உள்ளூர் செய்திகள்

 டவுட் தனபாலு

காங்கிரசை சேர்ந்த, தமிழக உயர் கல்வி துறை அமைச்சர் விஸ்வநாதன்:

லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் பிரதமராக வேண்டும் என்ற எண்ணம் தான், நாடு முழுதும் உள்ள மக்கள் மத்தியில் உள்ளது. எனவே, த.வெ.க., அமைச்சர் நிர்மல்குமார் உட்பட யார் என்ன சொன்னாலும், 2029 லோக்சபா தேர்தலில் முதல்வர் விஜய், பிரதமர் வேட்பாளராக ராகுலை முன்னிறுத்துவார்.

டவுட் தனபாலு:

'ராகுல் பிரதமராகணும்'னு நாட்டு மக்கள் நினைக்கிறதா சொல்றீங்களே... முதல்ல, ராகுலுக்கே அந்த எண்ணம் இருக்கா என்ற, 'டவுட்' தான் வருது... எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலேயே பொறுப்பா நடந்துக்காத அவர் பிரதமராவார்னு, எந்த அடிப்படையில் நம்புறீங்க என்ற, 'டவுட்'டும் சேர்ந்தே வருது! ---

மா.கம்யூ., தமிழக செயலர் சண்முகம்:

நாடு முழுதும், 13 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்களை, பட்டியலில் இருந்து நீக்கி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இதற்கு காரணமான தலைமை தேர்தல் கமிஷனரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும். வாக்காளர்களை நீக்குவதன் மூலம் ஆட்சியை பிடிக்கும் முயற்சியை தடுக்கவும், நீக்கப்பட்ட வாக்காளர்களை மீண்டும் சேர்க்கவும் வலியுறுத்தி, வரும் அக்., 1ல், தமிழகம் முழுதும் இடதுசாரி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கும்.

டவுட் தனபாலு:

பா.ஜ., ஆளும் மாநிலங்கள்லயும் சேர்த்து தானே, 13 கோடி வாக்காளர்களை நீக்கியிருக்காங்க... இறந்தவங்க, இடம் மாறியவங்க பெயர்களில் எல்லாம் கள்ள ஓட்டுகளை போட்டு ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கிட்டு இருந்ததை, தேர்தல் கமிஷன் தடுத்து நிறுத்தியிருக்கு என்பது தான், 'டவுட்' இல்லாத உண்மை! ----

தமிழக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி:

ஆளும் த.வெ.க.,வினர், தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் மீது வழக்கு போடுகின்றனர்; அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களுக்கு பெட்டி கொடுக்கின்றனர். பதவி ஏற்று, 10 நாட்களில் ராஜினாமா செய்து விட்டு, மீண்டும் இடைத்தேர்தலில் போட்டியிடுவோரை வெற்றி பெற வைத்தால், அவர்கள் சட்டசபைக்கு சென்று பாட்டு பாடி, 'ரீல்ஸ்' போடுவர். அ.தி.மு.க.,வுக்கு ஓட்டு போட்டால், த.வெ.க.,விடம் பெட்டி வாங்கிக் கொண்டு கட்சி மாறி விடுவர்.

டவுட் தனபாலு:

அது சரி... அதேநேரம், இடைத்தேர்தலில் தி.மு.க.,வுக்கு மக்கள் ஓட்டு போட்டா மட்டும் என்ன மாற்றம் வந்துடும்... இப்ப உங்களிடம் இருக்கும், 59 எம்.எல்.ஏ.,க்களுடன் இரண்டு பேரும் சேர்ந்து, சட்டசபையில் கூச்சல், குழப்பம் பண்ணிட்டு வெளிநடப்பு தான் செய்வீங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி