உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / போதையில் அரசு பஸ் ஓட்டிய டிரைவர் ஸ்டேரிங் மீது சரிந்து மட்டையானார்; கூச்சலிட்டு விபத்தை தவிர்த்த பயணியர் 

போதையில் அரசு பஸ் ஓட்டிய டிரைவர் ஸ்டேரிங் மீது சரிந்து மட்டையானார்; கூச்சலிட்டு விபத்தை தவிர்த்த பயணியர் 

பொள்ளாச்சி:பொள்ளாச்சியில் இருந்து, சிவகங்கைக்கு அரசு பஸ்சை இயக்கிய டிரைவர் போதையில் தடுமாறி, 'ஸ்டேரிங்' மீது படுத்ததால், பரபரப்பு ஏற்பட்டது.விருதுநகர் போக்குவரத்து கழக பணிமனையை சேர்ந்த (டிஎன் 67 என் 1548) பஸ், நேற்று மதியம், பொள்ளாச்சியில் இருந்து சிவகாசி நோக்கி, 40 பயணிகளுடன் சென்றது. பஸ்சை, விருதுநகரை சேர்ந்த டிரைவர் அருள்மூர்த்தி, 50, ஓட்டினார்.பஸ் டிரைவர், அவ்வப்போது குடிநீர் பாட்டிலில் 'மிக்சிங்' செய்து வைத்திருந்த மதுவை குடித்தார்; அதன்பின், வாயில் புகையிலை பொருட்களை வைத்துக்கொண்டு தடுமாறியபடி பஸ்சை ஓட்டியுள்ளார்.பஸ்சில் முன் சீட்டில் அமர்ந்திருந்த பயணியர், இதை கவனித்து சக பயணியரிடம் தெரிவித்துள்ளனர். அதிர்ச்சியடைந்த பயணியர், பஸ்சை நிறுத்துமாறு கூச்சலிடனர். ஆனால், நிதானமில்லாத டிரைவர் பஸ்சை நிறுத்தவில்லை. போதையில் பஸ்சை கட்டுப்பாட்டு இல்லாமல் ஓட்டியுள்ளார்.இதனால், ஆத்திரமடைந்த பயணியர், டிரைவர் சீட் அருகே சென்று, பஸ்சை நிறுத்துமாறு ஆவேசமாக சப்தமிட்டபின், கோமங்கலம்புதுார் 'டோல்கேட்' பகுதியில் பஸ்சை நிறுத்தி, 'ஸ்டேரங்' மீது அப்படியே படுத்து விட்டார். அதன்பின், பஸ் நிறுத்தி சுதாரித்து, பின் சீட்டில் படுத்து விட்டார்.அதன்பின், விருதுநகரை சேர்ந்த கண்டக்டர் வெங்கடேஷ், 55, பஸ் பயணியரை, அவ்வழியாக வந்த அரசு பஸ்சில் மாற்றி அனுப்பி விட்டு, விருதுநகர் கிளைக்கு தகவல் தெரிவித்தார்.இது குறித்து, தகவல் அறிந்த கோமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்தனர். டிரைவர் மீது குடிபோதையில் வாகனம் இயக்கியதாக வழக்குப்பதிவு செய்து, கோலார்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.போலீசார் கூறுகையில், 'பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டில் மது குடித்த டிரைவர் அருள்மூர்த்தி, மீதம் உள்ள மதுவை, பாட்டிலில் கலந்து வைத்துள்ளார். மதியம், 1:25 மணிக்கு பஸ் ஸ்டாண்டில் இருந்து பஸ்சை எடுத்துள்ளார்.அவரது நடவடிக்கையில் மாற்றம் தெரிந்ததால், சந்தேகமடைந்த பயணியர் பஸ்சை நிறுத்தியுள்ளனர். இது குறித்து விசாரிக்கப்படுகிறது,' என்றனர்.கோவையில் இருந்து சென்ற அரசு பஸ்சில் இருந்து, குழந்தை தவறி விழுந்த சம்பவம் ஓய்வதற்குள், இந்த சம்பவம் நடந்துள்ளது பயணியரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

kumar
மே 17, 2025 06:44

மக்களே திருந்துங்கள்.எவனுக்கும் ஓட்டுப் போடக்கூடாது என முடிவெடுங்கள்


ஆரூர் ரங்
மே 15, 2025 15:25

பத்து ரூபாய் எக்ஸ்ட்ராவா கொடுத்து வாங்கின சரக்கை வீணாக்கணுமா?.


theruvasagan
மே 15, 2025 15:00

கொம்பு குளம்பு வால் உள்ள எவனாலேயும் குறைசொல்ல முடியாத நல்லாட்சியை 500க்கும் 1000க்கும் ஆசைப்பட்டு தேர்ந்தெடுத்த அதிபுத்திசாலிகளான வாக்காளர்களுக்கு ஜே


பாரத புதல்வன் தமிழக குன்றியம்
மே 15, 2025 07:45

எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆட்சி....அதுக்கு பணியின் போதே போதையில் மட்டையான எங்கள் அரசு பஸ் ஓட்டுநரே சாட்சி.... பாருங்கள் மக்களே எங்கள் தி மு க ஆட்சியின் கண் கொள்ளா காட்சி.....


D.Ambujavalli
மே 15, 2025 03:34

இதற்கெல்லாம் 'அதிர்ச்சியா'? டாஸ்மாக் விற்பனை விண்ணை எட்டவேண்டுமென்று ஒருபக்கம் அதிகாரிகள், கடைகளுக்கு அழுத்தம்.' ஊக்க மது ' விற்பனைக்கு ஊக்கமளித்து பேருந்து நிலையத்தில் குடித்து, பார்சலும் எடுத்துவந்து விற்பனையை அதிகரித்த ட்ரைவர் மேல் மட்டும் வழக்கா? என்ன அநியாயம்? 40 பயணியர் செத்தால் என்ன , மது விற்பனை எகிறுகிற சாதனைதானே முக்கியம்


முக்கிய வீடியோ