உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / 4 ஆண்டுகளாக டெலிவரி செய்யப்படாத 7 மூட்டை தபால்: போஸ்ட்மேன் சஸ்பெண்ட்

4 ஆண்டுகளாக டெலிவரி செய்யப்படாத 7 மூட்டை தபால்: போஸ்ட்மேன் சஸ்பெண்ட்

காங்கேயம்: திருப்பூர் மாவட்டம், காங்கேயம், கோவை ரோடு, தட்டான் தோட்டத்தை சேர்ந்தவர் செந்தில்குமார், 45. வெள்ளகோவில் போஸ்ட்மேனாக, 15 ஆண்டாக பணியாற்றி வருகிறார். ஒரு வாரத்துக்கு முன், செந்தில்குமார் வீட்டுக்கு பின் பகுதியில், கவர்கள், கடிதம் அடங்கிய சில மூட்டைகள் கிடப்பதாக, திருப்பூர் தபால் துறைக்கு, மக்கள் புகார் அளித்தனர். மாவட்ட தபால் அதிகாரிகள், செந்தில்குமாரின் வீட்டிற்கு சென்று, பதுக்கி வைத்திருந்த மூட்டைகளை கைப்பற்றி சோதனை செய்தனர். இதில், நான்கு ஆண்டுகளுக்கு மேல் வெள்ளகோவில் பகுதி மக்களுக்கு வந்த முக்கியமான கடிதம், வங்கி ஏ.டி.எம்., கார்டு, பான் கார்டு, வக்கீல் நோட்டீஸ் என, பலவித கடிதங்கள் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அதன் பின், ஏழு மூட்டையில் இருந்த தபால்களை பறிமுதல் செய்து, வெள்ளகோவில் தபால் நிலைய அலுவலர்கள், போஸ்ட்மேன் ஆகியோரிடம் விசாரித்து வருகின்றனர். இந்த மூட்டைகளை யாரும் எடுத்து விடக்கூடாது என, செந்தில்குமார் தன் வீட்டில், ஐந்து நாய்கள் வளர்த்ததும், தபால் அதிகாரிகள் வீட்டுக்கு சோதனைக்கு வருவதை அறிந்து, பதுக்கி வைத்திருந்த மூட்டைகளில் சிலவற்றை தீயிட்டு எரித்ததும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் கோட்ட தலைமை தபால் கண்காணிப்பாளர் பட்டாபிராமன் கூறுகையில், ''செந்தில்குமாரை சஸ்பெண்ட் செய்து விசாரணை நடக்கிறது. ''ஆறு மாதமாக அவருக்கு உடல்நலம் சரியில்லை என்று, முதல்கட்டமாக தெரியவந்தது. தற்போது, டெலிவரி செய்யப்படாமல் உள்ள தபால்கள் உரியவர்களிடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Muthukumar
ஜூலை 02, 2026 18:18

அஞ்சல் துறையில் கிராமப்பகுதிகள் விரிவடைந்த நிலையில் அதற்கு ஏற்றார்போல் பணியிடம் கூடுதல் ஏற்படுத்துவதில்லை. தனியார் கொரியர்சர்வீஸை ஊக்கப்படுத்திவிட்டு ஸ்பீடு போஸ்ட்டே 10 நாள் எடுத்துக் கொள்கிறார்கள். மூடலுக்கான நிலை ஏற்பட்டுவிடும் வங்கி சேவை லாபத்தில் துறை நிற்கும்


joe
ஜூலை 02, 2026 11:02

இது ஒன்றும் புதிதல்ல இது போன்று நிறைய போஸ்டல் டிபார்ட்மென்டல் நிறைய பேர் உள்ளார்கள் வாங்கும் சம்பளத்துக்கு மனசாட்சி படி வேலை செய்யாமல் . பிஎஸ்ன்னல் இது போன்று இருந்துதான் இன்று இந்த பரிதாப நிலைக்கு வந்துள்ளது இதை பார்த்தாவது போஸ்டல் டிபார்ட்மென்ட் ஆட்களும் திருந்தினால் சரி இல்லை பிஎஸெனெல் நிலைமைதான்


Ponnuchamy Ganesapandi
ஜூலை 02, 2026 10:24

நோ சஸ்பெண்ட் ஆர்டர்,ஒன்லி டிஸ்மிஸ் best .


Bhaskaran
ஜூலை 02, 2026 09:08

இந்த நாயை தூக்கில் போடவேண்டும்.எத்துணை முக்கியமான கடிதங்கள் மக்களுக்கு கிடைக்காமல் போயிருக்கும் பணிநியமன ஆர்டர்கள் வங்கி தபால்கள் .இவன் மேல் துறை நடவடிக்கை வெறும் கண்துடைப்பு தந்தான்


சாமானியன்
ஜூலை 02, 2026 08:15

தலைமை அஞ்சலக அதிகாரி பாவம். அமேசான், ப்ளிப்கார்ட் மாதிரி கைபேசி வாயிலாக OTP கேட்டு டெலிவரியை ஒழுங்கு படுத்தலாம்.


Sundaran
ஜூலை 02, 2026 07:28

வியாபாரத்தில் கண்ணும் கருத்துமாக இருக்கும் அதிகாரிகள் இவைகளை கண்டு கொள்வது இல்லை. 4 வருடங்களுக்கு பின்னர் தபால்களை பட்டுவாடா செய்வதில் என்ன புண்ணியம் ஆய்வாளர் தபால் மேற்பார்வையாளர் என பல பதவிகள் இருந்தும் என்ன புண்ணியம் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள் இருவர் கூடவா புகார் அளிக்கவில்லை


R.RAMACHANDRAN
ஜூலை 02, 2026 07:04

எல்லாம் லஞ்சம் செய்கின்ற மாயம்.


A விஸ்வநாதன்
ஜூலை 02, 2026 09:51

பணி நீக்கம் செய்து பி எப் பணம் ஒன்றும் கொடுக்கக் கூடாது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை