உள்ளூர் செய்திகள்

டவுட் தனபாலு

தமிழக சபாநாயகர் அப்பாவு: பா.ஜ.,வை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், 'விண்வெளியில் முதன் முதலில் கால் வைத்தது அனுமன் தான்' என சொல்லி உள்ளார். மத்தியில் ஆளும் பா.ஜ.,வினர், ஆர்.எஸ்.எஸ்., சித்தாந்தம் கொண்டவர்கள்; பிற்போக்கு கருத்துகளை தான் பரப்பி வருகின்றனர். பா.ஜ., கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன், ஆர்.எஸ்.எஸ்., சித்தாந்தம் கொண்டவர். இதை பற்றி யாரும் பேசுவதில்லை. டவுட் தனபாலு: என்னமோ பயங்கரவாத கருத்துகளை ஆர்.எஸ்.எஸ்., பரப்புவது மாதிரி குற்றம் சாட்டுறீங்களே... தேச பக்தி, தனி மனித ஒழுக்கம், கலாசாரம், பண்பாட்டை காக்கும்படி ஆர்.எஸ்.எஸ்., வலியுறுத்துவது, திராவிட சித்தாந்தம் கொண்ட உங்களுக்கு ஏன் வேப்பங்காயாக கசக்குது என்ற, 'டவுட்' தான் வருது!  தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு: என் சொத்து மதிப்பை உயர்த்துவதற்காகவே, திருச்சி பஞ்சப்பூரில் புதிதாக பஸ் நிலையம் கட்டியிருப்பதாக அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கூறியுள்ளார். அப்பகுதியில் எனக்கு, 300 ஏக்கர் நிலம் இருப்பதாகவும் கூறியுள்ளார். பழனிசாமிக்கு சவால் விடுகிறேன்... அவர் சொல்வதை நிரூபித்தால், என் சொத்து என குறிப்பிடுபவற்றை பழனிசாமியே எடுத்துக் கொள்ளட்டும். டவுட் தனபாலு: கிட்டத்தட்ட, 40 வருஷங்களுக்கும் மேலா அரசியல்ல இருக்கீங்க... 300 ஏக்கர் நிலத்தையும் உங்க பெயர்லயே வச்சிருக்கும் அளவுக்கா அப்பாவியா இருப்பீங்க... அந்த துணிச்சல்ல தான் இப்படி சவால் விடுறீங்களோ என்ற, 'டவுட்' வருது!  பா.ம.க., தலைவர் அன்புமணி: கடந்த 2021 தி.மு.க., தேர்தல் அறிக்கையில், 505 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருந்தன. ஆட்சிக்கு வந்து, 50 மாதங்களில், 66 வாக்குறுதிகள் மட்டுமே நிறைவேற்றப்பட்டு உள்ளன; 439 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவே இல்லை. 100 நாள் வேலை திட்டம், 150 நாட்களாக அதிகரிக்கப்படும்; அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம்; 3.50 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை; மாதம் ஒரு முறை மின் கட்டணம்; காஸ் சிலிண்டருக்கு, 100 ரூபாய் மானியம்; கல்விக் கடன் தள்ளுபடி போன்ற முக்கியமான வாக்குறுதிகள், பேப்பரில் மட்டுமே உள்ளன. டவுட் தனபாலு: 'மத்திய அரசு நிதி தராமல் தமிழகத்தை தொடர்ந்து வஞ்சிப்பதால் தான், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியலை... அதனால, மறுபடியும் எங்களை ஆட்சியில் அமர்த்துங்க... சொச்ச வாக்குறுதிகளையும் கண்டிப்பா நிறைவேற்றி விடுவோம்'னு வர்ற தேர்தல்ல தி.மு.க.,வினர் ஓட்டு கேட்டாலும் கேட்பாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை! 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

D.Ambujavalli
ஆக 29, 2025 16:39

ஆனானப்பட்ட முதல்வரின் ஆஸ்தியே வெறும் 8+ கோடி என்று கணக்குக்காட்டியுள்ளார் அவரைவிட அரசியல் அனுபவம் மிக்க நீங்களும் அவரைப் பின்பற்றி வெறும் 10 லட்சம் தான் என்று காட்டிவிட்டு, அப்படியே எடப்பாடியிடம் கொடுத்துவிடும் அளவுக்குக்கூட உங்களுக்கு சாமர்த்தியம் இருக்காதா ?


Shekar
ஆக 29, 2025 15:56

சிலுவையில் அறையப்பட்ட இயேசு உயிரோட வந்தார்னு இந்த அப்பாவு நம்புகிறார், ஹனுமன் பற்றி சொன்னால் ஏன் எரிகிறது.


கண்ணன்
ஆக 29, 2025 09:51

இதற்காகத்தான் நன்றாகப் படித்தவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது


Gnana Subramani
ஆக 29, 2025 22:40

மோடிஜி மாதிரி நிறைய படித்தவர்களையா தேர்வு செய்ய வேண்டும்


V RAMASWAMY
ஆக 29, 2025 09:17

திராவிட மாயை. இந்து மதம் ஆல விருட்சம், அதனருகே முளைப்பது நிலையில்லா அழியும் புல் பூண்டு பூச்சிகள். என்றும் பிரகாசாகமாயிருக்கும் இந்துமத சூரிய தேவர் போல் ஒளி மிளிரும் இந்து மதத்தை எந்த டார்ச்சும், எவர் எப்படி தொண்டை கிழிய கத்தினாலும் எதுவும் அசைக்கமுடியாது.


Rajan A
ஆக 29, 2025 06:42

தெற்காசிய சாக்ரடீஸ் ஐநாவின் விருது ஞாபகம் இருக்கா? அதை முதலில் நிரூபிக்கட்டும். மக்கள் பொய்களை கண்டு கொள்ளாமல் இருந்தால் அது உண்மையாகி விடாது