உள்ளூர் செய்திகள்

டவுட் தனபாலு

பா.ம.க., செய்தி தொடர்பாளர்கே.பாலு: நடிகர் விஜய் புதிதாககட்சி துவங்கி இருக்கிறார். அரசியலில் நுழைந்து யார் வேண்டுமானாலும் கட்சி துவங்கலாம்; தவறில்லை. அதுதான் ஜனநாயகமும் கூட. கட்சி துவங்கி இருக்கும் நடிகர் விஜய்,தன் கொள்கைகளாக அறிவித்திருக்கும் விஷயங்களில்,90 சதவீதம் அளவுக்கு பா.ம.க.,வின்கொள்கைகளே இடம் பெற்றுள்ளன. டவுட் தனபாலு: அது சரி... 'ரெண்டு கட்சிகளின் கொள்கையும் ஒண்ணுதான்... திராவிட இயக்கங்களை வீழ்த்துவதே எங்கள் லட்சியம்'னுசொல்லி, விஜய் கட்சியுடன்கூட்டணி அமைக்க எழுதப்படும்முன்னுரையா இது என்ற, 'டவுட்' வருதே!நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: தீவிரவாதியை பிடிப்பது போல தனிப்படை அமைத்து, ஹைதராபாதுக்கு சென்று நடிகை கஸ்துாரியை கைது செய்யும் அளவுக்கு, அவர் செய்த தவறு என்ன? மன்னிப்பு கேட்ட பின்பும், அவரை சிறைப்படுத்துவது அநியாயம். எவ்வளவோபேரை தி.மு.க.,வினர் தனிப்பட்ட முறையில் விமர்சித்துஉள்ளனர். குடும்பங்களை பற்றி,தாய், தந்தையர் குறித்து கேவலமாக பேசி இருக்கின்றனர்.அதற்கெல்லாம் யார் நடவடிக்கைஎடுப்பது?டவுட் தனபாலு: நடிகை குஷ்புகுறித்து அவதுாறாக பேசிய தி.மு.க.,பேச்சாளர் சிவாஜி கிருஷ்ண மூர்த்தியை, கட்சியை விட்டு நிரந்தரமா நீக்குவதாக அறிவிச்சாங்க... ஆனா, இப்பவும்அவர் தி.மு.க., மேடை களில்பேசிட்டு தான் இருக்கார்... 'மாமியார் உடைத்தால் மண் சட்டி;மருமகள் உடைத்தால் பொன் சட்டி' என்ற கதை தான்கஸ்துாரி விவகாரத்திலும் நடக்குதுஎன்பதில், 'டவுட்'டே இல்லை!அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் தங்கமணி: 'தி.மு.க., கூட்டணி வலுவாக உள்ளது. தி.மு.க., ஆட்சியில் மக்கள் முகமலர்ச்சியோடு இருக்கின்றனர். அதனால் தான், நான் போகும் இடங்களில் எல்லாம், அதே முக மலர்ச்சியோடு என்னை வரவேற்கின்றனர்; வாழ்த்துகின்றனர்' என, முதல்வர் ஸ்டாலின், வார்த்தைக்கு வார்த்தைஇல்லாத ஒன்றை சொல்லி, தானே பெருமைப்பட்டு கொள்கிறார். டவுட் தனபாலு: எதிர்க்கட்சியான உங்களிடம் இருந்து, வாழ்த்தையும், பாராட்டையும்எதிர்பார்க்க முடியாது... கூட்டணிகட்சிகள் எல்லாம், ஆளுங்கட்சியை திட்டாம அடக்கி வாசிக்கிறதேபெரிய விஷயம்... அதனால தான், முதல்வர், தனக்கு தானே பாராட்டு பத்திரம் வாசிக்கிறாரோ என்ற, 'டவுட்'தான் வருது!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Anantharaman Srinivasan
நவ 19, 2024 23:07

நடிகர் விஜய்,தன் கொள்கைகளாக அறிவித்திருக்கும், 90 சதவீதம் எங்கள் கட்சி கொள்கைககளென்று எல்லா கட்சியும் சொல்லிக்கொள்கின்றன. அரசியல் கட்சிகளின் ஒரே நோக்கம் மக்களின் ஓட்டுக்களை ஏமாற்றி பறிப்பது. அப்படியிருக்கையில் விஜய் கட்சி மட்டும் வேறு என்ன மாதிரி கொள்கையை அறிவிக்க முடியும். மற்ற கட்சிகளைப்போல் ஈயடிச்சான் காப்பி தான். பத்தோடு பதிணெண்ணு.. கும்பலோடு கோவிந்தா..


D.Ambujavalli
நவ 19, 2024 17:53

கூட்டங்களில் பொறுக்கி எடுத்து , முக்கியமாகத் தாய்மார்களை செட் அப் செய்து சிரித்த முகத்துடன் போட்டோ எடுத்துக்கொண்டு விட்டாரே மாநில மக்கள் பூராவும் அப்படியே ஆட்சியின் மேன்மையை உற்சங்கமாகிவிட்டார்கள் என்று certificate கொடுத்துக்கொள்கிறாரா ?


சமீபத்திய செய்தி