உள்ளூர் செய்திகள்

டவுட் தனபாலு

தமிழக பா.ஜ., மூத்த தலைவர் எச்.ராஜா: தமிழகத்தில் இருக்கும் தி.மு.க., அரசு ஊழல், ஊறல், போதை அரசு. இது தொடர்ந்தால், அடுத்த தலைமுறை நாசமாகிவிடும். தமிழகத்தில், அனைத்து பகுதிகளிலும் போதைப்பொருள் அதிக அளவு விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் நடக்கும் அனைத்து குற்றங்களுக்கும் போதைதான் மையப்புள்ளி.டவுட் தனபாலு: தமிழகத்தில் நடக்கும் கொலை, கொள்ளை, குறிப்பா பாலியல் பலாத்கார சம்பவங்கள், 'போக்சோ' குற்றங்களுக்கு மூல காரணம் போதைதான் என்பதில், 'டவுட்'டே இல்லை... இது, ஆட்சியாளர்களுக்கு தெரிஞ்சாலும், போதை விற்பனையை தடுக்கவோ, தவிர்க்கவோ எந்த முயற்சியும் எடுக்க மாட்டாங்க என்பதிலும், 'டவுட்'டே இல்லை!நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: கள் போதைப்பொருள் என்றால், அரசு மதுபானக் கடையில் விற்பனை செய்வது என்ன புனித நீரா, கோவில் தீர்த்தமா? கள் உணவின் ஒரு பகுதி. அதை குடித்து இறந்தோர் யாரும் இல்லை. நான் கல்லுாரிக்கு போகும்போது, 'கள்' குடித்துவிட்டு தான் போவேன்; திரும்ப வரும்போதும் குடிப்பேன். அது, ராஜ வாழ்க்கை. டவுட் தனபாலு: என்னதான் கள் உணவு பொருள்னு நீங்க வாதாடினாலும், கள்ளிலும், 'ஆல்கஹால்' இருக்குதே... அதை குடிச்சுட்டு கல்லுாரிக்கு போனேன்னு நீங்க சொல்றதை பார்த்துட்டு, உங்களை பின்பற்றும் கல்லுாரி மாணவர்களும், அந்த, 'ராஜ வாழ்க்கை'யை, 'பாலோ' பண்ணிடக் கூடாதே என்ற, 'டவுட்'தான் வருது!புதுச்சேரி முன்னாள் கவர்னர் தமிழிசை: தி.மு.க., அரசின் நான்காண்டு கால ஆட்சியில், 8 லட்சம் கோடி ரூபாயாக தமிழக அரசின் கடன் சுமை அதிகரித்துள்ளது. மத்திய அரசின் பல்வேறு திட்டங்களுக்கு தமிழ் பெயர் வைத்து, 'ஸ்டிக்கர்' ஒட்டியுள்ளனர். சமூக நீதிக்கு எதிரான நிகழ்வுகள், இந்த நான்காண்டுகளில் அதிகமாக நடந்துள்ளன. கள்ளச்சாராய சாவுகள் நடந்து உள்ளன. வேங்கை வயல் பிரச்னைக்கு நீதி கிடைக்கவில்லை. சட்டம் - ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது. டவுட் தனபாலு: தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் என்ற முறையில், அண்ணாமலை தனியா ஒருபக்கம் தமிழக அரசை திட்டி, தனி ஆவர்த்தனம் பண்ணிட்டு இருக்காரு... நீங்க, எச்.ராஜான்னு ஆளாளுக்கு தமிழக அரசை விமர்சிக்கிறதை பார்த்தால், புதிய தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு வேலையில்லாம பண்ணிடுவீங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

HoneyBee
மே 28, 2025 20:49

இவுக இஷ்டப்படி பேசியே தமிழகத்தில் பாஜகவை சீக்கிரம் அழித்து விடுவார்கள். எல்லாமே வேஸ்ட் ஆகிவிடும்.


Anantharaman Srinivasan
மே 28, 2025 18:55

நீங்க இப்ப கூட்டணி வைத்திருக்கும் அதிமுக ஆட்சியில், ஸ்டாலின் எதிர்கட்சித்தலைவராக இருந்தபோது சட்டசபைக்கு போதைப்பொருட்களை கொண்டு வந்து காட்டியது மறந்து போச்சா.. ராஜா. ஆக எந்த ஆட்சியிலும் போதையும் ஊழலும் 100% பிரசித்தம்.


D.Ambujavalli
மே 28, 2025 18:32

இனி சீமானின் வழியைப் பின்பற்றி பள்ளி, கல்லூரி மாணவச் செல்வங்களும், ஆசிரிய பெருமக்களும் கள் அருந்தி வகுப்புக்கு வரலாம், யாரும் கேள்வி கேட்கக்கூடாது