உள்ளூர் செய்திகள்

டவுட் தனபாலு

தி.மு.க., துணை பொதுச்செயலர் ஆ.ராஜா: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா எப்படி இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு செயலர் ஆனார்? அவருடைய கிரிக்கெட் அறிவு என்ன? அவரை ஓட்டு போட்டா தேர்ந்தெடுத்தனர்? மக்கள் ஓட்டளித்தால் யாரும் முதல்வர் ஆகலாம். கருணாநிதிக்கும் இப்படித்தான், அவருடைய மகன் ஸ்டாலினுக்கும் இப்படித்தான் கூறினர். ஆனால், வரலாறு அவர்களை முதல்வராக்கியது. டவுட் தனபாலு: கிரிக்கெட் வாரியத்தை நிர்வகிப்பதும், ஒரு மாநிலத்தை நிர்வகிப்பதும் ஒன்றா என்ன... கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி, இன்பநிதின்னு போயிட்டே இருந்தால், கட்சிக்காக உழைக்கும் உங்களை போன்ற தகுதியானவர்களுக்கு, வாய்ப்பே கிடைக்காது என்பதை தான் அமித் ஷா சுட்டிக் காட்டினாரு... அது உங்களுக்கு புரியலையா என்ற, 'டவுட்' தான் வருது!  ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்: ஹிந்து கடவுள்களை விமர்சிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், அவர்களை காப்பாற்றும் முயற்சியில் ஹிந்து சமய அறநிலையத்துறை ஈடுபடுகிறது. ஹிந்து சமய வழிபாட்டு முறைகள் குறித்து தவறாக பேசிய பொன்முடியை அமைச்சரவையில் இருந்து நீக்கிவிட்டு, நீதிமன்றத்தில் அவருக்கு ஆதரவாக தி.மு.க., அரசு அறிக்கை அளித்துள்ளது. டவுட் தனபாலு: பொன்முடியை அவங்களா அமைச்சரவையில் இருந்து நீக்கவில்லையே... நீதிமன்றம் கடுமையாக எச்சரித்த பிறகு தானே, பதவியில் இருந்து நீக்கினாங்க... ஆளுங்கட்சியின் முக்கிய துாணாக விளங்கும் அவரை காப்பாற்ற சகல அஸ்திரங்களையும் ஆளுங்கட்சி ஏவும் என்பதில், 'டவுட்'டே இல்லை!  தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன்: சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வை வீட்டிற்கு அனுப்பும் துாதராக சரத்குமார் இருக்கப் போகிறார். எம்.ஜி.ஆருக்கு நிகராக மக்கள் சக்தி உடையவர் சரத்குமார். அவர், சமத்துவ மக்கள் கட்சி துவங்கிய காலகட்டத்தில், தொலைநோக்கு பார்வையுடன் கூடங்குளம் அணுமின் நிலையம் , அத்திக்கடவு - அவிநாசி குடிநீர் திட்டம் உள்ளிட்ட மக்கள் நலத் திட்டங்களுக்காக போராட்டங்கள் நடத்தினார். அவருக்குள் ஏற்பட்ட தேசிய உணர்வால், பா.ஜ.,வில் இணைந்தார். டவுட் தனபாலு: எம்.ஜி.ஆருக்கு நிகரான மக்கள் சக்தி கொண்ட சரத்குமாரால, ஏன் சொந்த கட்சியை வெற்றிகரமா நடத்த முடியலை... தி.மு.க., - அ.தி .மு.க., என மாறி மாறி பயணித்தும், பெரிய அளவில் சோபிக்க முடியாமல், உங்க கட்சிக்கு வந்திருக்கார் என்பது தான், 'டவுட்' இல்லாத உண்மை! 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

D.Ambujavalli
ஆக 27, 2025 16:53

1972 இல் யாரோ பெசினார்களாமே அந்த வீடியோ ஆதாரத்தைக் கொண்டுவர என்கிறது கோர்ட் அன்று இவ்வாறு கூறியவர் இருந்தால் அவரையும் வழக்கில் மாட்டிவிட்டு 'உன்னாலே நான் கெட்டேன் , என்னாலே நீ கேட்டாய் ' என்று அன்று தப்பித்தவருக்கும் அவர் உயிரோடிருந்தால் இன்றைய மீடியா, மக்களிடமிருந்து விமர்சனங்களையும் . தண்டனையையும் வாங்கிக்கொடுக்க முடியுமா ? இவர் ஒரு அமைச்சருக்குண்டான பொறுப்பற்ற நிலையில் உளறியதற்கு என்றோ, யாரோ சொன்னதை மேற்கோள் காட்டி தப்பிக்க முயல்கிறார்


கண்ணன்
ஆக 27, 2025 11:51

பாவம் திரு ராஜா, நன்றாகப் படித்திருந்தால் புரிந்து கொள்ள முடியும்


D Natarajan
ஆக 27, 2025 07:40

உண்மை ஜெய் ஷா வுக்கு கிரிக்கெட் பற்றி என்ன தெரியும். பொன்முடியின் மகன் போல, தமிழ் நாட்டு கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் அவர் தானே