உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல /  வாக்காளரிடம் இருந்து எஸ்.ஐ.ஆர். படிவம் துாய்மைப்பணியாளர் சேகரித்ததால் சர்ச்சை

 வாக்காளரிடம் இருந்து எஸ்.ஐ.ஆர். படிவம் துாய்மைப்பணியாளர் சேகரித்ததால் சர்ச்சை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பல்லடம்: பல்லடம் அருகே வாக்காளரிடம் இருந்து, எஸ்.ஐ.ஆர். படிவங்களை ஊராட்சி துாய்மைப்பணியாளர்கள் மூலம் சேகரித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே, அனுப்பட்டி கிராமத்தில், வாக்காளர்களிடம் இருந்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்(பி.எல்.ஓ.) பெற வேண்டிய, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தத்துக்கான(எஸ்.ஐ.ஆர்.) படிவங்களை ஊராட்சி துாய்மை பணியாளர்கள் சேகரித்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பொதுமக்கள் கூறியதாவது: பி.எல்.ஓ.க்கள் மூலம் வீடு வீடாக எஸ்.ஐ.ஆர். படிவங்கள் வழங்கப்பட்டன. ஒரு வார கால இடைவெளிக்கு பின், பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் சரிபார்க்கப்பட்டு, அவற்றை பி.எல்.ஓ.க்கள் திரும்ப பெற வேண்டும். ஆனால், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஊராட்சி துாய்மை பணியாளர்கள் வீடு வீடாக சென்று சேகரித்தனர். விண்ணப்பங்களில் ஏதேனும் தவறுகள் இருப்பின், அதை திருத்தம் செய்து பெற வேண்டும் என்பதற்காகவே பி.எல்.ஓ.க்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. துாய்மை பணியாளர்களை வைத்து விண்ணப்பங்களை பெறுவதால், வாக்காளர் பெயர் இடம் பெறாமல் போவதற்கும், போலி வாக்காளர்கள் பட்டியலில் சேரவும் வாய்ப்பு உள்ளது. மாவட்ட தேர்தல் அதிகாரி கவனத்தில் கொண்டு, பணிகளை முறைப்படுத்த வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி