உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / பெருமாளை இழிவுபடுத்தி பாடிய நடிகர்கள் சந்தானம், ஆர்யா மீது புகார்

பெருமாளை இழிவுபடுத்தி பாடிய நடிகர்கள் சந்தானம், ஆர்யா மீது புகார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சேலம் : 'திருப்பதி பெருமாளை இழிவுபடுத்தி, நடிகர்கள் சந்தானம், ஆர்யா பாடல் உருவாக்கி உள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பா.ஜ., சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சேலம் பா.ஜ., கிழக்கு மாவட்ட செயலரும், வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்தவருமான அஜீத், அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய செயலர் கிருபாகரன் உள்ளிட்ட சிலர், சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று அளித்த புகாரில் கூறியிருப்பதாவது:ஹிந்து மக்களால் புனிதமாக கருதப்படும், 108 வைணவ திருத்தலங்களில் ஒன்று, ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி பெருமாள் கோவில். ஹிந்து மத உணர்வை புண்படுத்தும் விதமாக, டிடி நெக்ஸ்ட் லெவல் என்ற திரைப்படத்தில், 'கோவிந்தா கோவிந்தா கிசா 47...' என்ற பாடலை பாடி, வெளியிட உள்ளனர். அதில், பெருமாளையும், அவர் இருக்கும் புனித தலமான திருப்பதி கோவிலையும் அசிங்கப்படுத்தி, நடிகர்கள் சந்தானம், ஆர்யா உள்ளிட்டோர் பாடல் உருவாக்கியுள்ளனர். அந்த பாடலில், 'பார்க்கிங் காசுக்கு கோவிந்தா, பாப்கார்ன் டாக்ஸ் கோவிந்தா, ஹீரோயின் நடிப்புக்கு கோவிந்தா...' என பெருமாளை அவமதிக்கும் வகையில் பாடி உள்ளனர்.வாய்மொழியாகவும், செய்கையாகவும், மத வழிபாடு, சடங்குகளை தவறாக சித்தரித்து பாடிய சந்தானம், ஆர்யா மீது சட்ட நடவடிக்கை எடுத்து, அவர்களை கைது செய்ய வேண்டும்.இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

சண்முகம்
மே 13, 2025 23:25

நடப்பதை பாடுவது குற்றமா?


Kulandai kannan
மே 13, 2025 19:48

இந்து நடிகர்களுக்கு சூடு, சொரணை மிகவும் குறைவு. அவர்களுக்கு காசேதான் கடவுளடா. ஒரு திரைபடத்தில் ஆர்யாவும் (முஸ்லீம்) அவருடைய அப்பாவாக நடித்த வரும் (இந்து), வீட்டில் குத்தாட்டம் ஆடிக்கொண்டே தீபாராதனை காட்டுவார்கள். இழி பிறவிகள்.


Gopalan
மே 13, 2025 19:42

நகைச்சுவை நடிகர் சந்தானம் ஏன் கடவுள் விஷயத்தில் அதுவும் பணம் கொடுக்கும் பெருமாளை கலாய்க்கிறார்? அதுவும் தெலுங்கு தமிழ் அமைச்சர்கள் தெய்வத்தை பற்றி?? உடனே அப்பாடல்களை டெஸ்ட்ராய் செய்து பெருமாளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.


theruvasagan
மே 13, 2025 12:06

திருப்பதி பெருமாள் சம்பந்தப்பட்டது என்பதால் ஆந்திராவில் புகார் தெரிவித்தால் சுளுக்கெடுத்து பட்டி டிங்கரிங் வேலை பார்த்து நன்றாக நிமிர்த்தி அனுப்புவார்கள்.


மணி
மே 13, 2025 05:11

புகார் தீர்வாகாது


SUBBU,MADURAI
மே 13, 2025 08:28

பெயர்தான் ஆர்யா தவிர அவன் ஒரு முஸ்லீம் அவன் புத்தி எப்போதும் அப்படித்தான் இருக்கும் என்பது தெரிந்ததுதான் ஆனால் இந்த சந்தானத்திற்கு என்ன கேடு வந்தது என்று அவன் கூட சேர்ந்து கொண்டு இந்து மதத்தை இழிவு படுத்தி இருக்கான்? ஏற்கனவே நாலடியான் சூர்யாவும் அவன் மனைவி ஜோதிகாவும் இது போன்று இந்து வெறுப்பை காட்டியதால்தான் படம் ஓடாமல் இன்று முச்சந்திக்கு வந்து கதறிக் கொண்டு இருக்கிறார்கள் அது போன்ற நிலைமை காமெடியன் சந்தானத்திற்கும் வரப் போகிறது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை