உள்ளூர் செய்திகள்

டவுட் தனபாலு

த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன்: அனைத்து தரப்பிலும், தி.மு.க.,வுக்கு எதிரான ஓட்டுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணிக்கு, பழனிசாமி தான் தலைவர். கடந்த 50 ஆண்டுகளாக மற்ற கட்சிகள் செய்ய முடியாத சாதனையை, 11 ஆண்டு கால மத்திய பா.ஜ., ஆட்சி செய்துள்ளது. இதை ஜீரணிக்க முடியாமல், ஜாதி, மதத்தை வைத்து தி.மு.க., அரசியல் செய்கிறது.டவுட் தனபாலு: பா.ஜ.,வின் கூட்டணி கட்சி என்ற முறையில், மத்திய அரசு செய்த சாதனைகளை நீங்க புகழ்வதில் தவறில்லை... ஆனா, உங்க தாய் கட்சியான காங்கிரஸ் தான், 50 வருடங்களா நாட்டை ஆட்சி செய்தது என்பதையும், அதுல நீங்களும் சில ஆண்டுகள் மத்திய அமைச்சராக அங்கம் வகித்ததையும் மறந்துட்டீங்களோ என்ற, 'டவுட்' தான் வருது!பத்திரிகை செய்தி: பா.ஜ., சார்பில் அடுத்தடுத்து மண்டல மாநாடுகள் நடத்தப்பட உள்ளது. முதல் மண்டல மாநாடு, ஆக., 17ல் நெல்லையிலும், இரண்டாவது மாநாடு செப்., 13ல் மதுரையிலும், மூன்றாவது மாநாடு அக்., 26ல் கோவையிலும், நான்காவது மாநாடு நவ., 23ல் சேலத்திலும், ஐந்தாவது மாநாடு, டிச., 21ல் தஞ்சாவூரிலும், ஆறாவது மாநாடு ஜன., 4ல் திருவண்ணாமலையிலும், ஏழாவது மாநாடு ஜன., 24ல் திருவள்ளூரிலும் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.டவுட் தனபாலு: மண்டலம் மண்டலமா மாநாடுகளை அறிவிச்சா மட்டும் போதாது... மாநாடுகள்ல, திராவிட கட்சிகள் பாணியில மாபெரும் கூட்டத்தை திரட்டி காட்டணும்... அப்ப தான், 'தமிழகத்தில், 2026ல் தே.ஜ., கூட்டணி ஆட்சி' என்ற பா.ஜ.,வின் கோஷம் பலிக்கும் என்பதில், 'டவுட்'டே இல்லை!பா.ம.க., தலைவர் அன்புமணி: தமிழகத்தில், 96 அரசு கல்லுாரிகளில் முதல்வர் பணியிடங்கள் காலியாக கிடக்கின்றன. ஏற்கனவே, அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில், 9,000க்கும் அதிகமான உதவி பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அனைத்து அரசு கல்லுாரிகளுமே, கவுரவ விரிவுரையாளர்களை மட்டுமே நம்பி இருக்கின்றன. இந்நிலையில், முதல்வர்களும் இல்லாவிட்டால், அரசு கல்லுாரிகளில் கட்டடங்கள் மட்டுமே இருக்கும்; கல்வி இருக்காது.டவுட் தனபாலு: உயர்கல்வி துறையில் மட்டுமா... அரசு துறைகள் பலவற்றிலும் பல லட்சம் பணியிடங்கள் காலியா தான் கிடக்குது... இவற்றை எல்லாம் நிரப்ப அரசிடம் மனம் இருந்தாலும், பணம் இல்லாமல் தான், காலியிடங்களை கண்டுக்காம இருக்காங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Anantharaman Srinivasan
ஜூலை 10, 2025 00:18

மகளிருக்கு விடியல் பஸ்களும் மாதாமாதம் ஆயிரம் ரூபாயும் ஓட்டுக்களை பெறவே அள்ளி விட்டால் கல்வி நிறுவனங்கள் இப்படித்தான் மோசமாயிருக்கும்.


D.Ambujavalli
ஜூலை 09, 2025 16:52

இன்னும் எத்தனை மாவட்டங்கள், நகரங்களில் கலைஞர் சிலைகளை வைக்க வேண்டியிருக்கிறது? இன்னும் ‘பேனா’ வேறு pending இல் இருக்கிறது இத்தனை செய்தாக வேண்டியிருக்க, கல்லூரி முதல்வர், ஆசிரியர்கள் பதவிகள்தான் முக்கியமா?


சமீபத்திய செய்தி