மேலும் செய்திகள்
ஆம்புலன்ஸ் ஓட்ட ஆசைப்படும் பெண் ஆட்டோ டிரைவர்
09-Dec-2024
கணவர் இறந்து விட்டால் அவர் பயன்படுத்திய பொருட்களை மனைவி பத்திரமாக பேணி பாதுகாப்பதை நாம் பார்த்திருப்போம். இங்கு ஒரு பெண், கணவர் செய்த தொழிலை தெய்வமாக நினைத்து செய்து வருகிறார். அந்த பெண்ணை பற்றி பார்க்கலாம்.கொப்பால் டவுனில் வசிப்பவர் சாரதம்மா, 49. இவரது கணவர் நாகராஜ். இவர்கள் இருவரும் கடந்த 1993ல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.லாரிகளுக்கு பலகை அடித்து கொடுக்கும் தொழிலை நாகராஜ் செய்து வந்தார். கடந்த 2007ல் அவர் இறந்த பின், லாரிகளுக்கு பலகை அடிக்கும் தொழிலை சாரதம்மா செய்து வருகிறார்.இதுகுறித்து அவர் கூறியதாவது:எனது கணவர், லாரிகளுக்கு பலகை அடிக்கும் தொழில் செய்தார். அவருக்கு மதிய உணவு கொண்டு செல்லும்போது, அவர் எப்படி வேலை செய்கிறார் என்பதை உன்னிப்பாக கவனித்துள்ளேன்.சில நேரங்களில் அவருக்கு உதவியும் செய்துள்ளேன். கடந்த 2009ல் அவர் உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். பின், என்ன செய்வது என்று தெரியவில்லை. எங்களுக்கு சோறு போட்ட, எனது கணவர் செய்த தொழிலை செய்ய முடிவு எடுத்தேன். எனது குடும்பத்தினர் வேண்டாம் என்று கூறினர். ஆனாலும் கணவர் செய்த தொழிலை தெய்வமாக போற்றி இந்த தொழிலில் களமிறங்கினேன்.பெண் என்பதால் சரியாக பலகை அடித்து கொடுப்பாரா என லாரி டிரைவர்களுக்கு முதலில் சந்தேகம் ஏற்பட்டது. ஆனால் எனது வேலையை பார்த்து பாராட்டினர். லாரிக்கு பலகை அடிப்பது மட்டுமின்றி, வெல்டிங்கும் செய்து கொடுக்கிறேன். கணவரை இழந்த பெண்கள் வாழ்வில் என்ன செய்யப் போகிறோம் என சோர்ந்து போகக்கூடாது. முன்னேற வேண்டும் என்பது எனது ஆசை.இவ்வாறு அவர் கூறினார் -- நமது நிருபர் - -.
09-Dec-2024