உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / உண்டியலில் விழுந்துவிட்டால் சாமி கணக்கில் தான் வரவு; விதிவிலக்குகள் ஆராயப்படும்: அமைச்சர் பதில்!

உண்டியலில் விழுந்துவிட்டால் சாமி கணக்கில் தான் வரவு; விதிவிலக்குகள் ஆராயப்படும்: அமைச்சர் பதில்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருப்போரூர்: 'கோவில் உண்டியலில் பொருள் விழுந்துவிட்டால் சாமி கணக்கில் தான் வரவு வைப்பார்கள்' என ஐபோனை திருப்பி கேட்ட பக்தருக்கு அமைச்சர் சேகர்பாபு பதில் அளித்துள்ளார்.செங்கல்பட்டு, திருப்போரூரில் புகழ்பெற்ற கந்தசுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு அம்பத்துாரைச் சேர்ந்த தினேஷ் என்பவர், கடந்த ஆகஸ்டில் தரிசனம் செய்ய வந்துள்ளார்.குடும்ப பிரச்னை காரணமாக மன அழுத்தத்தில் இருந்த அவர், கோவில் உண்டியலில் காணிக்கை செலுத்தும்போது, தன்னுடைய 'ஐபோன் 13புரோ' ரக மொபைல்போனையும் தவறி போட்டுள்ளார். அதன் பின், கோவில் நிர்வாகத்திடம் நடந்ததைக் கூறி, மொபைல்போனை திரும்பக் கேட்டுள்ளார்.அதற்கு கோவில்நிர்வாகத்தினர், 'கோவில் உண்டியலில் செலுத்தப்படும் அனைத்தும் சுவாமிக்கு சொந்தம்' எனக் கூறியுள்ளனர். மேலும், உண்டியல் காணிக்கை எண்ணும்போது தகவல் அளிப்பதாக கூறி அனுப்பியுள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் அதிகாரிகள் முன்னிலையில் கோவில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. தினேஷுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, அவரும் வந்திருந்தார்.உண்டியலை திறந்து பணத்தை எடுத்தபோது, அவரது மொபைல் போனும் இருந்தது. அப்போது தினேஷ் மொபைல் போனை கேட்டுள்ளார்.இதற்கு கோவில் நிர்வாகத்தினர், 'உண்டியலில் போட்டவை முருகனுக்கு சொந்தம். மொபைல் போனை தர முடியாது' எனக் கூறியுள்ளனர்.வேண்டுமென்றால், மொபைல் போனில் உள்ள தரவுகளை மட்டும் பெற்றுக் கொள்ளலாம் எனக் கூறியுள்ளனர். அதற்கு தினேஷ், தன்னிடம் தரவுகளை பெறலேப்டாப் உள்ளிட்டவை இல்லை. ஓரிரு நாளில் ஏற்பாட்டுடன் வந்து தரவுகளை பதிவிறக்கம் செய்து கொள்வதாக கூறியுள்ளார். பின் அந்த மொபைல்போன், அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டது.

சாமி கணக்கில் தான் வரவு!

இது குறித்து, அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது: கோவில் உண்டியலில் பொருள் விழுந்துவிட்டால் சாமி கணக்கில் தான் வரவு வைப்பார்கள். உண்டியலில் விழுந்தவற்றை திருப்பி தருவதற்கு விதிவிலக்கு உள்ளதா என ஆராய்ந்து நிவாரணம் வழங்கப்படும். சாத்திய கூறு இருந்தால், ஐபோன் திருப்பி வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

nag nak
டிச 24, 2024 13:25

ஆனால், கோயில் சொத்து எல்லாம் எப்படி தனியாருக்கு போனது னு விளக்கமா சொன்னா நீங்க எல்லாம் யாருன்னு புரிஞ்சுக்க வசதியா இருக்கும்.


Saravanan D
டிச 24, 2024 11:40

ஏனிந்த பகல் கொள்ளை??


aaruthirumalai
டிச 23, 2024 21:26

பரிகாரம் ஏதாவது உண்டா சாமி?


N Sasikumar Yadhav
டிச 23, 2024 19:11

ஆனால் கோயில் உண்டியலில் போடப்படும் பணத்தை ஆட்டய போடவே இந்த திராவிட மாடல் அரசால் இந்துசமய துரோகத்துறை என ஏற்படுத்தியிருக்கிறானுங்க


அப்பாவி
டிச 23, 2024 09:05

இதுக்கெல்லாம் எப்பவோ நம்மாளு விவேக் பதில் சொல்லிட்டாரு. அவரே உண்டில விழுந்துட்டாரு.


Shanmuga Sundaram
டிச 22, 2024 09:51

கோவில் உண்டியல் விழும் பொருட்கள் சாமி கணக்கில் வரவு வைக்கப்படும். சாமி கணக்கில் வரவு வைக்கப்படும் சாமிக்கணக்கில் வரவு வைக்கப்படும் பணம் அரசு தன்வசம் எடுத்துக்கொள்ளும். இது நல்லா இருக்கே.


panneer selvam
டிச 21, 2024 22:00

Anything is available in Temple Hundi , is belonged Sekarbabu ji and his contractors


subramanian
டிச 21, 2024 16:52

எல்லோருக்கும் இதே போல பதில் சொல்ல அறத்தை நினைக்காத துறையால் முடியுமா?. இந்த கோவிலில் அறநிலையத்துறை அதிகாரியின் ஐ போன் உண்டியலில் விழுந்து விட்டால் இதே பதில் சொல்ல முடியுமா?


அப்பாவி
டிச 21, 2024 14:24

பழைய வேலை செய்யாத செல் போன்களை போட்டு ரீசைக்கிள் செய்த உதவுங்கள்.


Sampath Kumar
டிச 21, 2024 13:54

உண்டியலில் ஏத்தி போட்டாலும் து சம்மிகு சொந்தம் ஆகிடுமா ? உந்தியில் ர்நண்பது பணம் அல்லது தங்கம் போடா மட்டுமே பயன் படுகிறது அப்புறம் ஒரு போன் எந்த கண்ணகில் வரும் ?? அது எப்படி ஆமிக்கு சொந்தமாக முடியும் மூட நம்பிக்கை எல்லை மீறி சென்று கொண்டு ள்ளது அதை கேட்டால் ஹிந்த்துமத்தை விரோதி நண்பர்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை