உள்ளூர் செய்திகள்

 டவுட் தனபாலு

த.வெ.க.,வைச் சேர்ந்த, தமிழக மின் துறை அமைச்சர் நிர்மல் குமார்: கடந்த தி.மு.க., ஆட்சியில், கனிம வளங்கள் முறையான அளவீடு இல்லாமலும், உரிய ஜி.எஸ்.டி., செலுத்தாமலும் ஆயிரக்கணக்கான வாகனங்களில், அண்டை மாநிலங்களுக்கு கடத்தி செல்லப்பட்டன. ஒவ்வொரு மாவட்டத்திலும் குறுநில மன்னர்கள் போல் அமைச்சர்கள் செயல்பட்டு, ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் வசூல் செய்தனர். ஆனால் தற்போது, விதிகள் அனுமதித்த அளவில் மட்டுமே கனிம வளங்களை எடுக்க நாங்கள் திட்டங்கள் வகுத்துள்ளோம். டவுட் தனபாலு: கனிமவளக் கொள்ளையை தடுத்திருக்கும் த.வெ.க., அரசை, 'டவுட்' இல்லாம பாராட்டலாம்... ஆனாலும், இந்த துறையில் கோடிகளை குவித்த அதிகாரிகளும், குவாரி உரிமையாளர்களும் மறுபடியும், 'மாமூல்' வாழ்க்கைக்கு திரும்ப துடியா துடிப்பாங்க... அதுக்கு இடம் தராம நீங்க உஷாரா இருக்கணும் என்பதிலும், 'டவுட்'டே இல்லை! பா.ஜ.,வைச் சேர்ந்த, பீஹார் மாநில லோக்சபா எம்.பி., ரவிசங்கர் பிரசாத்: நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 7.8 சதவீதமாக உள்ளது. நம் பொருளாதாரம் இறந்து விட்டதாக கூறிய காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், இதற்கு என்ன சொல்ல போகிறார்? பொய் சொன்னதற்காக அவர், நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். டவுட் தனபாலு: எந்த எதிர்க்கட்சியாவது ஆளுங்கட்சியை பாராட்டுமா? அவ்வளவு ஏன்... நீங்க எதிர்க்கட்சியாக இருக்கும் மாநிலங்களில், ஆளுங்கட்சிகளை எங்காவது பாராட்டியிருக்கிறீர்களா? 'பொய் சொன்னதுக்காக மன்னிப்பு கேட்கணும்'னு, எல்லாரும் கிளம்பிட்டா, நாட்டில் முக்கால்வாசி அரசியல் தலைவர்கள் தினமும் மன்னிப்பு கேட்டுட்டே தான் இருக்கணும் என்பதில், 'டவுட்'டே இல்லை! பத்திரிகை செய்தி: 'தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையால், கடந்த மாதம் 19 அரசு அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில், உதவி செயற்பொறியாளர், உதவி மின் பொறியாளர் உட்பட 19 பேர் கைது செய்யப்பட்டனர். சோதனையில், அதிகாரிகளின் அலுவலகங்களில் இருந்து, கணக்கில் வராத 1.21 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது' என, லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் தெரிவித்துள்ளனர். டவுட் தனபாலு: அது சரி... 'லஞ்சம் இல்லாத அரசு அலுவலகங்கள்' என்ற கொள்கையுடன் முதல்வர் விஜய் உழைச்சாலும், 59 வருஷங்களா நடந்த திராவிட கட்சிகள் ஆட்சியில, 'வாங்கியே' பழகிட்ட அதிகாரிகள் அவ்வளவு சீக்கிரம் திருந்திடுவாங்களா...? ஆனாலும், இதுபோன்ற நடவடிக்கைகள் தீவிரமானா, முதல்வர் விஜயின் கனவு நனவாகும் என்பதில், 'டவுட்'டே இல்லை!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

D.Ambujavalli
செப் 04, 2026 19:59

19. அதிகாரிகளிடம். வெறும் 1. 2. கோடி. தானா? கணக்கு நிறைய. உதைக்கிறதே துறை. மாற்றல், ஊர் மாற்றல். …. அதிகம். போனாலே. சஸ்பெண்ட். அவர்கள் பனங்காட்டு. நரிகள்


sankar
செப் 04, 2026 09:51

ஆனால் ஒரு விஷயம் சார் - திமுகவை கிழித்து தொங்கவிடுவது மகிழ்ச்சியாக இருக்கிறது - தமிழக வாக்காளர் ஒவ்வொருவரின் உள்ளக்கிடக்கையும் வெற்றிகளகம் நண்பர்கள் மூலமாக வெளிப்படுகிறது - எம் ஜி ஆர் & அம்மா வழியில் இவர்கள் எடுத்து உள்ள சிறப்பான ஆயுதம் இது - வாழ்த்து மாலையே சூட்டலாம்


Lakshminarasimhan
செப் 04, 2026 07:12

பரம யோக்கியர்கள் என பறை சாற்றிடும் அயோக்கிய தற்குறி கும்பலின் கொள்ளை திராவிட காட்சிகளையே மிஞ்சும் அளவில் ஊழல் பெருத்துள்ளது ஆனால் தினமலர் இந்த தற்குறிகளுக்கு முட்டு கொடுப்பது சரியல்ல


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை