உள்ளூர் செய்திகள்

டவுட் தனபாலு

தமிழக மதுவிலக்கு துறை அமைச்சர் முத்துசாமி: தமிழகத் தில் மதுபான ஆலைகளை, தி.மு.க.,வினர் நடத்துவதாகவும், மதுக்கடைகளை மூடுவதாக, கனிமொழி எம்.பி., அளித்த வாக்குறுதியை நிறை வேற்றவில்லை எனவும் எதிர்க்கட்சி யினர் குற்றம் சாட்டுகின்றனர். உண்மையில், தி.மு.க., ஆட்சியில், 500 மதுக்கடைகள் மூடப் பட்டுள்ளன. டவுட் தனபாலு: ஆனா, 500 கடைகளை மூடினாலும், மது விற்பனை மட்டும் குறையவே இல்லையே... வருஷத்துக்கு வருஷம் பல ஆயிரம் கோடி ரூபாய்னு ஏறுமுகத்துல தானே போகுது... 'மது விற்பனையை வருஷத்துக்கு இத்தனை ஆயிரம் கோடி ரூபாய் குறைப்போம்'னு இலக்கு நிர்ணயம் பண்ணி செயல்பட்டால், 'டவுட்' இல்லாம உங்களை பாராட்டலாம்! lll தமிழக பா.ஜ., செயலர் அமர்பிரசாத் ரெட்டி: சென்னை, அடையாறு முகத்துவார பகுதியில் மழை, வெள்ளத்தடுப்பு பணிகளை பார்வையிடுவதற்காக, அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலினும், துணை முதல்வர் உதயநிதியும் சென்றுள்ளனர். என்னதான் அரசியல்வாதியாக இருந்தாலும் மக்கள் பிரதிநிதியாக இருக்கும் உதயநிதி, அரைக்கால் டவுசர் அணிந்து அரசு பணிகளை பார் வையிட சென்றது ஏற்கத்தக்கதல்ல; இது எந்த விதமான நாகரிகம்? டவுட் தனபாலு: உதயநிதி காலையில், 'வாக்கிங்' போகும் நேரத்தை கூட வீணாக்காம, மக்கள் பணியையும் சேர்த்து பார்த்திருக்கார்... அவர் செய்த பணியை பார்க்காம, அவர் போட்டிருந்த உடையை பற்றி விமர்சிப்பது அப்பட்டமான அரசியல் என்பதில், 'டவுட்'டே இல்லை! lll முக்குலத்தோர் புலிப்படை தலைவரும், நடிகருமான கருணாஸ்: எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் சினிமாவில் நடித்தாலும், தொடர்ச்சியாக மக்களுக்காக உழைத்துள்ளனர். அதனாலேயே ஆட்சி பொறுப்புக்கும் வந்தனர்; ஆனால், நடிகர் விஜய் அப்படியல்ல. அவர், இன்னும் முழுமையான அரசியல்வாதியாக மாறவில்லை. சினிமாக்காரராகவே இருக்கிறார். அதனால் தான், களத்தில் மக்களுக்கு பிரச்னை என்றதும், அவர்களுக்கு ஆறுதலாக நிற்காமல், சம்பந்தப்பட்ட இடத்திலிருந்து ஓடி வந்து விட்டார். இன்று வரை கரூருக்கு செல்லவில்லை. டவுட் தனபாலு: விஜய் ஒருமுறை கரூர் போனதுக்கே, 41 பேர் பலியாகிட்டாங்க... மறுபடியும் அங்க போய், மீண்டும் ஒரு அசம்பாவிதம் நடந்துட்டா, 'இவர் ஏன் திரும்பவும் கரூருக்கு போனார்'னு நீங்களே திருப்பி கேட்பீங்க... விஜய் எது செஞ்சாலும் குற்றம் கண்டுபிடிச்சால் தான், உங்களுக்கு தி.மு.க., முகாமில் ஒரு சீட் கிடைக்கும் என்பது, 'டவுட்' இல்லாம தெரியுது! lll


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

duruvasar
அக் 30, 2025 09:19

வாயில் டூத் பிரஷுடன் நின்றிருந்தால் கடமை உணர்ச்சி இன்னும் கூடுதலாக வெளிபட்டிருக்கும் என்ற டவுட்டு உங்களுக்கு வரவில்லையா ?


சமீபத்திய செய்தி