உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல /  திருப்பரங்குன்றம் அருகே பஞ்சரான முதல்வரின் கார்

 திருப்பரங்குன்றம் அருகே பஞ்சரான முதல்வரின் கார்

திருமங்கலம்: மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே முதல்வர் ஸ்டாலின் சென்ற காரின் டயர் 'பஞ்சர்' ஆனதால் மாற்று கார் மூலம் விமான நிலையம் சென்றார். திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொள்ள நேற்று முன்தினம் விமானம் மூலம் மதுரை வந்த முதல்வர் ஸ்டாலின், நேற்று காலை சாலை வழியாக வேனில் திண்டுக்கல்லுக்கு சென்றார். நிகழ்ச்சி முடிந்ததும் மதுரையில் இருந்து விமானம் மூலம் மதியம் 1:30 மணிக்கு சென்னை செல்ல அவர் திட்டமிட்டு இருந்தார். இதற்காக அவர் கார் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு திண்டுக்கல் -- விருதுநகர் நான்கு வழிச்சாலையில் வந்து கொண்டிருந்தார். திருப்பரங்குன்றம் அருகே தனக்கன்குளம் பகுதியில் வந்தபோது காரின் முன்பக்க டயர் பஞ்சர் ஆனது. டிரைவர் காரை பாதுகாப்பாக ரோட்டோரம் நிறுத்தினார். இதையடுத்து மாற்று வாகனத்தில் ஏறி மதுரை விமான நிலையத்திற்கு முதல்வர் சென்றார். திண்டுக்கல்லில் இருந்து மதுரைக்கு முதல்வர் வந்த கார், வருவாய்த்துறை அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரனின் கார் எனவும் தற்போது பழுது பார்க்கப்பட்டு கார் எடுத்துச் செல்லப்பட்டது எனவும் போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை