உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / 15 நிமிடத்தில் வீட்டு பணியாளர்: அர்பன் கம்பெனி புதிய சேவை

15 நிமிடத்தில் வீட்டு பணியாளர்: அர்பன் கம்பெனி புதிய சேவை

மும்பை : வீட்டு வேலை செய்வதற்கான தற்காலிக பணியாட்களை, 15 நிமிடங்களில் அனுப்பி வைக்கும் சேவையை, 'அர்பன் கம்பெனி' அறிமுகப்படுத்த உள்ளது.ஹோட்டல்களில் இருந்து உணவுகளை வாங்கி வீடுகளுக்கு விரைவாக, 'டெலிவரி' செய்யும் சேவையை, 'ஸ்விக்கி, சொமாட்டோ' உள்ளிட்ட நிறுவனங்கள் செய்து வருகின்றன. இதன் அடுத்தகட்டமாக, வீட்டுக்கு தேவையான மளிகை உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் 10 - 15 நிமிடங்களில், 'டெலிவரி' செய்வதற்கு, 'செப்டோ, இன்ஸ்டாமார்ட், பிளிங்கிட்' உள்ளிட்டவை முளைத்தன. இந்த வரிசையில் துவங்கப்பட்ட, 'அர்பன் கம்பெனி' என்ற நிறுவனம், வீட்டுக்கு தேவையான எலக்ட்ரீஷியன், பிளம்பர், தச்சர், 'ஏசி' சர்வீஸ் உள்ளிட்ட பணிகளுக்கு ஆட்களை அனுப்பி வைக்கும் சேவையை அளித்து வருகிறது. இந்த நிறுவனம், புதிய பங்கு வெளியிட்டு நிதி திரட்டியும் வருகிறது. இந்நிலையில், வீட்டு வேலைக்கு பணியாட்களை, 15 நிமிடங்களில் அனுப்பி வைக்கும் சேவையை இந்நிறுவனம் துவங்க உள்ளது.'அர்பன் கம்பெனி' செயலி வாயிலாக, பாத்திரம் துலக்குவது, வீடு சுத்தம் செய்வது, துணி துவைப்பது, சமையல் உள்ளிட்ட பணிகளுக்கு பணியாட்கள் வேண்டுமென கோரிக்கை விடுத்தால், 15 நிமிடங்களில் தற்காலிக பணியாளரை வீட்டுக்கு அனுப்பி வைக்கின்றனர்.இந்த சேவையின் சோதனை ஓட்டம் மும்பையில் தற்போது துவங்கியுள்ளது. இந்த தற்காலிக பணியாளர்கள், பணியாற்றும் ஒவ்வொரு மணி நேரத்தின் அடிப்படையில் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை