உள்ளூர் செய்திகள்

டவுட் தனபாலு

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: மஹாவீர் ஜெயந்திக்காக, பெரும்பான்மை மக்களின் உணவு உரிமையான இறைச்சி கடைகளை மூடும் தி.மு.க., அரசுக்கு, உயிரை குடிக்கும் மதுக்கடைகளை புனித வெள்ளி அன்று மூடுவதில் என்ன தயக்கம். அரசின் ஒருநாள் வருமானம் தடைபடுவதை தவிர, மதுக்கடைகளை மூடுவதால், யாருக்கும் பாதிப்பு ஏற்படப் போவதில்லை. டவுட் தனபாலு: போதை விஷயத்தில் எப்பவும் உஷாராக இருக்கும், 'குடி'மகன்கள் முதல் நாளே தேவையான, 'சரக்கு'களை வாங்கி, 'ஸ்டாக்' வச்சுக்கிடுவாங்க... அதனால, ஒரு நாள் கடையை மூடினாலும், அரசுக்கு எந்த வகையிலும் வருவாய் பாதிக்கப்படாது என்பதில், 'டவுட்'டே இல்லை!அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன்: மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா கூறியபடி, 2021 சட்டசபை தேர்தலில் வலுவான கூட்டணி அமைத்திருந்தால், தி.மு.க., ஆட்சிக்கு வந்திருக்காது. அதுபோன்ற தவறு இப்போது நடக்கக்கூடாது என்பதில், அவர் உறுதியாக இருக்கிறார். 'அ.தி.மு.க., உட்கட்சி விவகாரங்களில் தலையிட மாட்டோம்' என, அமித் ஷா கூறினாலும், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தை பா.ஜ., கைவிடாது.டவுட் தனபாலு: 'பா.ஜ., கூட்டணிக்கு வரணும் என்றால், மாநில தலைவராக அண்ணாமலை இருக்க கூடாது' என்ற அ.தி.மு.க.,வின் நிபந்தனையை, அவங்க ஏத்துக்கிட்டதா தகவல்கள் உலா வருது... பழனிசாமி கோரிக்கையை ஏற்று, அவங்க கட்சி தலைமையையே மாற்றிய பா.ஜ., மேலிடம், உங்களையும், பன்னீர்செல்வத்தையும் கழற்றி விடாதுன்னு, 'டவுட்' இல்லாம எப்படி நம்புறீங்க?தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் சி.ஆர்.கேசவன்: தமிழக அரசின் அடையாள சின்னத்தில் கூட, கோவில் கோபுரம் தான் இருக்கிறது. அது மிகவும் புனிதமானது என்பதாலேயே, அரசின் சின்னமாக இருந்து வருகிறது. ஆனால், ஹிந்து அடையாளங்கள் மற்றும் அவை சார்ந்த உணர்வுகள் மீது தாக்குதல் நடத்தும் வகையில், அசிங்கமான அருவருப்பான கருத்துக்களை தெரிவித்த பொன்முடிக்கு அரசு பதவியில் நீடிக்க தார்மீக உரிமை இல்லை. அமைச்சர் பதவியில் இருந்து உடனடியாக, அவர் நீக்கப்பட வேண்டும்.-டவுட் தனபாலு: இதே, ஜெ., ஆட்சி நடந்து, இப்படி மட்டும் ஒரு அமைச்சர் பேசியிருந்தால், அடுத்த விநாடியே அவரை வீட்டுக்கு அனுப்பி, கைது பண்ணி ஜெயில்லயும் தள்ளியிருப்பாரு... பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கினால், அவரது விழுப்புரம் மாவட்டத்தில் கட்சி கலகலத்து போயிடும்னு முதல்வர் தயங்குறாரோ என்ற, 'டவுட்'தான் வருது!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Yes your honor
ஏப் 15, 2025 11:26

இன்னும் மந்திரியாக வைத்திருக்கும் ஒரு விடியாததைப் பற்றியோ அதிகம் கவலைப்படுவதற்கு பதில், தவறான கைகளில் ஆட்சியை ஒப்படைத்தால் என்ன நடக்கும் என்பதை பற்றி புரிந்து கொள்ள வேண்டியது தான் மிக முக்கியம். கடந்த முறை நாம் போட்ட ஓட்டு, நமக்கே பேரதிர் வேட்டாக வினை வைத்துவிட்டது. நாக்கூசாமல் பொய்சொல்லி ஆட்சிக்கு வந்ததால், திமுக மனம் கூசாமல் மக்களை வஞ்சித்துவிட்டது. அரசு கஜானாவில் பணம் இல்லை என்று வழக்கமான புழுகைப் புழுகி, திமுக ஆட்சிக்கு வந்த உடனேயே விலைவாசியை, வரிகளை கண்ணை மூடிக்கொண்டு உயர்த்தியது. அவ்வாறு உயர்த்தி வசூலித்த பணம் மக்களுக்காகப் பயன்படுத்தப் பட்டதா? ஆம் எனில் எங்கு, எவ்வாறு? அவ்வாறு பயன்படுத்தப் படவில்லையோ என்று சந்தேகிக்க ஆயிரம் முகாந்திரங்கள் உள்ளன. ஆட்சிக்கு வந்த முதல் ஆண்டே மகனும் மருமகனும் சேர்ந்து 30,000 கோடிகள் ஆட்டையை போட்டதாக செய்திகள் வந்தன. எந்தத் துறையில் நுழைந்து பார்த்தாலும், அலிபாபா குகைக்குள் நுழைந்தது போன்று, இலட்சம் கோடிகளில் ஊழல் நடைபெற்றுள்ளது எனக் கண்டுபிடிக்கப் படுகிறது. இந்த ஆயிரம் கோடிகள், இலட்சம் கோடிகள் எல்லாம் யார் அப்பன் வீட்டுப் பணம். இதில் உள்ள ஒவ்வொரு ரூபாயும் நம் பணம், நம் வீட்டுப் பணம். மருந்து வாங்கக் காசில்லாமல் போனாலும் வரிகட்டி வரும், நம் போன்ற மிகச் சாதாரண மக்களுக்கு வெறும் 1000 ரூபாயே பெரிதாக இருக்கும் பொழுது, இவர்கள் ஒவ்வொருவரின் குடும்பத்திலிருக்கும் ஒவ்வொரு நபரும், மக்கள் இவ்வாறு கஷ்டப்பட்டு கட்டும் வரிப்பணத்தை வாரிசு சுருட்டுகிறார்கள் என்பதை அறியும் பொழுது மனதுடன் சேர்ந்து உடலும் வலிக்கிறது. நம் வாழ்நாளில் இனிமேல் ஒருபோதும் திமுகவிற்கு வாக்களிக்க மாட்டோம் என்று இன்றே சத்திய பிரமாணம் எடுப்போம். தவறினால், நம் அடுத்த தலைமுறை நம்மை மன்னிக்காது.


D.Ambujavalli
ஏப் 15, 2025 06:15

குவாரி வருமானத்தில் கணிசமான பங்கு, மணல் mafia வகையில் கப்பம் என்று வழக்குபவரை அப்படி விளக்கினால் எத்தனை உள் விவகாரங்களை வெளிக்கொண்டு வந்துவிடுவாரோ என்ற தயக்கமாக இருக்கலாம்.