உள்ளூர் செய்திகள்

டவுட் தனபாலு

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: 'ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட நிதி சார்ந்த கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாது' என, முதல்வர்ஸ்டாலின் கைவிரித்து விட்டதாகவெளியான செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. தி.மு.க., அரசின் தொழிலாளர் விரோத செயல்பாடுகளுக்கு பழி தீர்க்கும் வகையில், 2026 சட்டசபை தேர்தலில், அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் சரியான பாடம் புகட்டுவர்.டவுட் தனபாலு: அரசு ஊழியர்கள் பாடம் புகட்டினாலும்,தி.மு.க.,வுக்கு மாற்றாக, அவங்ககோரிக்கையை செயல்படுத்த வாய்ப்புள்ள அ.தி.மு.க.,வை தான்கோட்டைக்கு அனுப்புவாங்களே தவிர, அன்புமணி தலைமையிலபா.ம.க.,வுக்கு வாய்ப்பு வழங்குவது, 'டவுட்'தான்!தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் தலைவர் தமிழ்ச்செல்வி: ஆட்சியில் வைத்து அழகு பார்த்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் உரிமைகளை பறித்தது தான், தி.மு.க., அரசின்மூன்றாண்டு கால சாதனையாகஉள்ளது. எதிர்க்கட்சி தலைவராகஇருந்தால் மட்டுமே அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை முதல்வர் ஸ்டாலின் சந்தித்து பேசுவார் எனில், அவர் விரும்பும்எதிர்க்கட்சி தலைவர் பதவியை,2026ல் பரிசளிக்க தயாராக இருக்கிறோம்.டவுட் தனபாலு: கடந்த 1971ம் ஆண்டு தவிர, அடுத்தடுத்த தேர்தல்களில் ஜெயித்து, ஆட்சியை தக்கவச்சுக்கிட்ட வரலாறு தி.மு.க.,வுக்கு கிடையவே கிடையாது... அந்த வகையில், 2026ல் நம்ம ஆட்சி அமையாதுன்னு உறுதியா தெரிஞ்சுக்கிட்டு தான், உங்க கோரிக்கைகளை தி.மு.க., அரசு கண்டுக்காம இருக்குதோ என்ற, 'டவுட்'தான் வருது!வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன்: வி.சி.,க்கள் சார்பில் கள்ளக்குறிச்சியில் மது ஒழிப்பு மாநாடு நடத்தப்பட்டது; அதில், 2 லட்சம் பெண்கள் பங்கேற்றனர். ஆனால், அதைஎல்லாம் யாரும் வியந்து பேசவில்லை; பெயருக்குக் கூட விவாதிக்கவில்லை. வந்திருந்தகூட்டத்தைப் பார்த்து, 'இனி திருமாவளவன் தலைமையில்தான் தமிழகத்தில் ஆட்சி அமையும்'என, யாரும் விவாத பொருளாக்கவில்லை. எல்லாரும்வி.சி.,க்களை குறைத்து மதிப்பிட்டு, சிறுமைப்படுத்த பார்க்கின்றனர்.டவுட் தனபாலு: உங்க கட்சிக்குசெல்வாக்கு இருக்கிற கள்ளக்குறிச்சியில் மாநாடு நடத்தி, 2 லட்சம் பேரை திரட்டியது பெரிய விஷயமில்லை... கன்னியாகுமரி யிலோ, திருநெல்வேலியிலோமாநாடு நடத்தி, இந்த கூட்டத்தை காட்டியிருந்தா, 'டவுட்'டேஇல்லாம தங்களை பாராட்டலாம்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
நவ 12, 2024 17:34

ஆசிரியர்களும், அரசுı ஊழியர்களும் தேர்தல் வாக்குறுதியைப் பிடித்து இன்னும் தொங்கிக்கொண்டிருக்கிறார்களே இவ்வளவு அப்பாவிகள் தேடினாலும் கிடைக்க மாட்டார்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை