வாசகர்கள் கருத்துகள் ( 2 )
பூனை பாலை நக்கி தான் குடிக்கும்
சிங்கம் ஒன்று முயலானது போல, சிறுத்தை சிறுத்துப்போய் விட்டது
வி.சி., கட்சி தலைவர்திருமாவளவன்: மது ஒழிப்பு மாநாடு தொடர்பாக, பொதுவானஅழைப்பு விடுத்தோம்; தனிப்பட்ட முறையில் இதுவரை யாருக்கும் கடிதம் எழுதி அழைப்பு விடுக்கவில்லை. கட்சியில் உயர்நிலையில் உள்ள முன்னணி பொறுப்பாளர்களுடன் கலந்து பேசிய பின், கூட்டணி கட்சி நிர்வாகிகள், மகளிர் அணியினர் பங்கேற்க அழைப்பு விடுக்க உள்ளோம்.டவுட் தனபாலு: நல்லது... கங்கா, சந்திரமுகியா மாறியது மாதிரி, அக்., 2ல் நீங்க நடத்த இருக்கும் மது ஒழிப்பு மாநாடும்,தி.மு.க., கூட்டணி கட்சிகள் பங்கேற்கும் மற்றொரு அரசியல் மாநாடாகவே மாறிட்டு வருவது, 'டவுட்'டே இல்லாம தெரியுது!தி.மு.க., பொதுச்செயலர் துரைமுருகன்: இன்று நிறைய இளைஞர்கள், படித்தவர்கள்,தி.மு.க., பக்கம் திரும்பி உள்ளனர்; அவர்களை மனமாரவரவேற்கிறேன். கட்சியில்நிலைத்திருக்க வேண்டுமானால்,மன உறுதி வேண்டும். எங்களுக்குப் பின், இந்த கட்சியைநீங்கள்தான் கட்டிக்காக்க வேண்டும். எனவே, கொள்கை உறுதியோடு, மனதிடத்தோடுவாருங்கள். தியாகம், எந்த நிலைக்கும் தயார் என, நினைத்து வாருங்கள்.டவுட் தனபாலு: வாஸ்தவம் தான்... ரஜினி சொன்ன மாதிரி, கருணாநிதி கண்ணுலயே விரலை விட்டு ஆட்டிய உங்களைமாதிரி சீனியர்களை சமாளித்து, கட்சியில் நிலைச்சிருக்கணும் என்றால், அபாரமான மனதிடமும், தியாக உள்ளமும் இருக்கிறவங்கதான், உங்க கட்சிக்கு வர முடியும் என்பதில், 'டவுட்'டே இல்லை!பத்திரிகை செய்தி: விடுதலைசிறுத்தைகள் கட்சி நடத்தும் மது ஒழிப்பு மாநாடும், அக்கட்சி தலைவர் திருமாவளவன், அ.தி.மு.க.,வுக்கு அழைப்பு விடுத்த விவகாரமும், தி.மு.க., கூட்டணியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. திருமாவளவனை அழைத்துப் பேசி, இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்த முதல்வர் ஸ்டாலின், அதே சூட்டோடு கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் முதல் பொதுக்கூட்டத்தை வரும் 28ல் காஞ்சிபுரத்தில் நடத்துவதாக அறிவித்துள்ளார்.டவுட் தனபாலு: 'சட்டசபை தேர்தலுக்கு முழுசா ரெண்டு வருஷம் கூட இல்லை... கூட்டணிகட்சிகளை இப்படியே விட்டுட்டு இருந்தா சரிப்பட்டு வராது... அவங்களை நம்ம பிடிக்குள்ளயேவச்சிருக்கணும்' என்ற நினைப்பில், முதல்வர் இந்த முடிவை எடுத்திருப்பது, 'டவுட்'டேஇல்லாம தெரியுது!
பூனை பாலை நக்கி தான் குடிக்கும்
சிங்கம் ஒன்று முயலானது போல, சிறுத்தை சிறுத்துப்போய் விட்டது