உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டவுட் தனபாலு / ‘டவுட்’ தனபாலு: அக். 27

‘டவுட்’ தனபாலு: அக். 27

காங்கிரசைச் சேர்ந்த, தமிழக சுற்றுலா துறை அமைச்சர் ராஜேஷ்குமார்: தமிழகத்தில் எங்கள் கட்சிக்கு இரண்டு அமைச்சர்கள் கிடைத்து விட்டதால் நாங்கள் திருப்தியடையவில்லை. ஒவ்வொரு, 10 ஓட்டுச்சாவடிகளுக்கும் ஒரு தலைவர் என்ற அடிப்படையில், காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தி வருகிறோம். தமிழகத்தில் காமராஜர் ஆட்சி அமைப்பதே எங்களது கனவு. தமிழக வெற்றிக் கழகத்துக்கும், காங்கிரசுக்கும் இடையே எந்த கருத்து மோதலும், சலசலப்பும் இல்லை. டவுட் தனபாலு: ‘காமராஜர் – எம்.ஜி.ஆர்., ஆட்சியை முதல்வர் விஜய் வழங்கிட்டு இருக்கார்’னு, த.வெ.க.,வினர் தம்பட்டம் அடிச்சிட்டு இருக்காங்க... நீங்களோ, த.வெ.க., அரசில் இருந்துட்டே, ‘காமராஜர் ஆட்சி அமைப்போம்’னு சொல்றதை வச்சே, ரெண்டு கட்சியினருக்கும் இடையில கருத்து வேறுபாடு வந்துடும் என்பதில், ‘டவுட்’டே இல்லை! lll அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன்: சட்டசபை தேர்தல் முடிந்ததும், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைக்க தி.மு.க.,வின் ஆதரவை தேடவில்லை. திருமாவளவனை முதல்வராக்கவே திட்டமிடப்பட்டது. ஒருவேளை, த.வெ.க., ஆட்சி அமைக்க முடியாமல் போனால், திருமாவளவனை முதல்வராக்க த.வெ.க.,வின் ஆதரவை நாட இருந்தோம். தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் எப்படி இணைந்து செயல்பட முடியும்? டவுட் தனபாலு: ‘தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் இணைந்து செயல்பட முடியாது’ன்னு சொல்றீங்களே... அடுத்து வர்ற ஐந்து சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்ல, அ.தி.மு.க.,வும், தி.மு.க.,வும் மீண்டும் தோற்று போயிட்டா, உங்க கருத்தை மறுபரிசீலனை பண்ணிக்குவீங்க என்பதில், ‘டவுட்’டே இல்லை! lll பத்திரிகை செய்தி: ‘தமிழகத்தில் காலியாக உள்ள ஐந்து சட்டசபை தொகுதிகளுக்கு எப்போது வேண்டுமானாலும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படலாம் என்பதால், அதற்கான பணிகளை இப்போதே தொடங்குங்கள்’ என, தி.மு.க., நிர்வாகிகளுக்கு, அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார். டவுட் தனபாலு: சட்டசபை தேர்தல், அடுத்து நடந்த ரெண்டு தொகுதி இடைத்தேர்தலில் அடி வாங்கி, தி.மு.க.,வினர் நொந்து போய் கிடக்கிறாங்க... அடுத்து, அஞ்சு தொகுதி இடைத்தேர்தலிலும் அடி வாங்கிட்டா, கட்சியினர் இன்னும் சோர்ந்து போயிடுவாங்க... அதனால, ‘இடைத்தேர்தல் புறக்கணிப்பு’ என்ற முடிவே சிறந்த ராஜதந்திரமா இருக்கும் என்பதில், ‘டவுட்’டே இல்லை! lll


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

duruvasar
அக் 27, 2026 20:33

ஸ்டாலினுக்கு ராஜதந்திரம் தெரியாவிட்டாலுலும் பரவாயில்லை கருனாநிதியை போல் அராஜக தந்திரம் செய்யாமல் இருக்கிறாரே என்றுசந்தோசப்பட்டுக்குங்க .


Anantharaman Srinivasan
அக் 27, 2026 18:57

காமராஜர் ஆட்சி அமைப்பது ஒரு புறமிருகட்டும் காமராஜர் மறைந்து 40 வருடத்திற்கு மேலாகியும் இன்னும் அவர் போல் ஒரு தலைவர் இந்தியாவில் உருவாகவில்லையே.


D.Ambujavalli
அக் 27, 2026 18:53

எந்த. ஆட்சி. வந்தாலும். அந்த. முதல்வர். 'காமராஜர்'. அரசு. அலுவலகங்களில். அதவியைக். குறிப்பிடுவதுபோல். காமராஜரையும். ஒரு. பதவியாக்கிவிட்டார்கள்


S.V.Srinivasan
அக் 27, 2026 08:19

தி மு க ஆட்சில இருக்கும்போது ஸ்டாலின் ஆட்சிதான் காமராஜர் ஆட்சின்னு அப்போதைய உங்க மாநில தலைவர் செல்வ பெரும்தொகை கூவிக்கிட்டு இருந்தாரு. இப்போ த வெ க விஜய் ஆட்சிதான் காமராஜர் ஆட்சின்னு உங்க கட்சி மூத்த தலைவர் ப சி திருவாய் மலர்ந்துஅருளினார்


புதிய வீடியோ