலங்கள் எவ்வித கட்டுமான பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது’ என, உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்துள்ளது. ஆனாலும், தமிழகத்தின் ஒப்புதல் இன்றி, மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு முயற்சி செய்தது. ‘இதை தடுத்து நிறுத்த வேண்டும்’ என, அ.தி.மு.க., ஆட்சியில் பிரதமரிடம் கடிதம் வாயிலாகவும், நேரிலும் வலியுறுத்தினேன். டவுட் தனபாலு: தமிழகத்தில் உங்க ஆட்சி முடிஞ்சு, தி.மு.க., ஆட்சிக்கு வந்து, அவங்களும் வீட்டுக்கு போய் த.வெ.க., ஆட்சியும் வந்துடுச்சு... மத்திய பா.ஜ., கூட்டணியில் நீங்க இருந்தும், உங்க கடிதத்துக்கும், கோரிக்கைக்கும் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன் என்ற, ‘டவுட்’ உங்களுக்கு வரலையா? lll பத்திரிகை செய்தி: காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி தேர்தல் நடத்தப்படாததால், 84 வயதாகும் மல்லிகார்ஜுன கார்கேயே தேசிய தலைவராக தொடர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் மீது, கட்சியின் மூத்த தலைவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். டவுட் தனபாலு: அது சரி... வேற யாரை தலைவராக நியமிச்சாலும், கார்கே அளவுக்கு சோனியா குடும்பத்துக்கு விசுவாசமா இருப்பாங்களா என்பது, ‘டவுட்’ தான்... அதனாலயே, 84 வயதிலும் அவருக்கு அதிர்ஷ்டம் கூரையை பிய்ச்சிட்டு கொட்டுது என்பதிலும், ‘டவுட்’டே இல்லை! lll ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ: த.வெ.க., கூட்டணியில் உள்ள இரண்டு கட்சி களின் தலைவர்கள், தினமும் முதல்வர் விஜய் தலைமையிலான ஆட்சியை குறை சொல்கின்றனர்; அதில் மட்டுமே குறியாக உள்ளனர். அதுவும், அமைச்சரவையில் இடம் பெற்று விட்டு, ஆளுங்கட்சியை குறை சொல்கின்றனர். ஆனால், ஆளும் கூட்டணியில் இருக்கும் ம.தி.மு.க., – இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மட்டும் விமர்சிப்பதில்லை. டவுட் தனபாலு: ஆதரிச்சாலும் கண்மூடித்தனமா ஆதரிக்கிறது... எதிர்த்தாலும் கடுமையாக எதிர்க்கிறதுன்னு, எல்லா கட்சிகளும் உங்களை மாதிரியே இருக்கணும்னு எதிர்பார்ப்பது சரியா என்ற, ‘டவுட்’ வருதே... நீங்க இப்படி, ‘சரணாகதி’ அரசியல் பண்றதால தான், இன்று ஆளுங்கட்சி கூட்டணியில் இருந்தும், அமைச்சரவையில் அங்கம் வகிக்க முடியாத நிலையில் இருக்கீங்க என்பதிலும், ‘டவுட்’டே இல்லை! lll
07-Nov-2026