வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இதே கூட்டத்துக்கு, முதல்வரின் மகன் இல்லாது வேறு ஒருவர் துணை முதல்வராக இருந்தால் இவ்விதம் தன்னிச்சையாகத் தலைமையேற்க அனுமதிக்கப்பட்டிருப்பாரா?
நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு: 'சென்னை மாநகராட்சி ஆலோசனைகூட்டத்தில், துணை முதல்வர் மட்டுமே பங்கேற்றார்; அமைச்சர்கள்ஏன் பங்கேற்கவில்லை?' என, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமிகேட்டிருக்கிறார். துாங்கிக்கொண்டிருந்த பழனிசாமியையாரோ எழுப்பி, 'தேர்தல் வரப்போகிறது; தினமும் அறிக்கைவிடுங்கள்' என்று சொல்லி இருக்கின்றனர். அதனால், இப்படிஅற்பமான காரணங்களை சொல்லிஅரசியல் செய்யும் நிலைக்கு, அவர் தள்ளப்பட்டுள்ளார்.டவுட் தனபாலு: பழனிசாமி ஆட்சியில் துணை முதல்வரா இருந்த பன்னீர்செல்வத்துக்கு, தனியாக ஆலோசனை கூட்டம் நடத்தும் அதிகாரத்தை அவர் தரலை... ஆனா, உதயநிதிக்கு வானளாவிய அதிகாரத்தை நீங்க தந்திருக்கிற பொறாமையில,உங்க ஆட்சிமேல குறைசொல்றாரோ என்ற, 'டவுட்'உங்களுக்கு வரலையா?பா.ஜ.,சுதன்ஷு திரிவேதி:காங்கிரசில் முதல்வர், துணை முதல்வர், கட்சியின் தேசிய தலைவர் என அனைவரும், நில அபகரிப்பில் ஈடுபடுகின்றனர்.நீதிமன்ற நடவடிக்கைகளை தவிர்ப்பதற்காக, நிலத்தை திருப்பித் தருவதாக, மல்லிகார்ஜுன கார்கே, கர்நாடக முதல்வர்சித்தராமையா அறிவித்துள்ளனர்.டவுட் தனபாலு: அதானே... தங்கள் மீது தவறு இல்லை என்றால், நீதிமன்றத்தில் வழக்கைசந்தித்து நிரபராதிகள்னு நிரூபிக்கலாமே... அதை விட்டுட்டு,நிலத்தை திருப்பி தந்ததில் இருந்தே, அவங்க மீதான புகார்கள்உண்மை தான் என்பது, 'டவுட்'டேஇல்லாம விளங்கிடுச்சே!தோட்டக்கலை துறை இயக்குனர்குமாரவேல் பாண்டியன்: சென்னை,தேனாம்பேட்டை கதீட்ரல் சாலையில்,'கருணாநிதி நுாற்றாண்டு பூங்கா' திறக்கப்பட்டு உள்ளது. 'சென்னை மற்றும் சுற்றுவட்டாரபகுதிகளில் பலத்த காற்றுடன்கனமழை பெய்யும்' என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துஉள்ளது. 'ரெட், ஆரஞ்ச்' எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு உள்ளது. எனவே, பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, 18ம் தேதி வரை பூங்கா செயல்படாது.டவுட் தனபாலு: இன்னும் 10 நாள் கூட விடுமுறை விடுங்க... மறுபடியும் திறக்கிறதுக்குள்ள, பூங்காவுல சரியாக செயல்படாதஉபகரணங்களை சரிபண்ணிடுங்க... பயணியர் அதுலஏறி அந்தரத்துல தொங்கிட்டு இருந்தா, அந்த பூங்கா யார் பெயர்ல இருக்கோ, அவருக்கு அதுபெருமை சேர்க்காது என்பதில், 'டவுட்'டே இல்லை!
இதே கூட்டத்துக்கு, முதல்வரின் மகன் இல்லாது வேறு ஒருவர் துணை முதல்வராக இருந்தால் இவ்விதம் தன்னிச்சையாகத் தலைமையேற்க அனுமதிக்கப்பட்டிருப்பாரா?