உள்ளூர் செய்திகள்

டவுட் தனபாலு

தமிழக முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம்: டாக்டர்கள் மற்றும் மருத்துவ பணியாளர் காலியிடங்களை, உடனுக்குடன் நிரப்புவது அவசியம். ஆனால், கூடுதல் நிதிச்சுமை ஏற்படும் என்பதற்காக, நீதிமன்ற வழக்குகளை காண்பித்து, பணியிடங்களை நிரப்ப இயலவில்லை என,சாக்குபோக்கு கூறும் ஆட்சியாக தி.மு.க., ஆட்சி உள்ளது.டவுட் தனபாலு: தமிழக நிதிஅமைச்சர் பதவியை வகித்தவர்நீங்க... மாநில அரசுக்கு இருக்கிற நிதி நெருக்கடி பற்றிஉங்களுக்கு நல்லாவே தெரியும்...அதனால, நீங்க கூட்டணி வச்சிருக்கிற மத்திய பா.ஜ., அரசிடம் பேசி, மாநிலத்துக்கு கூடுதல் நிதியை வாங்கித் தந்துட்டு, குற்றம்சாட்டினா, 'டவுட்'டேஇல்லாம உங்களை பாராட்டலாம்.நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்சீமான்: கூட்டணி என்பது தற்கொலைக்கு சமமானது. அதனால்தான், தொடர்ந்து தனித்தே போட்டியிடுகிறேன். இனியும், நாம் தமிழர் கட்சி தனித்துதான் போட்டியிடும். மற்றவர்களுக்காக கொள்கையைவிட்டுக் கொடுத்து, யாரிடமும்கூட்டணி சேர வேண்டிய அவசியம் இல்லை. மக்களோடு மட்டும்தான் எங்கள் கூட்டணி. மக்களை மட்டும்தான் நாங்கள் நம்புகிறோம்.டவுட் தனபாலு: 'மக்களோடும்,தெய்வத்தோடும் மட்டும்தான் கூட்டணி' என, விஜயகாந்தும் சொன்னாரு... ஆனா, கடைசியிலகூட்டணி வச்ச பிறகுதான், எதிர்க்கட்சி தலைவர் பதவி வரைக்கும் உயர்ந்தார்... நீங்களும்தனித்துப் போட்டி என்ற பாதையில்பயணித்தால், சட்டசபை வாசலையாவது தொட முடியுமா என்பது, 'டவுட்'தான்!அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி: 'எதிர்க்கட்சி தலைவர்பழனிசாமி என்னை பற்றி விமர்சனம் செய்கிறார்' என, தொண்டர்களுக்கு கடிதம் எழுதிஇருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.அதில், என்னை தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்துஇருக்கிறார். ஒரு எதிர்க்கட்சி தலைவரைப் பார்த்து, 'ஊர்ந்து சென்றார்; தவழ்ந்து சென்றார்; கரப்பான் பூச்சி போல பறந்து சென்றார்' என்றெல்லாம் பேசுகிறார். தன்னை மறந்து, தன் பதவியை மறந்து பேசுகிறார் ஸ்டாலின். டவுட் தனபாலு: அரசியல்ல, விமர்சனங்கள் நாகரிகமா இருக்கணும் என்பது உண்மைதான்... ஆனா, 'என்னைப் பார்த்துஊர்ந்து சென்றார், தவழ்ந்து சென்றார்னு ஸ்டாலின் சொல்வதைநிரூபிக்க முடியுமா?' என, நீங்க பதில் சவால் விடாமல் இருப்பதுஏன் என்ற, 'டவுட்' வருதே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

D.Ambujavalli
நவ 15, 2024 17:44

மத்திய நிதி வரவில்லையென்று பாமரனை வேண்டுமானால் ஏமாற்றலாம் பெண்கள் உரிமைத்தொகை தகுதி என்ற condition ஐ வரும் தேர்தலுக்காக நீக்கியாச்சு கடன் சுமையை இவர்கள் ஏறிக்கொண்டே போவார்களாம் மத்திய அரசு கொடுத்துக்கொண்டே இருக்கணுமாம்


sankar
நவ 15, 2024 15:32

"மத்திய பா.ஜ., அரசிடம் பேசி, மாநிலத்துக்கு கூடுதல் நிதியை"- இவுங்க ஊதாரித்தனமா செலவு பண்ணுவாங்க - நிதியை அவுங்க கொடுக்கணுமா - நல்ல நியாயம் சார்


Gopalasamy.k
நவ 15, 2024 15:18

பன்னீர் அய்யாவிடம் ஒத்துழைப்பு கேட்பது இருக்கட்டும்.பல லட்சம் கோடி கடனை ஏற்றி என்ன பாதிக்கப்பட்டுள்ளது? அப்பா பெயர்சூட்டியே பாதி கஜானா காலி.எந்த மந்திரி வறுமைக்கோட்டுக்கு கிழே?அனைத்து MLA க்களின் சம்பளம், இதர படிகள் கணக்கிட்டால் ஒவ்வொரு மாதமும் ஒரு துறையை மேன்மையடையச் செய்யமுடியும்.மக்கள் தொண்டன் என நடிக்கக்கூடாது.


N Sasikumar Yadhav
நவ 15, 2024 11:26

மத்தியரசு கொடுக்கிற நிதியை ஓட்டுப்பிச்சைக்காக திருட்டு திராவிட மாடல் அரசு இலவசத்துக்கு செலவிட்டால் என்ன செய்ய முடியும்


Dharmavaan
நவ 15, 2024 08:54

கேவலமான ஆலோசனை இது பன்னீருக்கு ..மத்திய அரசு உதவா வேண்டுமா வீண் இலவசங்களை நீக்கி ஊழலையும் நிறுத்தினால் மருத்துவத்துக்கு உதவுமே ஏன் திருட்டு திமுக செய்யவில்லை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை