உள்ளூர் செய்திகள்

டவுட் தனபாலு

தமிழக பா.ஜ., பொருளாளர் எஸ்.ஆர்.சேகர்: இந்தியா முதல் நாடாக உயர வேண்டும்; அதில், தமிழகம் முதல் மாநிலமாக இருக்க வேண்டும் என்பது பா.ஜ., நிலைப்பாடு. இந்தியா, மோடி தலைமையில் முதல் நாடாகி வருகிறது. தமிழகம், இத்தனை நாள் அந்த பக்கத்தை கூட எட்டிப் பார்க்கவில்லை.டவுட் தனபாலு: எதை வச்சு, தமிழகம் முதல் மாநிலம் இல்லன்னு சொல்றீங்க... 'டாஸ்மாக்' மது விற்பனையில், வருஷத்துக்கு, 50,000 கோடி ரூபாயை அள்ளுவதில் தமிழகம் தான் முதலிடம் என்பதை மறந்துட்டீங்களோ என்ற, 'டவுட்' தான் வருது!அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செம்மலை: காலை சிற்றுண்டி திட்டத்தின் வாயிலாக, துவக்கப் பள்ளிகளில் மாணவ - மாணவியர் சேர்க்கை விகிதம் அதிகரித்திருக்கிறது என்பது வேண்டுமானால் உண்மையாக இருக்கலாம். அதே சமயம் முதல்வரிடம் அளிக்கப்பட்ட திட்டக்குழு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி, 'இத்திட்டத்தால் குழந்தைகளின் வயதுக்கு ஏற்ப, அவர்களின் உயரம் கூடியிருக்கிறது' என்பது, முதல்வரை திருப்திபடுத்த மிகைப்படுத்தி சொல்லப்பட்ட தகவலாகத்தான் கருத வேண்டி இருக்கிறது.டவுட் தனபாலு: 'பொய் சொன்னாலும் பொருந்த சொல்லணும்'னு கிராமங்கள்ல சொல்வாங்க... தனக்கு 'ஐஸ்' வைக்கணும்னு அதிகாரிகள் எழுதி தர்ற அறிக்கையை, முதல்வர், 'கிராஸ் செக்' செய்து பார்க்கணும் என்பதில், 'டவுட்'டே இல்லை!அ.தி.மு.க., மருத்துவ அணி மாநில இணை செயலர் டாக்டர்சரவணன்: கேரளாவின் மருத்துவக் கழிவுகளை, கர்நாடக மாநில எல்லையில் தடுத்தது போல தமிழக அரசு தடுக்கவில்லை. கழிவுகளை தமிழகத்தில் சட்ட விரோதமாக கொட்டிவிட்டு, 'கழிவு இல்லாத மாநிலம்' என்று, கேரளா பிரசாரம் மேற்கொள்கிறது. போர்க்கால அடிப்படையில் நோய் தடுப்பு நடவடிக்கை எடுக்காமல், கும்பகர்ணனை போல அமைச்சர் மா.சுப்பிரமணியன் குறட்டை விட்டு துாங்குகிறார்.டவுட் தனபாலு: அமைச்சர்சுப்பிரமணியன், மாரத்தான் ஓடுறதுல ஆர்வமா இருக்காரே...பேசாம, தமிழக எல்லையில்இருந்து கேரளா வரைக்கும்மாரத்தான் ஓடி, அந்த மாநில முதல்வரிடம், 'உங்களது குப்பை தொட்டியா தமிழகத்தை மாத்தாதீங்க'ன்னு வலியுறுத்திட்டு வந்தால், இப்பிரச்னை தீர்ந்துடும் என்பதில், 'டவுட்'டே இல்லை!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Sridhar
டிச 24, 2024 10:46

ஒரு தம்மாத்தூண்டு மாநிலம் அதுவும் திவாலாக்குற நிலமல இருக்குற மாநிலம், அதுக்கு எப்புடி இவ்வளவு தைரியம் வந்துச்சு? சரி அவுங்கள விடுங்க, நம்ம ஆளுங்க அந்த அளவுக்கு தன்மானமே இல்லாத அப்பாவிங்களா? அதெப்படி இவ்வளவு நாளா அவனும் வந்து கொட்டறான், இவிங்களும் அத வேடிக்கை பாத்துட்டு இருக்காங்க?? இன்னும் இது போல எவ்வளவு விசயங்கள் நடந்துக்கிட்டுருக்கோ


Anantharaman Srinivasan
டிச 24, 2024 22:34

திராவிடமாடல் சும்மாவா கொட்டவிட்டிருப்பாங்க.. லாரிக்கு இவ்வளவு என்று அதிலும் கமிஷன் அடித்திருப்பாங்க..


முக்கிய வீடியோ