உள்ளூர் செய்திகள்

டவுட் தனபாலு

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அணியில் இருந்து விலகி, தி.மு.க.,வில் இணைந்த மனோஜ் பாண்டியன்: திராவிட கொள்கைகளை பாதுகாக்கும் தி.மு.க., தலைமையை ஏற்று, அக்கட்சியின் தொண்டராக பணியாற்ற தி.மு.க.,வில் இணைந்துள்ளேன். மாற்றுக் கட்சிக்காரர் என்றுகூட பார்க்காமல், முதல்வர் ஸ்டாலின் என்னை அன்புடன் வரவேற்றார். அது தான் தலைமைக்கான பண்பு. திராவிட இயக்க கொள்கைகளை பாதுகாக்கும் ஒரு உன்னத தலைவன் கீழ் செயல்பட விரும்பி, தி.மு.க.,வில் இணைந்து விட்டேன். டவுட் தனபாலு: உங்க அப்பா பி.எச்.பாண்டியன், வாழ்நாள் முழுக்க தி.மு.க., எதிர்ப்பு ஒன்றையே லட்சியமாக கொண்டிருந்தார்... அவரை பின்பற்றி அரசியலுக்கு வந்த நீங்க, அரசியல் ஆதாயத்துக்காக தி.மு.க., முகாமில் ஐக்கியமானதை, உங்க அப்பாவின் ஆன்மாவும், விசுவாசிகளும் ஏத்துக்குவாங்களா என்பது, 'டவுட்' தான்! பா.ம.க., தலைவர் அன்புமணி: ராமதாசை சுற்றியுள்ள துரோகிகள், தீய சக்திகள், தி.மு.க., கைக்கூலிகள் இருக்கும் வரை, அவருடன் இணைய மாட்டேன். ராமதாஸ் சமூக சீர்திருத்தவாதி. அவரது மனதை மாற்றிய துரோகிகள் இருக்கும் வரை, அந்த இடத்திற்கு நான் செல்ல மாட்டேன். டவுட் தனபாலு: ராமதாசை சுற்றி துரோகிகள், தீய சக்திகள் இருக்கிறதா சொல்றீங்களே... உங்களது சம்பந்தியும், சகோதரியுமான ஸ்ரீகாந்தியும், தன் தந்தை ராமதாஸ் பக்கத்துல தானே இருக்காங்க... நீங்க சொல்ற துரோகிகள், தீய சக்திகள் பட்டியல்ல அவங்களும் உண்டா என்ற, 'டவுட்' வருதே! சிவகங்கை காங்., - எம்.பி., கார்த்தி: தமிழகம் முழுதும் கூலிப்படையாக செயல்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தமிழகம் முழுதும் யாரெல்லாம் ரவுடிகள் என கணக்கெடுக்க வேண்டும். அவர்களை தொடர்ச்சியாக போலீசார் கண்காணிக்க வேண்டும். தமிழகம் முழுதும் ஒரே நேரத்தில், குற்றவாளிகள் மீது போலீசார் பெரிய அளவில் அதிரடி ஆப்பரேஷன் நடத்த வேண்டும். டவுட் தனபாலு: 'தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சந்தி சிரிக்குது... ரவுடிகள் ராஜ்ஜியம் தான் நடக்குது... இதை, தி.மு.க., அரசு இனியும் வேடிக்கை பார்த்துட்டு இருக்கக்கூடாது'ன்னு எச்சரிக்கையா சொல்ல வேண்டியதை, கூட்டணி தர்மத்துக்காக நோகாம சொல்றீங்க என்பது, 'டவுட்' இல்லாம தெரியுது!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Anantharaman Srinivasan
நவ 07, 2025 15:05

அதிமுக வில் ஜெ.. கெத்தாகயிருந்து கோலோச்சி ஆட்சிப்பீடத்தில் இருந்ததால், பி.எச்.பாண்டியன், வாழ்நாள் முழுக்க தி.மு.க., எதிர்ப்பு ஒன்றையே லட்சியமாக கொண்டிருந்தார். இன்று இரட்டையிலை சுருண்டு வாடி வதங்கி நிலைக்குமோ கையைவிட்டு போகுமோ என்ற திரிசங்கு நிலை. தன் position னை காப்பாற்றிக்கொள்ள திமுக எதிர்ப்பு நிலை முக்கியமா..? வாழ்நாள் சொர்க்கம் முக்கியமா என்ற கோணத்தில் மனோஜ் பாண்டியனின் முடிவு இது.


duruvasar
நவ 07, 2025 10:47

கருணாநிதி காலத்தில் இலவச டி வீ வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்து இது ஒரு புரட்சி திட்டம் என இந்தியா நிதியமச்சராக இருந்த ஐயா சிதம்பரத்தின் மகன் மாற்றி பேச வாய்ப்பேயில்லை. என்பது தெரிகிறது


duruvasar
நவ 07, 2025 10:42

ஐயா கார்த்திக் அவர்களே தமிழ்நாடு காங்கிரஸின் மறைந்த முன்னாள் தலைவரும் , இந்நாள் தலைவரும் மாறிமாறி தமிழகத்தில் நடைபெற்றுக்கொண்டிருப்பது காமராசர் ஆட்சி என்று சொன்னதற்காப்பபுரமும், காமராஜர் ஆட்சிக்கு புத்திமதி சொல்லுமளவுக்கு நான் தகுதி உடையவனா என்ற டவுட்டு உங்களுக்குள் வரவேயில்லையா


D.Ambujavalli
நவ 07, 2025 05:45

உரத்த குரலெல்லாம் நில்லு சீட்டு, ஐந்து சீட்டுக்குத் தொங்கும் நிலையில் உள்ளவர்களிடமிருந்து வருமா? ச்மமூகத்தில் நடக்கும் அராஜகத்தை முற்றும் ஆதரித்த மாதிரியும் இருக்கக்கூடாது மொத்தத்தில், பாம்பும் சாகாமல், கோலும் முறியாமல் ஒரு அறிக்கை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை