உள்ளூர் செய்திகள்

டவுட் தனபாலு

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: ஜாதி ஜாதி என சொல்லி,தமிழக மக்கள் என்னை குறுகியவட்டத்தில் அடைத்து விட்டனர். மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரும்என்னிடம் வந்து, 'என்ன வரம் வேண்டும்' என கேட்டால், 'ஒரு சொட்டு மது இல்லாத தமிழகம், ஒரு சொட்டு நீர் கூட கடலுக்கு போகாத தமிழகம், எங்கும் கஞ்சாவிற்பனை செய்யாத தமிழகம் வேண்டும்' என கேட்பேன்.டவுட் தனபாலு: இப்படி தனித்தனியா மூணு வரங்களைகடவுளிடம் கேட்பதற்கு பதிலாக, 'தமிழகத்தில் பா.ம.க., ஆட்சி அமைய வேண்டும்' என்ற ஒரே வரத்தை கேட்டா போதுமே... உங்க ஆட்சி மட்டும் வந்துட்டா, இந்த மூணு வரங்களும் தமிழகத்துக்கு தானா வந்துடும் என்பதில், 'டவுட்'டே இல்லை!தமிழக முன்னாள் முதல்வர்பன்னீர்செல்வம்: திருநெல்வேலி,தென்காசி, துாத்துக்குடி உள்ளிட்டதென் மாவட்டங்களில் கனமழைபெய்து, இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. குடிசைகள், வீடுகள், உடைமைகள், வாகனங்கள் சேதத்திற்கு ஏற்ப நிவாரணத் தொகை மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு தலா 25 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும்.டவுட் தனபாலு: நீங்களும் முதல்வர் மற்றும் துணை முதல்வராஇருந்திருக்கீங்க... நீங்க முதல்வராக இருந்தப்ப தான், 'வர்தா' புயல் வீசியது... அதுல உயிரிழந்தவங்களுக்கு 25 லட்சம் ரூபாய் குடுத்தீங்களா...? எதிர்க்கட்சி வரிசையில் இருந்தாலே,ஏத்துக்க முடியாத கோரிக்கையா தான் வைப்பீங்களோ என்ற, 'டவுட்' தான் வருது!தி.மு.க., ராஜ்யசபா எம்.பி.,சிவா: பார்லிமென்டில் எதிர்க்கட்சியினரை பேச அனுமதிப்பதில்லை. ஆளுங்கட்சியினர் பேசுவது மட்டும் தான், சபை குறிப்பில் இடம் பெறுகிறது; மற்றவர்கள் பேசுவது நீக்கப்படுகிறது. எதிர்க்கட்சியினர் அமளி செய்வது போன்ற தோற்றம் மட்டுமே சபைக்கு வெளியே பரப்பப்படுகிறது.டவுட் தனபாலு: நீங்க மத்தியஅரசு மீது சொல்ற அத்தனை குற்றச்சாட்டுகளையும், தமிழக எதிர்க்கட்சிகள் உங்க கட்சி தலைமை மீது சுமத்துறாங்களே...பார்லிமென்ட்ல நீங்க சுட்டிக்காட்டுற அத்தனை குறைபாடுகளும், தமிழக சட்டசபையிலும்அச்சு பிசகாம அப்படியே நடக்குதுஎன்பதில், 'டவுட்'டே இல்லை!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

R Elayaperumal
டிச 18, 2024 23:16

சாதி சாதின்னு மக்கள் சொன்னாங்களா? நீங்க சொன்னீங்களா?


Anantharaman Srinivasan
டிச 18, 2024 20:23

சிவா..நீங்க சுட்டிக்காட்டுற அத்தனை குறைபாடுகளும், தமிழக சட்டசபையிலும் அச்சு பிசகாம அப்படியே நடக்குது. இன்றைய மாமியாரும் மருமகளாய் இருந்தவரே...


Anantharaman Srinivasan
டிச 18, 2024 20:18

ஜாதி ஜாதி என சொல்லி,தமிழக மக்கள் என்னை குறுகிய வட்டத்தில் அடைத்து விட்டனர். கப்ஸா விடரான் பாரு. உன் ஜாதி ஆளுங்க வேணா நம்பலாம். எல்லா மக்களும் முட்டாள்கள் அல்லர்.


Purushothaman
டிச 18, 2024 18:42

டாக்டர் விட அதிகம் படித்த புத்திசாலிகள்


Suppan
டிச 18, 2024 16:37

ஐயா ராமதாசு கடலுக்குள் நல்ல நீர் போகவில்லையென்றால் கடல் நீரில் உப்பு அதிகமாகி அருகிலுள்ள விளை நிலங்களை பாழ்படுத்திவிடும். பிறகு அவை உப்பளங்கள்தான்.


Guna Gkrv
டிச 18, 2024 14:09

ராமதாஸ் அவர்கள் இவளவு நாட்கள் கோமாவில் இருந்தாரா ?


srinivasan
டிச 18, 2024 05:49

பார்லிமெண்டில் எதிர்கட்சிகள் பேச்சா பேசறாங்க. ஷேம், ஷேம் என்று கத்திக் கொண்டு வெளிநடப்பு செய்யவே உங்களுக்கு நேரம் சரியா இருக்கு. களை எடுத்துச் செ ல்லி மக்களின் தே வைகளை பூர்த்தி செய்யவா போகிறீர்கள். கே ண் டீனில் சாப்பிட்டு தூங்க தான் போகிறீர்கள்.


புதிய வீடியோ