உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / ஆப்கனில் 6 வயது சிறுமிக்கு 45 வயது நபருடன் திருமணம்

ஆப்கனில் 6 வயது சிறுமிக்கு 45 வயது நபருடன் திருமணம்

காபூல்: ஆப்கானிஸ்தானில் ஏற்கனவே இரண்டு மனைவியர் உடைய 45 வயது நபர், மூன்றாவதாக 6 வயது சிறுமியை கட்டாய திருமணம் செய்துள்ளார். சிறுமிக்கு 9 வயதாகும் வரை பெற்றோர் வீட்டில் இருக்க வேண்டும் என, தலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது.நம் அண்டை நாடான ஆப்கானிஸ்தானில், தலிபான் பயங்கரவாத அமைப்பின் ஆட்சி நடக்கிறது. இங்கு, பெண்களுக்கு என அதிகாரப்பூர்வ திருமண வயது இல்லை. தலிபான்கள், பெண்கள் கல்வி கற்க தடை விதித்தனர். இதனால், 2021க்கு பின் குழந்தை திருமணம், 25 சதவீதம் அதிகரித்தது.இந்நிலையில், தெற்கு ஆப்கனின் மர்ஜா மாவட்டத்தில், 45 வயது நபர் ஒருவருக்கும், 6 வயது சிறுமிக்கும் திருமணம் நடந்த வீடியோ வெளியானது. வறுமை காரணமாக சிறுமியை அந்த நபருக்கு தந்தையே விற்றுள்ளார். இந்த சம்பவத்திற்கு சர்வதேச அளவில் சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து, சிறுமியின் தந்தை மற்றும் மணமகனை தலிபான் அரசு கைது செய்தது. இருப்பினும் முறையான குற்றச்சாட்டுகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை. சிறுமி தாய் வீட்டிற்கு அனுப்பப்பட்டார். மேலும், 9 வயதான பின், சிறுமியை மணமகன் தன் வீட்டிற்கு அழைத்துச் செல்லலாம் என கூறியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

சிந்தனை
ஜூலை 12, 2025 21:59

ஈரோடு ராமசாமியின் கொள்கைகளை இவர்கள்தான் கடைப்பிடிக்கிறார்கள்


Muthu Kumar
ஜூலை 12, 2025 05:54

நபி வழி திருமணம்


.Dr.A.Joseph
ஜூலை 12, 2025 01:42

எவ்வளவு கீழ்மையான நிலையில் இருக்கிறார்கள்...


Raj S
ஜூலை 12, 2025 01:05

அதுக்கு முன்னால அந்த குழந்தையே பயத்துல செத்துடும்... பாவிகளா, நீங்கல்லாம் மனிதர்கள்தானா??


peace
ஜூலை 12, 2025 08:30

Muslims Peaceful community


Raj S
ஜூலை 15, 2025 23:14

You must say ........


Natchimuthu Chithiraisamy
ஜூலை 11, 2025 20:11

என்ன உபயோகம். செடியை நட்டால் தான் காய்க்கும். வயது 45 தான் ஆகிறது.


சண்முகம்
ஜூலை 11, 2025 18:25

ஒன்பது வயதாகும் வரை இந்த சிறுமி இவனை சேரக்கூடாது என்று தாலிபான் உத்திரவாம்? மனிதத்தன்மை அற்ற கூட்டம்.


தியாகு
ஜூலை 11, 2025 18:11

அமீர் பாய் எங்கிருந்தாலும் வரவும்.


lana
ஜூலை 11, 2025 15:52

இதை தானே நுபுர் ஷர்மா கூறினார். அதுக்கு அத்தனை லுங்கி உம் பொங்கி னார்கள். இப்போது என்ன நடக்கிறது.


பேசும் தமிழன்
ஜூலை 11, 2025 08:01

குழந்தையை திருமணம் செய்த இவனை பிடித்து...


சமீபத்திய செய்தி