உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டவுட் தனபாலு / ‘டவுட்’ தனபாலு: அக். 31

‘டவுட்’ தனபாலு: அக். 31

பா.ஜ., தமிழக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்: அரசியலுக்கு யார் புதிதாக வந்தாலும், அவர்களை பா.ஜ., இயக்குவதாக கூறுகின்றனர். கடவுள்கள் லட்சுமி, சரஸ்வதி கூட தாமரையில் தான் அமர்ந்துள்ளனர்; அவர்களை பா.ஜ.,வினர் என சொல்ல முடியுமா? தாமரை எங்கும் இருக்கும். டவுட் தனபாலு: புதுசா கட்சி துவங்க திட்டமிட்டிருக்கும் நடிகர் தனுஷ், பெண்களுக்கு வழங்கிய வெள்ளி காமாட்சி விளக்கில் தாமரை இருந்ததற்கு, இவ்வளவு அழகா விளக்கம் தர்றீங்களே... ஆனா, அவர் டில்லியில் முகாமிட்டு, உங்க கட்சியின் சில தலைவர்களை பார்த்துட்டு வந்த பிறகு, தாமரை விளக்கை கொடுத்தது தானே ஏகப்பட்ட, ‘டவுட்’களை எழுப்புது! lll தி.மு.க., துணை பொதுச்செயலர் கனிமொழி: தமிழகத்தில் நடக்கும் குற்றச் சம்பவங்களை தடுப்பதில் கவனம் செலுத்த வேண்டிய காவல் துறை, அரசியல் விமர்சனங்களுக்கு பதிலளிப்பதில் நேரத்தைச் செலவிடுவது வியப்பை அளிக்கிறது. எதிர்க்கட்சியினரை கைது செய்வதில் காட்டும் ஆர்வத்தை, குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை கைது செய்வதில், த.வெ.க., அரசு காட்டுவது இல்லை. டவுட் தனபாலு: அது சரி... கடந்த தி.மு.க., ஆட்சியில், பள்ளி கல்வித் துறையில் 100 கோடி ரூபாய்க்கு மேல ஊழல் நடந்துட்டதா பதிவான வழக்கில் தானே, உங்க கட்சியின் முன்னாள் அமைச்சர் மகேஷ் கைது செய்யப்பட்டிருக்காரு... 100 கோடி ரூபாய் ஊழல் என்பது, உங்க பார்வைக்கு குற்றச் சம்பவமா தெரியலையா என்ற, ‘டவுட்’ தான் வருது! lll பத்திரிகை செய்தி: தலைமை தேர்தல் கமிஷனர் பதவி விலகக்கோரி, காங்கிரஸ் தலைமையிலான, ‘இண்டி’ கூட்டணி சார்பாக, டில்லியில் நாளை பிரமாண்ட பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதில், 10 லட்சம் பேர் பங்கேற்க வேண்டும் என, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் எதிர்பார்க்கிறார். ஆனால், கட்சியினரை டில்லிக்கு அழைத்து செல்வதற்கான செலவை ஏற்பது யார் என்ற சர்ச்சையில், காங்., தமிழக நிர்வாகிகள் ஆர்வமின்றி உள்ளனர். டவுட் தனபாலு: அது சரி... காங்கிரசுக்கு தமிழகத்துல 12 எம்.பி.,க்கள், அஞ்சு எம்.எல்.ஏ.,க்கள், அதுல ரெண்டு பேர் மாநில அமைச்சர்களாகவும் இருக்காங்க... இவங்க எல்லாரும் தலா 100 பேரை டில்லிக்கு அழைச்சிட்டு போனாலும், 1,700 பேரை திரட்ட முடியுமே... பதவி சுகத்தை அனுபவிக்கிறவங்க, கட்சிக்காக செலவழிக்க யோசிச்சா, காமராஜர் ஆட்சி என்பது கானல் நீராகவே போயிடும் என்பதில், ‘டவுட்’டே இல்லை! lll


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ