உள்ளூர் செய்திகள்

 டவுட் தனபாலு

தே.மு.தி.க., பொதுச் செயலர் பிரேமலதா: நாங்கள் எந்த, 'சோபா செட்'டுக்கும் ஆசைப்படாமல், தி.மு.க., கூட்டணிக்கு விசுவாசமாக உள்ளோம். நான் நினைத்திருந்தால், நான் ஒரு வார்த்தை கேட்டிருந்தால், முதல்வர் விஜய் வீடு தேடி வந்து, துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார். ஆனால், தே.மு.தி.க., அதற்கெல்லாம் ஆசைப்படாது. டவுட் தனபாலு: 'நெனப்பு தான் பொழப்பை கெடுத்துச்சாம்'னு கிராமங்கள்ல ஒரு பழமொழி சொல்லுவாங்க... அதுக்கு, அரசியல்ல சரியான உதாரணம் நீங்க தான் என்பதில், 'டவுட்'டே இல்லை! பத்திரிகை செய்தி: தமிழக வெற்றிக் கழக தலைவரும், முதல்வருமான விஜய், சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் வெற்றி பெற்றார்; திருச்சி கிழக்கு எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தார். இதேபோல, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் நால்வர் ராஜினாமா செய்ததால், ஐந்து தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இதில், திருச்சி கிழக்கில், தி.மு.க., கூட்டணியில் இருக்கும் இனிகோ இருதயராஜுக்கு மட்டும் சீட் ஒதுக்கிவிட்டு, மற்ற நான்கு தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க, தி.மு.க., முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. டவுட் தனபாலு: சரியா போச்சு... 75 வருஷம் பாரம்பரியம் கொண்ட தி.மு.க., முழுசா மூணு வயசு கூட நிரம்பாத த.வெ.க.,வை பார்த்து பயந்து, களத்தில் இருந்து ஓடிட்டதா அவதுாறுகள் கிளம்புமே... அதேநேரம், மறுபடியும் த.வெ.க.,விடம் தோற்று அவமானப்படுவதை விட, இதுவே பரவாயில்லைன்னு நினைச்சிட்டாங்களோ என்ற, 'டவுட்' தான் வருது! ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ: திருவள்ளுவர் அனைத்தையும் கடந்தவர். அத்தகைய திருவள்ளுவருக்கு, திமிர் பிடித்த சர்வாதிகாரியான தமிழக கவர்னர், காவி ஆடை போர்த்தியதை மன்னிக்க முடியாது. திட்டமிட்டு, நம்மை உசுப்பி பார்ப்பது போல் ஆணவத்துடன் இதை செய்துள்ளார். இது தொடருமானால், கவர்னர் எந்த மாவட்டத்திற்கு சென்றாலும் ம.தி.மு.க., கருப்புக் கொடி காட்டும். டவுட் தனபாலு: வழக்கமா, இந்த மாதிரி விவகாரங்கள்ல ஆவேசம் காட்டும் தி.மு.க.,வே அடக்கி வாசிக்கிறப்ப, நீங்க ஓவரா உணர்ச்சிவசப்படுறீங்களே... அது சரி... 'கவர்னர் எங்க போனாலும் கருப்புக் கொடி காட்டுவோம்'னு சொல்ற உங்க கட்சிக்கு, எல்லா மாவட்டங்கள்லயும் தொண்டர்கள் இருக்காங்களா என்ற, 'டவுட்' வருதே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Suppan
ஜூன் 03, 2026 16:34

திருவள்ளுவர் வெள்ளை உடைதான் அணிந்து இருந்தார் என்பதற்கு திருட்டு திராவிடங்களிடம் ஆதாரம் உள்ளதா ? அவரின் உருவச்சிலைக்கு எந்த இராத்தில் உடை அணிவித்தால் என்ன ? வேண்டுமானால் உங்களுடைய உடையை அணிவித்துக்கொள்ளுங்கள் . கோபால்சாமிக்கு வயதாகி விட்டது. சன்யாசம் வாங்கிக்கொண்டு காவி உடை அல்லது வெள்ளை உடை அல்லது கருப்பு உடை அணியட்டும் . குடி முழுகிவிடாது


கண்ணன்
ஜூன் 03, 2026 11:11

அதுதானே, டிஃபென்டர் கார் பெரிதா அல்லது ஸோஃபா ஸெட் பெரிதா?


duruvasar
ஜூன் 03, 2026 09:52

கவ்வி உடை அணிவிக்கக்கூடாது என சொல்வதற்கு இவர் யார். நீயே ஒரு தெலுங்கன்.


D.Ambujavalli
ஜூன் 03, 2026 07:20

ஒரு சீட்டை வைத்துக்கொண்டு. உள்ள. இவரை, விஜய் துணை. முதல்வர். ஆக்குவாரா. என்ற. கற்பனை. என்னவோ, இவர் சோபாவுக்கு. ஆசைப்படவில்லை. என்பதை. பெரிய. போல. அலட்டிக்கொள்கிறாரே கிடைத்த. ஒரு. எம்.பி. சீட், இவர். வெற்றி. என்பதை. அனுபவித்துக்கொண். ஒரு. மூலையில். இருந்துவிட்டு போக. வேண்டியதுதான் இவரால், 9. சீட்டுகளில், ,திமுகவுக்குக் கிடைத்திருக்கும் அதையும் கெடுத்ததுதான். இவர். செய்த. ‘மகத்தான’. தியாகம்


Raajan
ஜூன் 03, 2026 07:13

டிக்கெட் வாங்கி தானே பயணம் செய்வீர்கள்? இல்லை இதிலும் உங்கள் ஆருயிர் நண்பர் கட்டுமரம் வழி தானா?


சமீபத்திய செய்தி