உள்ளூர் செய்திகள்

டவுட் தனபாலு

தமிழக வெற்றிக் கழக தலைவர்விஜய்: நமக்கு தேசிய அளவில்பா.ஜ., மாநில அளவில் தி.மு.க.,பொது எதிரிகள் என்பதை மாநாட்டில் விளக்கி விட்டோம். எனவே, மத்திய, மாநில அரசுகளின் குறைகளை சுட்டிக்காட்டுவோம். ரஜினி வாழ்த்து தெரிவித்தது மகிழ்ச்சி அளிக்கிறது.அவரது ரசிகர்களையும், நாம் அரவணைக்க வேண்டும்; சீமானைபொருட்படுத்த வேண்டாம். அரசியல் ரீதியாக அவரை யாரும் விமர்சிக்க வேண்டாம்.டவுட் தனபாலு: அது சரி... 'ஆகப்பெரும் கட்சிகளான பா.ஜ.,வும், தி.மு.க.,வும் தான் நம்ம எதிரிகள்... சீமான் போன்ற சின்ன கட்சிகளை விமர்சித்து, நம்ம சக்தியை வீணாக்க வேண்டாம்'னு முடிவு பண்ணிட்டீங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்: சேலத்தில் நகைக்கடை திறக்க வந்த நயன்தாராவுக்கு, 4 லட்சம்பேர் கூடினர். விஜயகாந்திற்கு மதுரையில் கூடாத கூட்டமா, விஜய்க்கு கூடி விட்டது? எனக்கு, 36 லட்சம் பேர் ஓட்டளித்துஉள்ளனர். அந்த 36 லட்சம் பேரும் என் கூட்டம். இதை என்னால் அடித்துக் கூற முடியும்.ஆனால், மாநாட்டுக்கு வந்தோர்எல்லாம் என் ஆதரவாளர்கள், ரசிகர்கள் என, விஜயால் கூற முடியுமா?டவுட் தனபாலு: விஜய்க்கு சவால் விடுவது இருக்கட்டும்... உங்க கூட்டத்துல, 36 லட்சம் பேர் இருக்காங்கன்னு சொல்றீங்களே...நீங்களும் ஒரு மாநாடு நடத்துங்க...அதுல, 36 லட்சம் பேர் கூட வேண்டாம்... அதுல, 10ல ஒரு பங்கு கூட்டமாவது திரண்டால்,'டவுட்'டே இல்லாம உங்க வாதத்தை ஏத்துக்கலாம்!ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவரும், அம்மாநில முதல்வருமான ஹேமந்த் சோரன்:ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு தேர்தல் பிரசாரத்திற்காக வந்துள்ளபிரதமர் மோடி மற்றும் மத்தியஅமைச்சர் அமித் ஷா ஆகியோரிடம் இரு கரம் கூப்பி கேட்கிறேன்... மாநிலத்தின்வளர்ச்சி பணிகளுக்கு தேவையான நிதியை வழங்கி உதவுங்கள்; எங்களால் நிர்வாகத்தை நடத்த முடியவில்லை. டவுட் தனபாலு: தமிழக அரசுக்கும்தான் மத்திய அரசு சரியாக நிதி தருவதில்லை... ஆனாலும், சமாளிக்கத்தானே செய்றாங்க... 'உங்களால நிர்வாகம்பண்ண முடியாட்டி, வீட்டுக்கு கிளம்புங்க... நாங்க பார்த்துக்கிறோம்'னு பா.ஜ.,வினர் பதிலடிதந்தா, என்ன பண்ணுவீங்க என்ற, 'டவுட்' வருதே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

M Ramachandran
நவ 05, 2024 19:58

ஜோசப் அவர்களே. சினிமாபோல வேக்ஷம் கட்டினாலும் மக்கள் நம்புவது கஷ்டம் அதனால் அப்படியென இந்துக்களும் எதிரிகள் என்று நேரிடையாய் தெரிவித்து விடுங்கள்


D.Ambujavalli
நவ 05, 2024 19:38

இன்று பிறந்த கட்சியுடன் சவால் விடும் சீமான் இதுவரை எத்தனை கூட்டம் கூட்டியிருக்கிறார் ?


Ahamed Rafiq
நவ 05, 2024 19:35

2026 தமிழக சட்டசபை தேர்தல் சமயத்தில் என்னால் என் முடிவுகளை கூற சந்தர்ப்பம் கிடைக்குமா என்று தெரியாது பொறுத்து இருந்து பார்ப்போம். நன்றி .அஹமட்


Ahamed Rafiq
நவ 05, 2024 19:27

விஜய் இறங்கி அடிக்க கூடாது இப்பொழுது ஏறிஅடிக்க வேண்டும். அஹமட்


angbu ganesh
நவ 05, 2024 15:57

எவ்ளோ அத்தப்பூ இருந்தா ரஜினி வாழ்த்து தெரிவித்தார்ன்னு அவருக்கு மரியாதை இல்லாமே சொல்லுவான்


வீரபாண்டி,அலங்காநல்லூர்
நவ 05, 2024 09:31

நாதக கட்சி ஆரம்பிச்சு பல வருஷமாச்சு பல தேர்தல்களிலும் போட்டி போட்டாச்சு ஆனா ஒரு வார்டு கவுன்சிலரா கூட ஜெயிக்க துப்பு இல்ல ஆனா சீமானுக்கு வாய் மட்டும் காது வரை நீளும்...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை