உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / பைக் டாக்சியில் பார்சலாக பயணிக்கும் பெங்களூரு மக்கள்

பைக் டாக்சியில் பார்சலாக பயணிக்கும் பெங்களூரு மக்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: கர்நாடகாவில், 'பைக் டாக்சி' சேவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த சேவையை வழங்கும் நிறுவனங்கள், 'பைக் பார்சல்' என்ற பெயரில் வாடிக்கையாளர்களை அழைத்துச் செல்வதாக தகவல் வெளியாகி உள்ளது. முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்., ஆட்சி நடக்கும் கர்நாடகாவில், 'ஓலா, ஊபர், ராபிடோ' போன்ற நிறுவனங்கள் பைக் டாக்சி சேவையில் ஈடுபட்டு வந்தன. சமீபத்தில், இந்த சேவைக்கு மாநில அரசு தடை விதித்தது. போக்குவரத்து நெரிசல் நிரந்தர பிரச்னையாக உள்ள பெங்களூரில், பைக் டாக்சி சேவை பயனுள்ளதாக இருந்த நிலையில், அதற்கு மாநில அரசு தடை விதித்தது, பேசு பொருளானது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம், அரசின் உத்தரவை உறுதி செய்தது. இதன்படி, ஜூன் 16 முதல் கர்நாடகாவில் பைக் டாக்சி தடை அமலுக்கு வந்தது. ஆனாலும், பெங்களூரு மக்கள் இந்த சேவையை விடுவதாக இல்லை. ராபிடோ, ஊபர் போன்ற நிறுவனங்கள், 'பைக் பார்சல்' என்ற சேவையை ஏற்கனவே வழங்கி வருகின்றன. வாடிக்கையாளர்கள் வழங்கும் பொருட்களை, 'டெலிவரி' செய்யும் சேவையை செய்கின்றன.இந்த பார்சல் சேவையை தங்கள் பயணத்துக்கு பெங்களூருவாசிகள் பயன்படுத்த துவங்கி உள்ளனர். இதன்படி, பைக் பார்சல் சேவையை புக் செய்யும் வாடிக்கையாளர்கள், அந்த பைக்கில் ஏறி செல்ல வேண்டிய இடத்துக்கு பயணிக்கின்றனர். இதை அந்நிறுவனங்களும் தடுக்கவில்லை.இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பெங்களூரு தெற்கு தொகுதி பா.ஜ., - எம்.பி., பி.சி.மோகன், 'கர்நாடக உயர் நீதிமன்ற உத்தரவை மீறி, 'பைக் பார்சல்' என்ற பெயரில், பைக் டாக்சி சேவையை சில நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.'இதை தடுக்க காங்., அரசு தவறி விட்டது. இது நீதிமன்ற அவமதிப்பு' என, சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.இதற்கு பதிலளித்த ஒருவர், 'பெங்களூரில் ஆட்டோ டிரைவர்கள் எப்படி நடந்து கொள்கின்றனர் என்பது அனைவருக்கும் தெரியும்.மீட்டர்கள் வெறும் காட்சிக்கு மட்டுமே உள்ளன. பைக் டாக்சி சேவை மிகவும் பயனுள்ளதாக இருந்தது' என, குறிப்பிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Punyamurthy M
ஜூன் 22, 2025 00:33

PC மோகன் பெங்களூரு மத்திய தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்.


ديفيد رافائيل
ஜூன் 19, 2025 06:57

Rapido ல bike parcel service எப்போது இருந்தோ இருக்கு, அந்த நேரத்துல bike parcel க்கு மட்டும் மக்கள் பயன்படுத்துனாங்க. இப்ப karnataka high court தடை பண்ணதால மக்கள் parcel service ஐ bike taxi ஆக use பண்றாங்க because ஆட்டோகாரங்க கட்டண கொள்ளை அடிக்குறதால. Rapido ல food delivery service கூட available தான் இருக்கு.


Ramesh Sargam
ஜூன் 18, 2025 12:11

அரசு ஒழுங்காக நகரத்தின் வொவொரு பகுதிக்கும் போதிய அரசு பேருந்துகளை நேரம் தவறாமல் அதிக எண்ணிக்கையில் இயக்கினால், மக்கள் ஏன் பைக் டாக்ஸி, ஓலா, உபர் என்று போகப்போகிறார்கள்?


ஆரூர் ரங்
ஜூன் 18, 2025 11:13

பயணிக்க வேண்டிய கட்டாயம் இருந்தால் சொந்த ஹெல்மெட் எடுத்துச் செல்லவும்.


lana
ஜூன் 18, 2025 11:11

பொது மக்களுக்கு நன்மை பயக்கும் எந்த திட்டமும் முறை படுத்த வேண்டும் ஏ தவிர நிறுத்த கூடாது


Amar Akbar Antony
ஜூன் 18, 2025 08:24

ஆட்டோ காரர்களை அழைத்தால் அவர்கள் நூறு ரூபாய்க்கு பயணம்செய்ய நூற்று எழுபத்தைந்து கேட்கிறார்கள். அதைப்போலவே ஓலா உபெர் இப்படிப்பல டாக்ஸிகல் ஆட்டோ ஓட்டுனர்கள் இருக்கிறார்கள். ப்ரோ ஆப் ல எவ்வளவு போட்டிருக்கு அறுபதா? மேல எழுபதுரூபா போட்டுக்கொடுங்கள் இல்லையென்றால் அவன் வரமாட்டான். இந்த தொந்தரவு பைக் டாக்ஸி ல் இல்லை. நான் பலமுறை உபயோகித்து வெறுத்துப்போய் தான் பைக் டாக்ஸி க்கே மாறினேன். இந்த போக்குவரத்துக்கு தடை விதிப்பது மற்றவர்களுக்கு ஓவராக சார்ஜ் செய்ய பயன்படுமே தவிர மக்களுக்கு செய்யும் துரோகம்.


VENKATASUBRAMANIAN
ஜூன் 18, 2025 08:00

எல்லா ஆட்டோக்களும் அரசியல்வாதிகளுக்கு சொந்தமானவை. அப்பறம் எப்படி இதற்கு அனுமதிப்பார்கள். இதில் எல்லா கட்சிகளும் கூட்டு.


Karthik
ஜூன் 18, 2025 07:48

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மக்களுக்காக சேவை செய்யத்தானே அமைக்கப்பட்டு இருக்கிறது. அவ்வாறு மக்களுக்கு தேவையானதை செய்வதை விடுத்து எதுக முனையில் செயல்படுவதன் அர்த்தம் தான் புரியவில்லை.


Kasimani Baskaran
ஜூன் 18, 2025 03:45

பயனுள்ள எந்த ஒரு சேவையும் நடந்து விட்டால் ஆள்பவர்களுக்கு சிக்கல்... இந்த லாஜிக்கை புரிந்துகொள்ள முடியவில்லை.


நிக்கோல்தாம்சன்
ஜூன் 18, 2025 03:04

இந்த பைக் டாக்சிகள் தடை செய்யப்படவேண்டுமா என்று பொதுமக்களையும் ஒருவார்த்தை கேட்டிருக்கலாம்


ஸ்ரீனிவாசன் ராமஸ்வாமி
ஜூன் 18, 2025 06:38

கேட்டால் தடை வேண்டாம் என கூறுவர்.


முக்கிய வீடியோ