டவுட் தனபாலு
தமிழக தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா: சட்டசபை தேர்தலில் ஓட்டளித்தது போலவே, வரும் உள்ளாட்சி தேர்தலிலும், 'விசில்' சின்னத்துக்கு தமிழக மக்கள் ஓட்டளிக்க வேண்டும். அப்போது தான், மக்களுக்கு தேவையான குடிநீர், சாலை, கழிவுநீர் கால்வாய் போன்ற அடிப்படை பிரச்னைகளை சரி செய்து, தீர்வு காண முடியும். டவுட் தனபாலு: அது சரி... 'உள்ளாட்சி தேர்தலிலும் எங்களுக்கு தான் ஓட்டு போடணும்... அப்படி போட்டால் தான், உங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவோம்'னு, மக்களை செல்லமா மிரட்டுறீங் களோ என்ற, 'டவுட்' தான் வருது! தி.மு.க., தலைவர் ஸ்டாலின்: நான் ஊட்டி வளர்த்த தி.மு.க., இளைஞரணி, 47ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. தனி அலுவலகம், தமிழகம் முழுதும் கிளை வரை நிர்வாகிகள் என, தி.மு.க.,வின் முன்வரிசை படையணியாக பணியாற்றும் இளைஞரணியின் தொண்டர்கள் அனைவரையும் பாராட்டுகிறேன். இனி வரும் காலம், முன்பை விட இளைஞரணி இரு மடங்கு உழைக்க வேண்டிய காலம். உழைப்பை கொடுப் போம்; தி.மு.க.,வை காப்போம்; தமிழகம் காப்போம். டவுட் தனபாலு: இளைஞரணியின் வளர்ச்சிக்கு உங்க கட்சியில, எத்தனையோ பேர் உழைச்சிருக்காங்க... உங்க உழைப்பும் அபாரமானது என்பதிலும், 'டவுட்'டே இல்லை... உங்க பிள்ளை மாதிரி இளைஞரணியை ஊட்டி வளர்த்ததால் தான், உங்க மகன் உதயநிதியையே அதற்கு செயலரா நியமிச்சிருக்கீங்க என்பதிலும், 'டவுட்'டே இல்லை! காங்., தமிழக மூத்த தலைவர் திருநாவுக்கரசர்: தேர்தலுக்கு முன், பெரும்பான்மை முடிவுப்படி தி.மு.க., கூட்டணியில் போட்டியிட்டோம். தேர்தலுக்கு பின், த.வெ.க.,வுக்கு எம்.எல்.ஏ.,க் கள் பற்றாக்குறை ஏற்பட்டபோது, காங்கிரஸ் மற்றும் சில கட்சி எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு கொடுத்தனர். இதை, ஏமாற்றிய தாகவும், துரோகம் செய்ததாகவும் கூறி, காங்கிரசை, தி.மு.க., திட்டுவதும், தி.மு.க.,வை காங் கிரஸ் திட்டுவதும் தேவையில்லா தது. கூட்டணி என்பது, தேர்தலில் வெற்றி பெற ஏற்படுத்தும் தற்காலிக உடன்பாடே தவிர, காலாகாலத்துக்குமான நிரந்தர ஒப்பந்தம் இல்லை. டவுட் தனபாலு: ஒருவேளை, நீங்க இடம்பெற்றிருந்த தி.மு.க., கூட்டணி ஜெயிச்சு மீண்டும் ஆட்சிக்கு வந்திருந்தால், 'தேர்த லுடன் கூட்டணி முடிஞ்சிடுச்சு'ன் னு சொல்லிட்டு வெளி யில போயிருப்பீங்களா...? ஆளுங் கட்சி கூட்டணியில் மட்டுமே இருக்கணும் என்ற கொள்கை முடிவு ஏதும் எடுத்திருப்பீங்களோ என்ற, 'டவுட்' தான் வருது!