உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / தந்தைக்கு ஹெலிகாப்டர் பரிசு: திமுக - எம்.எல்.ஏ., அசத்தல்

தந்தைக்கு ஹெலிகாப்டர் பரிசு: திமுக - எம்.எல்.ஏ., அசத்தல்

பெரம்பலுார்: மண்ணச்சநல்லுார் தி.மு.க., -- எம்.எல்.ஏ., கதிரவன், 51, தன் தந்தை சீனிவாசனின், 81வது பிறந்த நாளுக்கு ஹெலிகாப்டர் வாங்கி பரிசளித்துள்ளார்.பெரம்பலுார் மாவட்டம், புதுநடுவலுாரை சேர்ந்தவர் கதிரவன். இவர், 2021 முதல் தற்போது வரை திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லுார் தொகுதி தி.மு.க., -- எம்.எல்.ஏ.,வாக உள்ளார். தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில், தன் பெற்றோர் பெயரில், தனலட்சுமி சீனிவாசன் பல்கலை, மருத்துவ கல்லுாரிகள், சர்க்கரை ஆலை, சிட்பண்ட்ஸ் உட்பட, பல்வேறு நிறுவனங்களை நடத்துகிறார்.இவரது அப்பா சீனிவாசனின், 81வது பிறந்த நாள், கடந்த 7ல் பெரம்பலுாரில் உள்ள கல்லுாரி வளாகத்தில், வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. இதில் பங்கேற்ற, 30 ஆயிரம் பேருக்கு அசைவ அறுசுவை உணவு வழங்கப்பட்டது.இந்த விழாவில், கதிரவன், தன் அப்பாவுக்கு, 5 பேர் அமரும் வகையில், 40 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெலிகாப்டரை, பிறந்த நாள் பரிசாக வழங்கினார். இந்த ஹெலிகாப்டரில், சீனிவாசன் தற்போது, சமயபுரம், பழனி, கொடைக்கானல், ஊட்டி, கேரளா போன்ற நகரங்களுக்கு இன்ப சுற்றுலா சென்று வருகிறார். இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

srian
அக் 21, 2026 17:39

தங்களுக்கு கதிரவன் MLA க்கு மக்கள் அன்பாக குடுத்த சிறுநீரகங்களை கொண்டு 1 ஹெலிகாப்டர் என்ன 5 6 விமானங்களும் சேர்த்து வாங்கலாம். தமிழன் மூளையை உபயோகிக்காதவரை கதிரவனுக்கும் TVK போன்ற கட்சிகளுக்கும் கொண்டாட்டம்தான்..


Aarbinms
அக் 21, 2026 15:37

கிட்னி திருட்டில் சம்பந்தபட்ட எம் எல் ஏ.


gopal KRISHNAN
அக் 21, 2026 14:42

கிட்னி திருடினால் ஆடி கார் ல போக முடியாது என்று கூறியுள்ளார் இந்த மலை தற்போது ஹெலிகாப்டர் 40 கோடி யில் வாங்கி உள்ளார்


ம பு மன்னார்சாமி
அக் 21, 2026 10:33

தனலட்சுமி சீனிவாசன் கல்லூரிகளை ஆரம்பித்ததே அந்த பெருசுதான், மகனல்ல. ஆனால் கிட்டினி திருட்டு திமுக MLA ஆரம்பித்தது. அது சகஜம்தானே திருட்டுமுகவுக்கு?


ravi subramanian
அக் 21, 2026 09:23

All money earned from kidney theft.


PVSR
அக் 21, 2026 08:40

ஒரு எம்எல்ஏவுக்கு இவ்வளவு சொத்தா. ஹெலிகாப்டரை எங்கே நிறுத்துவார்கள். கார் மாதிரி வீட்டு வாசலில் நிப்பாட்ட முடியுமா. எலி பேட் உருவாக்க வேண்டும். அதை ஓட்டுபவருக்கு லட்சக்கணக்கில் சம்பளம் கொடுக்க வேண்டும். வானில் பறப்பதற்கு சிவில் எவியேஷன் துறையிலிருந்து முன் அனுமதி பெற வேண்டும்..... இதெல்லாம் திமுக காரனுக்கு மட்டுமே முடியும்.


ராஜா
அக் 21, 2026 08:07

ஊழல் பணத்தில் முதலீடு, ஆட்சியில் அதிகாரம் அதை வைத்து எதிரிகளை அழித்து, அரசு இயந்திரத்தை வளைத்து தன் தொழிலை பலமாக்குவது தான் திமுகவின் வெற்றி ஃபார்முலா.


VENKATASUBRAMANIAN
அக் 21, 2026 08:01

யார் அப்பன் வீட்டு பணம். மக்கள் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் வாழ்கிறார்கள். ஆனால் ன40 கோடி செலவு செய்கிறார். இதில் எத்தனை பேருக்கு வேலை கொடுக்கலாம்.


Sundaran
அக் 21, 2026 07:32

அவருக்கு என்ன நினைத்தால் உல்லாச கப்பலையே பரிசளிக்கலாம்.


Raja Kathir
அக் 21, 2026 06:50

எல்லாம் ஏழைகளின் கிட்னியை திருடி சம்பாரித்தான் திருட்டு திராவிடன்...