உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / 9ம் வகுப்பு படித்து மருத்துவம் பார்த்த போலி டாக்டர் வசமாக சிக்கினார்

9ம் வகுப்பு படித்து மருத்துவம் பார்த்த போலி டாக்டர் வசமாக சிக்கினார்

சென்னை: பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை, தியாகி சொக்கலிங்கம் தெருவில், மருத்துவம் படிக்காமலேயே பெண் ஒருவர், மருத்துவம் பார்த்து வருவதாக, திருவள்ளூர் கலெக்டருக்கு புகார் சென்றது.விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு, மருத்துவ துறைக்கு கலெக்டர் உத்தரவிட்டார். இதையடுத்து, பூந்தமல்லி மருத்துவமனை தலைமை மருத்துவர் பாபு தலைமையில், நேற்று அந்த பெண் நடத்தி வந்த கிளினிக்கிற்கு அதிகாரிகள் சென்றனர்.அதில் ஒரு மருத்துவர், வயிற்று வலியால் துடிப்பது போல் நாடகமாடி, மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அந்த பெண் மருத்துவர், வயிற்று வலியால் துடித்த நபருக்கு ஊசி போட முயன்றார். அப்போது, அவரை கையும் களவுமாக பிடித்தனர். விசாரணையில், நசரத்பேட்டையைச் சேர்ந்த எஸ்தர், 35, என்பதும், ஒன்பதாம் வகுப்பு வரை படித்துள்ள இவர், மருத்துவம் பார்த்து வந்ததும் தெரியவந்தது.இதையடுத்து, மருத்துவத்துறை அதிகாரிகள் அந்த கிளினிக்கை பூட்டி 'சீல்' வைத்து, எஸ்தரை நசரத்பேட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

சிறையில் கணவர்

விசாரணையில், எஸ்தரின் கணவர் சார்லஸ், ஸ்ரீ பெரும்புதுார் பகுதியில் மருத்துவம் படிக்காமலேயே மருத்துவம் பார்த்து கைது செய்யப்பட்டதும், தற்போது நசரத்பேட்டையில் 'சீல்' வைக்கப்பட்ட கிளினிக், அவரது பெயரிலேயே இயங்கி வந்ததும் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட எஸ்தரிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

naranam
மே 02, 2025 05:14

நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்காமல் இருப்பதால் தான் இத்தகைய போலி மருத்துவர்கள் முளைத்து விட்டதாக கேடு கெட்ட மாடல் அரசு கூறினாலும் வியப்பில்லை! மேலும் இவர்களுடைய பெயர்களைக் கேட்டாலே மாடல் எந்த நடவடிக்கையும் எடுக்காது என்று நம்பலாம். ஏனென்றால் மாடல் தந்தையே இவர்கள் தயவில் தானே தேர்தலில் வெற்றி பெற்றார்...


KRISHNAN R
மே 01, 2025 10:51

மருத்துவர்... போலவே....இருங்காங்க


கண்ணன்
மே 01, 2025 10:30

எனக்கு நமது தமிழக அரசின் நினப்புத்தான் வருகிறது


அன்பு
மே 01, 2025 16:13

ஆமாம் அரசியல் சாசனம், சட்டங்கள் என்பவற்றில் அடிப்படை அறிவு கூட இல்லாமல் அரசியலில் நுழைந்து கோடி கோடியா சம்பாதிக்கும் அரசியவாதிகள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை