தமிழக பா.ஜ., மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்: துணை ஜனாதிபதி வேட்பாளராக, ஒரு தமிழரை, பிற மாநிலத்தவர் ஒப்புக்கொள்கின்றனர். ஆனால், 'தமிழ் தமிழ்' என பேசிக் கொண்டே, தமிழன் பிரதமராகக் கூடாது; ஜனாதிபதி, துணை ஜனாதிபதி ஆகக்கூடாது என, தி.மு.க.,வினர் நினைக்கின்றனர். துணை ஜனாதிபதி பதவிக்கு சி.பி.ராதாகிருஷ்ணனை ஏன் ஆதரிக்கவில்லை? தமிழரை எதிர்த்து, தமிழரான ப.சிதம் பரத்தையோ, திருச்சி சிவாவையோ ஏன் நிறுத்தவில்லை? டவுட் தனபாலு: ப.சிதம்பரமும், சிவாவும் நீண்ட நெடிய அரசியல் அனுபவம் கொண்டவங்க... 100 சதவீதம் தோல்வி உறுதி என்று தெரியும். தேர்தலில் நின்று மூக்குடை படுவாங்களா... நீங்க சொல்ற மாதிரி, 'இண்டியா' கூட்டணி தலைவர்கள், அவங்கள்ல யாரையாவது தேர்வு செய்திருந்தாலும், வலை யில் அவங்க சிக்கியிருப்பாங்களா என்பது, 'டவுட்' தான்! தே.மு.தி.க., பொதுச்செயலர் பி ரேமலதா: இதுவரை, 10 மாநாடுகளை தே.மு.தி.க., நடத்தியுள்ளது. விஜயகாந்த் இருந்தபோது, 2011ல், 'மக்கள் உரிமை மீட்பு மாநாடு' நடந்தது. அதன் பிறகு, அவர் எதிர்க்கட்சித் தலைவரானார். இப்போது, வரும் ஜனவரி 9ம் தேதி, தே.மு.தி.க., சார்பில், 'மக்கள் உரிமை மீட்பு மாநாடு - 2.0' என்ற பெயரில், கடலுார் மாவட்டம், வேப்பூர் அருகே உள்ள பாசார் கிராமத்தில் நடக்க உள்ளது. மக்களாலும், தெய்வத்தாலும் ஆசிர்வதிக்கப்பட்ட மாநாடாக இது அமையும். டவுட் தனபாலு: முதல் மா நாட்டை நடத்திய விஜயகாந்த், எதிர்க்கட்சித் தலைவர் ஆனாரு... இப்ப, 2.0 மாநாட்டை நடத்தப் போறீங்க... எதிர்க்கட்சித் தலைவருக்கு அடுத்த, 'புரமோஷன்' என்றால் அது முதல்வர் பதவி தான்... ஸ்டாலின், பழனிசாமி, விஜய்க்கு போட்டியா நீங்களும் முதல்வர் பதவி கோதாவில் குதிக்கப் போறீங்களோ என்ற, 'டவுட்' வருதே! பத்திரிகை செய்தி: புதுக்கோட்டை அருகே நடந்த மாநில துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி பெற்ற, தமிழக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவின் மகன் சூரியராஜபாலு, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை அணிவித்த பதக்கத்தை கழுத்தில் வாங்காமல் அவமதித்து, கையில் பெற்று சென்றார். டவுட் தனபாலு: கழுத்தில் பதக்கத்தை மாட்ட விடாம, கையில் வாங்கிட்டா மட்டும் ஆச்சா... இவ்வளவு ரோஷம் காட்டிய அமைச்சரின் மகன், 'அண்ணாமலை பதக்கம் தர்றாருன்னா, அந்த பதக்கமே எனக்கு வேண்டாம்'னு மறுத்துட்டு மேடையே ஏறாம போயிரு ந்தார் என்றால், 'டவுட்'டே இல்லாம அவரை பாராட்டலாம்!