உள்ளூர் செய்திகள்

டவுட் தனபாலு

தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை: தமிழகத்தில், திராவிட கட்சிகள் இல்லாதகட்சிகள் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பை பார்க்கிறோம். மக்கள் புதுவித ஆட்சியை எதிர்பார்க்கின்றனர். வரும் 2026 தேர்தல்புதிய களமாக இருக்கும். பா.ஜ.,விடம் வலிமையான கூட்டணிஉள்ளது. கூட்டணிக் கட்சிகள் இணக்கமாக உள்ளன. டவுட் தனபாலு: திராவிட கட்சிகள் ஆட்சியில், மக்கள் வெறுத்து போயிருப்பது என்னமோஉண்மை தான்... ஆயினும், அவங்களது வலுவான கட்டமைப்பை உடைக்கும் அளவுக்கு, தமிழகத்தில் இதுவரை எந்த கூட்டணியும் அமையலை... 2026 தேர்தலில் அப்படி ஒரு பலமான கூட்டணியைநீங்க அமைத்தாலே, பாதி வெற்றிதான் என்பதில், 'டவுட்'டே இல்லை!மா.கம்யூ., கட்சியின் சி.ஐ.டி.யு.,தொழிற்சங்க பொதுச்செயலர் ஆறுமுக நயினார்: போக்குவரத்து கழக ஓய்வூதியர்களின் அகவிலைப்படி உயர்வை மறுத்து, அநீதி இழைத்தது அ.தி.மு.க., அரசு. அந்த வஞ்சனையை தொடர்ந்து அமல்படுத்தி, மிகக் கடுமையானபொருளாதார வன்முறையை, ஓய்வூதியர்கள் மீது தி.மு.க., அரசு தொடுத்துள்ளது. அ.தி.மு.க.,- தி.மு.க., அரசுகளுக்கு இடையேஎந்தவித வேறுபாடும் இல்லை. இவ்விரு அரசுகளால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு எதிராக ஒன்றுபட்டு போராட அனைத்து தொழிலாளர்களும், ஓய்வூதியர்களும் முன்வர வேண்டும்.டவுட் தனபாலு: உங்க கட்சியின்மூத்த தலைவர்களான சவுந்தரராஜன், பாலகிருஷ்ணன் போன்றவர்கள் நினைச்சா முதல்வரை உடனே சந்திக்க முடியுமே... அவங்க, இது சம்பந்தமா முதல்வரை பார்த்து பேசினா, பிரச்னை தீர்ந்துடுமே...அதுல, அவங்களுக்கு என்ன தயக்கம் என்ற, 'டவுட்' வருதே!தமிழக பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ.வேலு: ஆற்றுக்குள்கட்டப்படும் பாலத்திற்கும், சாலையில் கட்டப்படும் பாலத்திற்கும் வித்தியாசம் உண்டு. தண்ணீர் திறந்து விடுவதை கணக்கில் கொண்டு ஆற்றுக்குள்பாலங்கள் கட்டப்படுகின்றன. ஆற்றுக்குள் உள்ள பாலங்கள் அதிக தண்ணீர் வருவதால் சேதமடைகின்றன. சமீபத்தில் ஆற்றுக்குள் அடித்து செல்லப்பட்டபாலம் தரம் இல்லாமல் கட்டப்படவில்லை. எதிர்பாராதவிதமாகநீரில் அடித்துச் செல்லப்பட்டது.டவுட் தனபாலு: அகண்ட பெரிய காவிரி ஆற்றில், 2,000 வருஷத்துக்கு முன்னாடி கரிகாலன் கட்டிய கல்லணைஇன்னும் அப்படியே இருக்குது... ஆனா, நீங்க கட்டிய பாலம் மட்டும் எப்படி இடிந்து விழுந்துச்சு...? உங்க இன்ஜினியர்கள் சரியா பிளான் போடலையா அல்லது 'டெண்டர்' எடுத்த கான்ட்ராக்டர் கவுத்துட்டாரா என்ற, 'டவுட்' தான் வருது!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Nagarajan S
டிச 20, 2024 19:17

கல்லணை, மேட்டூர் அணை, சாத்தனூர் ஆணை, ஆழியார் அணை, அமராவதி அணை மேலும் பல தமிழக அணைகள் எல்லாம் எவ்வளவு வெள்ளம் வந்தாலும் எப்படி தாக்கு பிடிக்கின்றன?


Mahendran Puru
டிச 20, 2024 17:22

அரசியலுக்கு தேவை வாய் மட்டும் என்று நினைப்பவர் ஆருத்ரா அண்ணாமலை.


kannan
டிச 20, 2024 13:18

சொந்த ஊரில் சொந்த தொகுதியில் ஜெயிக்க முடியாதவரை தமிழ்நாட்டின் முக்கியமாக அரசியல்வாதி போல ஒரு பத்திரிகை பேசுவதைக் கண்டால் மக்களுக்கு ஏதோ டவுட் வருகிறதே


Anantharaman Srinivasan
டிச 20, 2024 12:24

எந்தவிதமான engineering படிப்பும் இல்லாத காலத்தில் 2000 ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்ட கல்லணை பாலம் இன்னும் தாக்கு பிடிக்குது. கோடிக்கணக்கில் கமிஷன் அடித்ததினால் நேத்தி கட்டின பாலம் இடிந்து போனது என்பதே உண்மை.


Mahendran Puru
டிச 20, 2024 17:21

குஜராத் நிலவரம் நமக்கெதற்கு?


வைகுண்டேஸ்வரன் V
டிச 20, 2024 10:21

"பா.ஜ.,விடம் வலிமையான கூட்டணிஉள்ளது".- எந்த பாஜக விடம்? தமிழ்நாடு பாஜக விடமா?? செம ஜோக்.


Shanmuga Sundaram
டிச 20, 2024 08:48

போக்குவரத்துறையில் மா.கம்யூ ன் இரட்டைவேடத்தை அழகாக தோலுரித்துக்காட்டியமைக்கு நன்றி. உண்டியல் குலுக்கிகள் காலம் முழுவதும் ஆளும்கட்சிக்கு ஜால்ரா அடித்துக்கொண்டு உண்டியல் குலுக்கத்தான் லாயக்கு.


கண்ணன்
டிச 20, 2024 08:28

கம்யூ தலைகள் உள்ளே நுழையும்போதே பணக்கட்டு வரவேற்குமே!


Dharmavaan
டிச 20, 2024 07:20

பாலம் போனதற்கு அந்த மந்திரி தண்டிக்கப்பட வேண்டும் முழு நஷ்ட ஈட்டையும் பெற வேண்டும்


D.Ambujavalli
டிச 20, 2024 06:25

கான்டராக்டரைக் கேட்டால், ‘ஒதுக்கீட்டில், ‘கொடுத்தது’ போக மீதியை வைத்து இவ்வளவுதான் கட்ட முடிந்தது கரிகாலன் காலத்தில் கட்டிங், கமிஷன் எதுவும் இல்லை’ என்பதுதான் காரணம்’ என்று போட்டு உடைத்து விட்டால் என்ன பதில் சொல்வீர்கள் ?


புதிய வீடியோ