உள்ளூர் செய்திகள்

டவுட் தனபாலு

தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன்: முல்லைப் பெரியாறு பிரச்னை குறித்து முழுதுமாக எதுவும் தெரியாமல், எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி பேசி வருகிறார். முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்கு இன்னும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அப்படி இருக்கும்போது, 'கேரள அரசை கண்டித்து, தமிழக சட்டசபையில் தீர்மானம் கொண்டு வர வேண்டும்' என்கிறார் பழனிசாமி. தமிழக அரசுக்கு நெருக்கடி கொடுப்பதற்காக இப்படி பேசுகிறாராம்; நல்ல வேடிக்கை! டவுட் தனபாலு: அப்படி பார்த்தால், 'நீட்' தேர்வை ரத்து செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றமே தெளிவான தீர்ப்பு குடுத்துடுச்சு... அப்புறமும் அதை ரத்து செய்றதுக்கு தீர்மானம், அனைத்துக் கட்சி கூட்டம் எல்லாம் ஏன் நடத்துறீங்க... மத்திய அரசுக்கு நெருக்கடி தரவே, நீட் தேர்வை வச்சு அரசியல் பண்றீங்களோ என்ற, 'டவுட்' எழுதே!உ.பி.,யில் செயல்படும் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ்: வரும் 2027ல் நடக்க உள்ள உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில் பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள், சிறுபான்மையினர் இணைந்து பா.ஜ.,வை தோற்கடிப்பர். 'இண்டியா' கூட்டணி தற்போதும் உள்ளது; 2027 தேர்தலிலும் தொடரும்.டவுட் தனபாலு: வடக்கே நீங்களும், தெற்கில் தமிழக முதல்வர் ஸ்டாலினும் தான், 'இண்டியா' கூட்டணி இன்னும் இருக்குன்னு நம்பிட்டு இருக்கீங்க... மற்றபடி, காஷ்மீரில் ஒமர் அப்துல்லா, மேற்கு வங்க முதல்வர் மம்தா உள்ளிட்ட பல தலைவர்களும், 'இண்டியா' கூட்டணி பற்றி வாய்தவறிக்கூட பேச மாட்டேங்கிறாங்களே... 'காலாவதியான காங்கிரசை இன்னும் துாக்கி சுமக்கணுமா' என்ற முடிவுக்கு அவங்க வந்துட்டாங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன்: தி.மு.க.,வை ஆட்சியில் இருந்து அகற்றுவது மட்டுமே நம் நோக்கமாக இருக்க வேண்டும். தேசிய ஜனநாயகக் கூட்டணியில், இன்னும் யாரெல்லாம் இடம்பெற வேண்டும் என்பது குறித்து, மத்திய அமைச்சர் அமித் ஷா, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி முடிவு எடுப்பர். தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையும்; அதில், பா.ஜ.,வைச் சேர்ந்தோர் அதிகம் பேர் இருப்பர். டவுட் தனபாலு: அது சரி... 'தமிழகத்தில் அ.தி.மு.க., தனித்தே ஆட்சி அமைக்கும்... கூட்டணி ஆட்சி எல்லாம் கிடையாது'ன்னு பழனிசாமி திட்டவட்டமா சொல்லிட்டாரு... அதுக்கு நேரடியா மறுப்பு தெரிவிக்க முடியாம தான், 'தே.ஜ., கூட்டணி ஆட்சி அமையும்... அதுல, பா.ஜ.,வினரும் இருப்பாங்க'ன்னு சுத்திவளைச்சு சொல்றீங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை