உள்ளூர் செய்திகள்

டவுட் தனபாலு

தமிழக பா.ஜ., மூத்த தலைவர்தமிழிசை: வி.சி., கட்சி தலைவர்திருமாவளவன், அம்பேத்கரைஎல்லா இடங்களிலும் விட்டுக் கொடுக்க தயாராகி விட்டார். அம்பேத்கரை தலைவராக பார்க்காத காங்கிரசுக்கு வக்காலத்து வாங்குகிறார். ஓட்டு வங்கிக்காக எல்லாவற்றையும், அவர் விட்டு கொடுத்து விட்டார். 'இண்டியா' கூட்டணியில் உள்ளவர்கள், சுயநலவாதிகள் என நிரூபித்துக் கொண்டிருக்கின்றனர்.டவுட் தனபாலு: தெலுங்கானா, புதுச்சேரின்னு இரண்டு மாநில கவர்னராக இருந்துட்டு, இப்ப எந்த பதவியும் இல்லாம வலம் வர்றீங்க... 'இண்டியா' கூட்டணியை இப்படி எல்லாம் விமர்சித்து, பா.ஜ., மேலிட தலைவர்களின் கவனத்தை ஈர்த்து, அடுத்த ரவுண்டு பதவிக்கு அடி போடுறீங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!lllதி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி: கச்சத்தீவை, இலங்கை அரசுக்கு தி.மு.க., அரசு தாரை வார்க்கவில்லை. மத்திய அரசு தாரை வார்த்ததை கண்டித்து, அப்போதைய அமைச்சர் ஓ.பி.ராமனும், நானும், 1974ல் விழுப்புரத்தில்நடந்த கண்டன கூட்டத்தில் பேசினோம். ஆயினும், தி.மு.க., தாரை வார்த்தது என, திட்டமிட்டு பொய் பிரசாரம் செய்கின்றனர்.டவுட் தனபாலு: கடந்த 1974ல், அதாவது 50 வருஷத்துக்கு முன்னாடி, கட்சியில் நீங்க ரொம்ப ஜூனியரா இருந்திருப்பீங்க... சர்வதேச அளவிலான கச்சத்தீவு பிரச்னையில, நீங்க கண்டிச்சு பேசியது எல்லாம், கும்மிடிப்பூண்டி தாண்டி போயிருக்குமா என்பது, 'டவுட்'தான்!lllநாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்சீமான்: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நிச்சயமாக தனித்து போட்டியிடுவோம். தி.மு.க., சார்பில் அங்கு பணியாற்றக்கூடிய அமைச்சர்செந்தில் பாலாஜியை பார்த்து,நாங்கள் பயப்பட அவர் என்ன ஆரியப்படை வீரரா? பணம் கொடுத்தால் தான், தி.மு.க.,வினர் தேர்தல் வேலை செய்வர். அப்படி இருக்கையில் நாங்கள் ஏன் அவரை பார்த்து பயப்பட வேண்டும்.டவுட் தனபாலு: தாராளமா தனியா நில்லுங்க... ஆனா, ஆளுங்கட்சியின் பண பலம், அதிகார பலம், செந்தில் பாலாஜியின் தேர்தல் வியூகத்தை எல்லாம் மீறி, டிபாசிட் தொகையை, உங்க பாணியில் சொல்லணும்னா, 'கட்டுத்தொகை'யை காப்பாத்துவீங்களா என்பது, 'டவுட்'தான்!lll


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

கண்ணன்
டிச 25, 2024 11:23

இப்போதுகூட இவர் பேச்சு கும்மிடிப்பூண்டி-ஏன்-ஆலந்தூர் கூடத் தாண்டாது


Dharmavaan
டிச 25, 2024 09:46

இதற்கு உச்ச நீதியின் செயல்பாடு என்ன வெறும் கண்துடைப்பு கேள்விகள் அப்படியே ஜவ்வு போல் இழுத்து விட்டு முடித்துவிடுவது ஏமாற்று வேலை


D.Ambujavalli
டிச 25, 2024 06:32

ஜாமீனில் வந்த மறுநாளே அமைச்சராக்கி அழகு பார்க்க உள்நோக்கம் இல்லாமலா செய்திருப்பார்? இடைத்தேர்தல் மட்டுமில்லை, சட்டமன்றத் தேர்தலுக்கும் வாரி வழங்குவார் என்றுதானே அவரும் 'நன்றிக்கடனை' சரியாகத் தீர்ப்பார் இந்த வீரியப்பேச்சால் இவர் பேரிழப்பைத்தான் சந்திப்பார்


kantharvan
டிச 25, 2024 09:24

நான் முன்னமே சொல்லி இருக்கேன்?? விலை போனவர்கள் மட்டுமே அடுத்தவரை பார்த்து விலை போயிடுவார்கள் என்று கதறுவார்கள் என்று. என்றாவது திருந்துங்கள் அம்புஜவல்லி. இப்போது நன்கு புரிகிறது செந்தில் பாலாஜியை பார்த்து ஏன் எவ்வளவு பயப்படுதுன்னு . ஒன்றிய அடிமைகள் அமுல் துறையை வைத்து எவ்வளவு உதைத்தாலும் சுவற்றில் அடுத்த பந்து போல செந்தில் இன்னும் வேகத்தோடு வந்து நிற்கிறார்.


முக்கிய வீடியோ