மேலும் செய்திகள்
விநாயகர் கோவிலில் தொழுகை: போதை வாலிபர் அட்ராசிட்டி
27-Oct-2025 | 3
‛தலைக்கு மேலே கிடைத்தது நல்ல வேலை!
26-Oct-2025 | 3
வயிறுன்னு ஒன்னு இருக்குல்ல!
26-Oct-2025
பிரத்யேக இணையதளம்: அரசுப்பள்ளி அசத்தல்
25-Oct-2025 | 1
கோழிக்கோடு, 'செரிபரல் பால்சி' எனப்படும் பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவைச் சேர்ந்த சரிகா என்ற பெண், ஐ.ஏ.எஸ்., -- ஐ.பி.எஸ்., பணியிடங்களுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வில் இரண்டாவது முயற்சியிலேயே வெற்றி பெற்றுள்ளார். ஐ.ஏ.எஸ்., - - ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாகின. இதில் 1,016 பேர் வெற்றி பெற்று, தேர்ச்சி அடைந்துள்ளனர். அவர்களில் கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த சரிகாவும் ஒருவர்.இவருக்கு செரிபரல் பால்சி எனப்படும் பிறவியிலேயே மூளை வளர்ச்சி தடைபட்டது. அதன்பின் இவரது வலது கை செயலிழந்தது. நடப்பதிலும் சிரமம் ஏற்பட்டது. இதனால் சக்கர நாற்காலி உதவியுடன் பள்ளி, கல்லுாரிகளுக்கு சென்று படித்தார். கல்லுாரி முடித்தபின் சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு தயாரானார். தற்போது இரண்டாவது முயற்சியிலேயே, அகில இந்திய அளவில் 922வது இடம் பிடித்து தேர்ச்சி பெற்றுள்ளார். இதுகுறித்து சரிகா செய்தியாளர்களிடம் கூறியதாவது: நான் வெற்றி பெறுவேன் என்று நம்பினேன். தற்போது அது நடந்துள்ளது. என் மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை. சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு தயாராகும் என்னைப் போன்ற மாற்றுத்திறனாளிகளுக்கு எழுத்தாளர் பாலோ கொயலோவின், 'அல்கெமிஸ்ட்' நுாலில் இடம்பெற்றுள்ள புகழ்பெற்ற வரிகளை செய்தியாகக் கூறுவேன். அது, 'நீங்கள் உண்மையிலேயே எதையாவது அடைய விரும்பினால், உங்களுக்கு மொத்த உலகமும் உதவும்' என்பது தான். இவ்வாறு அவர் கூறினார்.
27-Oct-2025 | 3
26-Oct-2025 | 3
26-Oct-2025
25-Oct-2025 | 1