உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / பவுன்சர் பணியில் கம்பீரமாக வலம் வரும் கேரள பெண்

பவுன்சர் பணியில் கம்பீரமாக வலம் வரும் கேரள பெண்

திருவனந்தபுரம் : வழக்கமாக ஆண்கள் மட்டுமே அதிகளவு இருக்கும், 'பவுன்சர்' எனப்படும் தனிநபருக்கான பாதுகாப்பு பணியில், கேரளாவைச் சேர்ந்த அனு குஞ்சுமோன் என்ற பெண் ஈடுபட்டு பிரபலமாகி உள்ளார்.பவுன்சர்கள் எனப்படும் நபர்கள் திரை பிரபலங்களின் பாதுகாப்பு, பொது நிகழ்ச்சிகள், பார்கள், பப்கள் போன்ற இடங்களில் ஒழுங்கை பராமரிப்பவர்கள். கூட்டத்தை கட்டுப்படுத்துதல் மற்றும் பிரச்னையில் ஈடுபடும் நபரை அப்புறப்படுத்துதல் போன்ற பணிகளை இவர்கள் மேற்கொள்கின்றனர். உடல் வலிமை தேவைப்படும் இத்தொழிலில் பெரும்பாலும் ஆண்களே உள்ளனர். தற்போது, கேரளாவில் பவுன்சர் பணியில் பெண்கள் ஈடுபட துவங்கிஉள்ளனர்.கொச்சியைச் சேர்ந்த அனு குஞ்சுமோன், 37, பல ஆண்டுகளாக பவுன்சராக பணியாற்றி வருகிறார். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் இவர் மலையாள நடிகர் மோகன்லாலுக்கு பவுன்சராக பணியாற்றினார். அதில், கூட்டத்தை திறமையாக கட்டுப்படுத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

சவாலான பவுன்சர் தொழிலை தேர்வு செய்த காரணம் குறித்து அனு குஞ்சுமோன் கூறியதாவது:

நான் அடிப்படையில் ஒரு புகைப்படக் கலைஞர். சில ஆண்டுகளுக்கு முன் நிகழ்ச்சி ஒன்றில் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தேன். அப்போது, ஒரு ஆண் பவுன்சர் என்னை தள்ள முயன்றார். நான் பதிலுக்கு அவரை கீழே தள்ளிவிட்டேன். அந்த சம்பவம் என்னை சிந்திக்க வைத்தது. பெண்களை கையாள பெண் பவுன்சர்கள் ஏன் இல்லை என்ற கேள்வி எழுந்தது. அதன் பிறகு இந்த தொழிலில் இறங்கினேன். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Padmasridharan
மார் 27, 2025 08:10

கேரள மக்கள், சில விஷயத்துல வித்யாசமாக சாதித்து காட்டுகின்றனர். ஆனால் தமிழ்நாட்டு_சென்னையில் லஞ்சம் வாங்குபவரையே தைரியமாக வெளியில் காட்டிகொடுக்கமாட்டார்கள். அதட்டி பேசி, அடக்கு வைக்கும் அரசு அதிகாரிகள் அதிகம் that proves empty vessels make much noise


முக்கிய வீடியோ