உள்ளூர் செய்திகள்

டவுட் தனபாலு

தமிழக கவர்னர் ரவி: காந்தி மண்டபம், சென்னை கிண்டி தேசிய உயிரியல் பூங்காவை ஒட்டியுள்ள பரந்த நிலத்தில், 1956ம் ஆண்டு காமராஜரால் கட்டப்பட்ட, பிரமாண்டமான நினைவுச் சின்னமாகும். காந்தி பிறந்த நாள் மற்றும் உயிர்த்தியாக தினத்தை, நகர அருங்காட்சியகத்தின் ஒரு மூலையில் நடத்துவதில் ஏதேனும் அர்த்தம் உள்ளதா? தேசப்பிதாவுக்கு உரிய மரியாதை செலுத்தவும், அத்தகைய நிகழ்வுகளை, காந்தி மண்டபத்தில் தகுந்த முறையில் நடத்தவும், முதல்வரிடம் நான் பலமுறை விடுத்த கோரிக்கைகள், பிடிவாதமான மறுப்பை சந்தித்தன. டவுட் தனபாலு: கிண்டி காந்தி மண்டபம் என்பது, தமிழகத்தின் அடையாள சின்னம்... ஒருவேளை, நீங்க கோரிக்கை வைக்காமல் இருந்திருந்தாலே, காந்தி மண்டபத்தில் நினைவு தின நிகழ்ச்சியை நடத்தியிருப்பாங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை: சென்னை, கிழக்கு கடற்கரை சாலையில், நள்ளிரவில் காரில் பயணித்த பெண்களை, தி.மு.க., கொடி கட்டிய காரில் பயணித்த சிலர், குடிபோதையில் வழிமறித்து மிரட்டியுள்ளனர். அப்பெண்களை தாக்க வந்ததோடு, உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில், வீடு வரை துரத்திச் சென்ற காட்சிகள், நெஞ்சை பதற செய்கின்றன.டவுட் தனபாலு: 'இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழகம்' என, ஆளுங்கட்சியினர் பெருமை அடிச்சுக்குறாங்களே... ஆனா, வடமாநிலங்களை விட மோசமான நிலைக்கு, தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு போயிட்டு இருக்கு என்பதற்கு இதுபோன்ற சம்பவங்களே சாட்சி என்பதில், 'டவுட்'டே இல்லை!வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன்: சென்னை ஈ.சி.ஆர்., பகுதியில் இளம்பெண்கள் வந்தகாரை, தி.மு.க., கொடி கட்டிய காரில் வந்த இளைஞர்கள், கும்பலாக துரத்திய சம்பவத்தில், காரில் கட்சிக்கொடி கட்டப்பட்டிருப்பதாலேயே, அவர்கள் தி.மு.க.,வினர் என்ற முடிவுக்கு வந்துவிட முடியாது. மாற்று கட்சியினரும் கூட தி.மு.க., கொடி கட்டி சென்றிருக்கக் கூடுமே.டவுட் தனபாலு: இப்படி எல்லாம் மறுப்பு தெரிவிக்கலாம்னு தி.மு.க.,வினரே யோசனை பண்ணியிருப்பாங்களா என்பது, 'டவுட்'தான்... தி.மு.க.,வுக்கு விழுந்து விழுந்து வக்காலத்து வாங்குறதுல காங்., தலைவர்களுக்கும், உங்களுக்கும் கடும் போட்டியே நடக்குதோ என்ற, 'டவுட்'டும் கூடவே வருது!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

D.Ambujavalli
ஏப் 11, 2025 06:07

என்ன எய்வது? கூட்டணியில் இருந்துகொண்டு ஓர், இரண்டு சீட்டுக்காக எல்லா அநியாயத்துக்கு சப்பைக்கட்டு கட்ட வேண்டியதுதான்


Anantharaman Srinivasan
பிப் 01, 2025 23:13

ECR ரோடில் பெண்களை துரத்திய சம்பவத்தில், காரில் திமுக கட்சிக்கொடி கட்டப்பட்டிருப்பதாலேயே, அவர்கள் தி.மு.க.,வினர் என்ற முடிவுக்கு வந்துவிட முடியாது. வி சி கட்சியினர் கூட தி.மு.க., கொடி கட்டி சென்றிருக்கலாமே.??


K.J.P
பிப் 01, 2025 09:11

அரசு செய்வதெல்லாம் பார்த்தா கோபம் கோபமா வருது.ஆனா அந்த கோபம் என்னைத் தாக்கும் என்று எண்ணும் போது வந்த கோபம் பறந்து போனது.


D.Ambujavalli
பிப் 01, 2025 06:52

திமுகவுக்காக அவசர அவசரமாக அறிக்கை விட்டு good books இல் இடம் பிடிக்க திருமா மிகவேமெனக்கெடுகிறார் எப்படியும் அவர்கள் யாரென்று தெரிந்ததும் திமுக ஒன்று அவர்களை disown செய்யும், அல்லது கட்சியில் இருந்து விலக்கிவிட்டு ‘மனு நீதிச்சோழன்’ வேஷம் காட்டும்


seshadri
பிப் 01, 2025 06:22

இரண்டு எம் பி நான்கு எம் எல் எ சீட்டுக்காக இந்த அளவுக்கு மானங்கெட்ட பிழைப்பு பிழைக்க வேண்டாம்.


கிஜன்
பிப் 01, 2025 03:30

சட்ட மேதை ...அண்ணல் அம்பேத்கர் படத்தினருகே ....இப்படிப்பட்ட குருமா படத்தையும் வைக்கிறார்களே .... சந்தனத்தின் அருகே ....


தனி
பிப் 01, 2025 02:58

ஒருவேளை வசிக ரவுடிகளாக இருப்பார்களோ???


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை