உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / மாரடைப்பால் மகன் மரணம் கண் தானம் செய்த பெற்றோர்

மாரடைப்பால் மகன் மரணம் கண் தானம் செய்த பெற்றோர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தாவணகெரே : மாரடைப்பால் உயிரிழந்த மகனின் இரு கண்களை, அவரது பெற்றோர் தானம் செய்தனர்.தாவணகெரே மாவட்டம், ஹரிஹராவின் ஹொளேசிரிகெரே கிராமத்தை சேர்ந்தவர்கள் ஹனுமந்தப்பா, மம்தா தம்பதி. இவர்களின் மகன் சுனில் குமார் முனியப்பா, 22. நேற்று முன்தினம் வீட்டில் நாற்காலியில், சுனில் குமார் முனியப்பா, 'டிவி' பார்த்து கொண்டிருந்தார். அப்போது கீழே சாய்ந்தார். அதிர்ச்சியடைந்த பெற்றோர் கூச்சலிட்டனர். அக்கம் பக்கத்தினர் வந்து, அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாக, டாக்டர்கள் தெரிவித்தனர். அதிர்ச்சியில் இருந்த பெற்றோர், அவரது கண்கள், இவ்வுலகை பார்க்கட்டும் என்று எண்ணினர்.உடனடியாக மகனின் கண்களை தானம் செய்வதாக டாக்டர்களிடம் தெரிவித்தனர். அவர்களின் ஆலோசனையின்படி, நகரில் சிகடேரி மருத்துவமனைக்கு சுனில் குமார் உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு அறுவை சிகிச்சை மூலம் கண்கள் அகற்றப்பட்டது, பார்வையற்றவருக்கு பொருத்தப்பட்டது.மகனை பிரிந்த சோகத்திலும், கண்களை தானம் செய்ய முன்வந்த பெற்றோரை கிராம மக்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Kundalakesi
மே 09, 2024 17:54

அணைத்து அரசு ஊழியர்கள் மற்றும் அரசு உதவி பெரும் மக்களும் கட்டாயமாக உடல் உறுப்பு தானம் தர சட்டம் இயற்றப்பட வேண்டும்


GANESUN
மே 08, 2024 12:25

துயரத்திலும், சமூக அக்கறை பாரட்டுகள்


Ramesh N
மே 07, 2024 06:18

This must become a habit Excellent gesture


மேலும் செய்திகள்









புதிய வீடியோ