உள்ளூர் செய்திகள்

 டவுட் தனபாலு

காங்., கட்சியைச் சேர்ந்த, கரூர் - எம்.பி., ஜோதிமணி: மோடி அரசை அச்சமற்ற முறையில் எதிர்த்து, வீழ்த்தக்கூடிய வல்லமை எதிர்க்கட்சித் தலைவர் ராகுலுக்கு மட்டுமே உள்ளது. 2029ல் ராகுல் தான் பிரதமர். 'மீண்டும் பிரதமராக மோடி வருவார்' எனவும், ராகுல் பின்தங்கியிருப்பதாகவும் சமீபத்தில் கருத்து கணிப்புகள் வந்தன; இவை கருத்து திணிப்புகள். மோடியின் வீழ்ச்சி வெளிப்படையாக தெரிவதை மறைக்க, இதுபோன்ற கருத்துக்களை பரப்புகின்றனர். டவுட் தனபாலு: அது சரி... காங்., கட்சியின் தலைவராக, 2017ல் ராகுலை நியமிச்சாங்களே... 2019 லோக்சபா தேர்தல் தோல்வியை தாங்க முடியாம, 18 மாசத்துலயே அந்த பதவியில் இருந்து ராகுல் விலகிட்டாரே... தப்பி தவறி ராகுல் பிரதமர் ஆகிட்டாலும், 150 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டை நிர்வாகம் பண்ண முடியாம, பாதியில ஓட்டம் பிடிக்க மாட்டார்னு, 'டவுட்' இல்லாம உங்களால சொல்ல முடியுமா? காங்., கட்சியைச் சேர்ந்த, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல்: நாட்டில் இரு விதமான அமைப்புகளை, பிரதமர் மோடி அரசு உருவாக்கியுள்ளது. ஒன்று கோடீஸ்வரர்களுக்கானது; மற்றொன்று ஏனைய மக்களுக்கானது. கடன் செலுத்த தவறினால், விவசாயிகள் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனால், சில தொழிலதிபர்கள் வங்கி பணத்தை தங்கள் சொத்தாகவே நினைக்கின்றனர். டவுட் தனபாலு: மத்தியில் உங்க கட்சி தலைமையிலான கூட்டணி ஆட்சி நடந்தப்ப தான், வங்கியில் 9,000 கோடி ரூபாய் கடன் வாங்கிட்டு, 'டிமிக்கி' குடுத்த விஜய் மல்லையா, ஐ.பி.எல்., கிரிக்கெட்டில் மோசடியில் ஈடுபட்ட லலித் மோடி எல்லாம் வெளிநாடு களுக்கு தப்பி ஓடினாங்க என்பதை மறந்துட்டீங்களோ என்ற, 'டவுட்' தான் வருது! தி.மு.க., தலைவர் ஸ்டாலின்: கடந்த 2018 ஆக., 28ல், தி.மு.க., தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டேன். மாற்றங்கள் நம்மில் இருந்து தொடங்கட்டும் என செயற்குழுவில் பேசியிருந்தேன். கட்சி தலைவராக ஒன்பதாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நாளில், அப்படி ஒரு மாற்றத்தை, மறுசீரமைப்பை அறிவித்துள்ளேன். கட்சி நலனை முன்னிறுத்தி செய்யப்படும் இந்த மறுசீரமைப்புக்கு, அனைவரும் துணை நிற்க வேண்டும். டவுட் தனபாலு: கட்சியின் கிளை, ஒன்றியம், நகரம், மாவட்ட நிர்வாகிகளுக்கு வயது வரம்பு நிர்ணயம் பண்ணியிருக்கீங்களே... நல்ல விஷயம் தான்... அதேநேரம், இவங்களை எல்லாம் வழிநடத்தப் போற தலைவர் உள்ளிட்ட தலைமை கழக நிர்வாகிகளுக்கு மட்டும் எந்த வயது வரம்பும் நிர்ணயிக்காதது ஏன் என்ற, 'டவுட்' வருதே! lll


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Anantharaman Srinivasan
ஆக 31, 2026 19:47

கலைஞர் முதல்வரான போதே திமுக கார்பொரேட் கம்பெனி ஆகி கோபாலபுரத்துக்கு சொந்தமாகி விட்டது. இனி கருணாநிதி குடும்ப உறுப்பினர்கள் தான் Board of Directors. அவங்களுக்கு மட்டும் வயது வரம்பு கிடையாது. இதற்கு ஒத்துக்கொண்டு, இஷ்டப்பட்டால் திமுகவில் இணைந்து அரசியல் வியாபரம் செய்யலாம்.


Anantharaman Srinivasan
ஆக 31, 2026 19:38

இரண்டு நாட்டு குடியுரிமை வைத்துக்கொண்டு ராகுல் பிரதமர் ஆக முடியுமா..?


D.Ambujavalli
ஆக 31, 2026 16:59

உங்கள். 'மாற்றத்துக்கு. '. ஆளாகும். Super Seniors சேர்ந்து, 'எங்கள் அருமை. அண்ணன் தானைத் தலைவர். கலைஞர் 93. வயதுவரை கட்சியில். கோலோச்சினாரே, அவரைவிட. எங்களுக்கு. வயதாகவில்லையே. என்று கூக்குரலிடலாம் ' இன்பநிதி யின் கீழே. கூட. பணியாற்றுவேன்.' என்று. வசனம். பேசிய. 'தாத்தாவை'. இப்போதே. ஓரங்கட்டினால் அவர். எப்படிப். பொறுப்பார் ?


D.Ambujavalli
ஆக 31, 2026 16:51

உங்களால். பெரியப்பா, சிற்றப்பா. மாமா என்று. அழைக்கப்படும். Super Seniors ஒரே. குரலில். 'உங்கள். அப்பா- எண்கள்


D.Ambujavalli
ஆக 31, 2026 16:49

மாற்றம். என்று கொண்டுவந்து. 'ஒதுக்க'. நினைக்கும். உங்கள். - பெரியப்பா, சிற்றப்பா. மாமா= என்று. உங்களால். அழைக்கப்படும். Super சேணியர்ஸ். Seniors


கண்ணன்
ஆக 31, 2026 11:08

ராகுல் இன்னும் தூங்கிக் பொண்டிருப்பதாகத் தெரிகிறது அப்படியேதான் ஜோதிமணியும்


பேசும் தமிழன்
ஆக 31, 2026 09:30

ஏம்மா... ராகுல் அதற்க்கு சரிபட்டு வரமாட்டார் என்று... சின்ன குழந்தைக்கு கூட தெரியும்.... நீ என்னம்மா புதுசா கதை விடுற ? கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கே உதிக்கலாம்... ஆனால் ராகுல் பிரதமாராக முடியாது.


Lakshminarasimhan
ஆக 31, 2026 07:59

டவுட் தனபாலு வாயிலாக தினமலர் செயல் படுது என்கிற டவுட் வருதே ?


Chandhra Mouleeswaran MK
ஆக 31, 2026 06:34

""மாற்றம் நம்மிடமிருந்து தொடங்கட்டும்" என்று ஒரு கச்சனத்திற்காகச் சொன்னால் அதைத் தப்பர்த்தம் பண்ணிக் கொண்டு எங்கள் மீதே திருப்பி விடக்கூடாது உடன்பிறப்புக்களே ஆக, ஆக, ஆக - - - "நம்மில்" என்றால் " பழம் பெருச்சாளிக் கிழவாடிக் கூட்டமான எங்கள் ஐம்பது பேரைத் தவிர்த்து "மற்ற நம்மில்" என்று தெளிவாக அர்த்தம் எடுத்துக் கொள்ள வேண்டும் நீங்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை