உள்ளூர் செய்திகள்

டவுட் தனபாலு

கோவை தெற்கு தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ., வானதி: அம்பேத்கரை உண்மையிலேயேமதிப்பவர்கள், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அரசியல் அதிகாரத்தைவழங்க வேண்டும். பட்டியலினத்தைசேர்ந்த ராம்நாத் கோவிந்தை ஜனாதிபதி ஆக்கியது பா.ஜ., அரசு.இப்போது, பழங்குடியின பெண்மணியை ஜனாதிபதியாக்கிஉள்ளது. ஆனால், அமித்ஷாவுக்குஎதிர்ப்பு தெரிவிக்கும் முதல்வர்ஸ்டாலின், பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவரை துணை முதல்வராக்காமல் தன் மகன் உதயநிதியை ஆக்கியது ஏன்? டவுட் தனபாலு: தப்பி தவறி, பட்டியல் இனத்தை சேர்ந்த ஒருத்தரை தி.மு.க., ஆட்சியில்துணை முதல்வர் ஆக்கிஇருந்தாலும் பெருசா என்ன நடந்திருக்கும்...? உதயநிதிக்கு இப்ப தரப்படும் வானளாவிய அதிகாரம் மற்றும் சுதந்திரத்தை தந்திருப்பாங்களா என்பது, 'டவுட்'தான்!அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்உதயகுமார்: தற்போதைய தி.மு.க.,ஆட்சியில் மக்கள் இழந்தஉரிமையை மீண்டும் அ.தி.மு.க.,ஆட்சியில் பெற்றுத் தருவோம். 'அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணிஏற்பட வேண்டும்' என, அ.ம.மு.க.,பொதுச் செயலர் தினகரன்கற்பனை கலந்த கதையை பேசிவருகிறார். பா.ஜ., அல்லாத, மக்கள் விரும்பும் கூட்டணியை பழனிசாமி அமைப்பார்.டவுட் தனபாலு: 'வரும் 2026 சட்டசபை தேர்தலில், திராவிட கட்சிகள் அல்லாத ஆட்சியை அமைப்போம்'னு அண்ணாமலைஒருபக்கம் சொல்றார்... நீங்க, 'பா.ஜ., அல்லாத கூட்டணி'ன்னு சொல்றீங்க... உங்களுக்கான இந்தமோதல்ல, தி.மு.க., 'ஸ்கோர்' பண்ணிட்டு போயிடுமே என்ற, 'டவுட்' உங்களுக்கு வரலையா?பா.ம.க., கவுரவ தலைவர் ஜி.கே.மணி: வரும் 28ல் நடக்கஇருக்கும் பா.ம.க., பொதுக்குழுவில், கூட்டணி குறித்து முடிவெடுத்து அறிவிக்கப்படும். பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் குறித்த முதல்வரின் பேச்சு பா.ம.க., நிர்வாகிகளையும், தொண்டர்களையும் புண்படுத்திஉள்ளது.டவுட் தனபாலு: முதல்வரின் பேச்சால் பா.ம.க.,வினர் புண்பட்டிருப்பதால், தி.மு.க., கூட்டணியில் உங்க கட்சி சேர வாய்ப்பில்லை என்பதை கோடிட்டுகாட்டிட்டீங்க... மிச்சம் இருப்பதுபா.ஜ.,வும், அ.தி.மு.க.,வும் தான்...அதுல சேருவீங்களா அல்லது உங்க கட்சி தலைமையிலயே புதியஅணியை அமைப்பீங்களா என்ற,'டவுட்' வருதே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Anantharaman Srinivasan
டிச 21, 2024 22:53

தப்பித்தவறி பட்டியல் இனத்தை சேர்ந்த ஒருத்தரை தி.மு.க., ஆட்சியில் துணை முதல்வர் ஆக்கினாலும் பெருசா ஒண்ணும் பவர் இருக்காது. இன்றய மாநகராட்சி மேயர்கள் போல் அலங்கோலப்பட வேண்டியிருக்கும்.


SANKAR
டிச 21, 2024 10:34

Narayan was first sc st president ed by congress.telle WHICH BJP CM IS SC ST


Kannan
டிச 21, 2024 11:37

He is not sc converted Christian


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 21, 2024 07:38

திமுக பட்டியல் இனத்தைச் சேர்ந்தவரை உடனடியாக முதல்வர் ஆக்கவேண்டும் ....


Ravi
டிச 21, 2024 07:06

Only dummy posts are offered by political parties . It’s a face mask strategy played by any party


D.Ambujavalli
டிச 21, 2024 07:06

பேட்டி பேரம் வெற்றிகரமாக முடிந்ததும் பா. ம. க வின் கூட்டணி நாடகம் வெளிச்சமாகிவிடும் எத்தனை புண் படுத்தினால் என்ன, ‘கொடுப்பதைக் கொடுத்தால்’ தானே வந்துவிடுவார்கள் என்பது இரு கட்சிகளுக்கும் தெரியுமே


கிஜன்
டிச 21, 2024 04:18

வார்டு ....ஒன்றிய ...கிளை ....வட்ட ... மாவட்ட ...மாநில .... செயலாளர்கள்ன்னு எத்தனை பதவிகள் ....திமுக ...மற்றும் அதிமுகவில் உள்ளன .... தேஷ்களிடம் ... ஆட்ட தவிர வேறு யார் இருக்காங்க ? இதுல ஆட்சி அமைக்க போறாராமாம் .... அதுதான் பார்த்தோமே .... சினிமாக்காரர்களுக்கும் .... போலீசாரால் தேடப்பட்ட நபர்களுக்கும் சீட்களை வாரி வழங்கியதை ....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை