உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / கோல்ப் விளையாட்டில் அசத்தும் இளம் வீராங்கனை அவனி பிரசாந்த்

கோல்ப் விளையாட்டில் அசத்தும் இளம் வீராங்கனை அவனி பிரசாந்த்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

விளையாட்டு துறையில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் இன்று சாதிக்க துவங்கி உள்ளனர். அதிலும் மூத்த வீரர், வீராங்கனைகளுக்கு சவால் விடும் வகையில் இளம் வீரர், வீராங்கனைகளின் செயல்பாடுகள் உள்ளது.ஒரு காலத்தில் வெளிநாடுகளில் மட்டுமே பிரபலமாக இருந்த, 'கோல்ப்' விளையாட்டு, இப்போது இந்தியாவிலும் பிரபலமாகி உள்ளது. கோல்ப் விளையாட்டில் இளம் வீராங்கனை ஒருவர் சாதித்து வருகிறார்.பெங்களூரு ஒயிட்பீல்டை சேர்ந்தவர் பிரசாந்த். இவரது மகள் அவனி, 18. இவருக்கு சிறுவயதில் இருந்தே, கோல்ப் விளையாட்டின் மீது ஆர்வம் அதிகமாக இருந்தது. 'டிவி'க்களில் ஒளிபரப்பாகும், கோல்ப் விளையாட்டை பார்த்து கொண்டே இருப்பார். இவரது ஆர்வத்தை பார்த்த பெற்றோர், பிரபல கோல்ப் பயிற்சியாளரான லாரன்ஸ் பிரதர்ட் என்பவரிடம், பயிற்சிக்கு சேர்ந்து விட்டனர்.கடந்த 2021 பிப்ரவரியில் மும்பையில் நடந்த, ஹீரோ உமன்ஸ் புரொபஷனல் கோல்ப் தொடரில், அவனி முதல்முறை களம் கண்டார். அந்த தொடரிலும், அடுத்த ஆண்டு நடந்த ஹீரோ உமன்ஸ் புரொபஷனல் கோல்ப் தொடரிலும், தொடர் வெற்றி பெற்று சாதனை படைத்தார்.கடந்த ஆண்டு பிப்ரவரியில் நடந்த, குயின் சிரிகிட் கோப்பையில் இந்திய அணிக்காக விளையாடினார். அந்த அணி இரண்டாம் இடத்தை பிடித்தது. ஆனால் தனிப்பட்ட போட்டிகளில் வென்று அவனி சாதனை படைத்தார்.'கோல்ப் விளையாட்டில் எதிர்காலத்தில் பெரிய நட்சத்திரமாக அவனி உருவெடுப்பார்' என்று, அவரது பயிற்சியாளர் லாரன்ஸ் பிரதர்ட் கணித்து உள்ளார்.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ