ஐதராபாத்தில் இறந்த எழுத்தாளர் உடல் மருத்துவமனைக்கு தானம்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
Your browser doesn’t support HTML5 audio
சிவகங்கை : ஐதராபாத்தில் இறந்த சிவகங்கை மாவட்டம் காரைக்குடி எழுத்தாளர் ஜனநேசன் என்ற வீரராகவன் 70, உடல் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது.ஜனநேசன் காரைக்குடி அரசு அழகப்பா கல்லுாரியில் நுாலகராக இருந்து ஓய்வு பெற்றவர். இவர் 10 சிறுகதைகள், 2 நாவல்கள், 3 கட்டுரை தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். 2 மகன்கள் உள்ளனர். ஓய்வுக்கு பிறகு இவர் மகனுடன் ஐதராபாத்தில் வசித்தார். உடல் நலம் பாதிக்கப்பட்டு வெள்ளிக்கிழமை காலை 7:00 மணிக்கு இறந்தார். அவரது உடல் காரைக்குடி ஸ்ரீராம்நகர் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது.நேற்று மதியம் 12:00 மணிக்கு சிவகங்கை அரசு மருத்துவமனையில் அவரது உடலை மகன் கர்ணன் மற்றும் குடும்பத்தினர் கண்காணிப்பாளர் கண்ணன், நிலைய மருத்துவ அலுவலர் மகேந்திரன், உதவி அலுவலர் தென்றல் ஆகியோரிடம் தானமாக வழங்கினர்.